15-1-2010 .அன்று சுடர்வம்சம் தொண்டு நிறுவனத்தின்
5.ஆம் ஆண்டுவிழாவும். திருச்சி சையது அண்ணனின் அன்பைத்தேடி சிறுகதை புத்தக வெளியீட்டுவிழாவும் நடந்தது.
சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது அண்ணன் எழுதிய அன்பைத் தேடி என்கிற சிறுகதைகளின் தொகுப்பினை இலங்கை தமிழ்ச்சங்க துணைத்தலைவர் காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை தமிழக அரசின் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், வானலை வளர்தமிழ் தமிழ்தேர் நிர்வாகிகள். மற்றும் அமீரக தமிழ்கவிஞர் பேரவைத்தலைவர் திரு அப்துல் கதீம் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
சிறுகுழந்தைகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சியும்.நகைச்சுவை நிகழ்ச்சியும் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இளம் வயதில் அறிவியல் துறையில் சாதனை மற்றும் ஆங்கில நாவல் எழுதும் ஆர்வத்தைப் பாராட்டி கே. சாய் கோகுலுக்கு இளம் சுடர் விருதும், பன்முகத் திறனுக்காக நிவேதிதாவுக்கு கலைச் சுடர் விருதும், தமிழ் இலக்கியத்துறை சேவைக்காக ஆசிஃப் மீரானுக்கு இலக்கியச் சுடர் விருதும், கல்வி மற்றும் சமூக சேவைக்காக சிவஸ்டார் கோவிந்தராஜுக்கு சமுதாயத் சுடர் விருதும், தமிழ் சேவைக்காக காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தினுக்கு சுடர் ஒலி விருதும் புத்தகவெளியீடும் நடைப்பெற்றது. அப்புத்தக வெளியீட்டில் நானும் அவர்களை வாழ்த்தும்விதமாக இருகவிதைகளை வாசித்தேன்
சுடர்வம்சத்தின் தலைவர் திரு ரகுராஜ் அவர்கள் போனில் அழைப்புவிடுத்து நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளும்படியும் பேசும்படியும் கேட்டுகொண்டார்கள்.
நமக்கு என்ன பேசவரும் இருந்தாலும்
பேசனும் எனநினைத்தபோது
பேசுவதை அப்படியே கவிதைவரிகளாக மாற்றி
வாசித்துவிடலாமே என இருகவிதைகளை எழுதிச்சென்றேன்.
சுடர்வம்சத்தை பற்றி சொல்லவேண்டும்.
சுடர்வம்சமென்பது ஒரு தொண்டுநிறுவனம்.
அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் எதிர்காலத்திற்க்கு
இவர்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
ஒருமாணவனை உயர்தினால் ஒருகுடும்பமே உயரும்.என்ற நற்பணியில் செயல்படுகிறார்கள்.
இதுமற்றுமின்றி எதிர்வரும்காலத்தில் இன்னும் பல
நல்லதிட்டங்களை வழிவகுத்துவருகிறார்கள்.
சுடர்வம்சம்
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி,
எதிகாலத்தில் மாணவர்கள் நாட்டுப்பற்று,
மொழிப்பற்றுடன் மனிதநேயம்
உள்ளவர்களாக உருவாக்குவோம்
என்பதே இவர்களின் செயல்வழி.
மொத்தத்தில் உதவிகள் செய்வதின்மூலம் உயர்ந்து நிற்கிறார்கள்.
அப்புறம்
அன்பைத்தேடி சிறுகதையை வெளியிட்ட திருச்சி சையது அண்ணனைப்பற்றியும் சொல்லனும்
அவர்கள் ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர்
நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள்
குமுதம் பாக்யா. விகடன். தேவி போன்ற பத்திரிக்கைகளிலும் இவர்களின் சிறுகதைகள் வெளிவந்துள்ளது.
இப்போதுதான் முதல்முதலில் தன்னுடைய சொந்தசிலவில்
இந்த அன்பைத்தேடி என்ற சிறுகதையை அச்சிட்டு வெளியிட்டு,
அதில்வரும் விற்பனையின் மூலம் வரும் தொகையைஅப்படியே சுடர்வம்சம் நிறுவனத்திற்கே வழங்கிவிட்டார்கள்.
எத்தனைபேருக்கு இந்தமனம் இருக்கும்.இவர்களைப்போன்றவர்களும் சுடர்வம்சம்போன்றவர்களும்
இன்னும் இவ்வுலகில் இதேபோன்று இன்னும் பலபேர் வாழ்பவர்களும் இருப்பதால்தான்
இன்னும் இப்பிரபஞ்சம் ஈரபத்தத்துடனே இருக்கிறது.
அவர்களுக்காக நான்கவிதையெழுதியதில் வாசித்ததில் பெருமைப்படுகிறேன்.
இதோ நான் எழுதிவாசித்த கவிதை
இது சுடர்வம்சத்திற்காக
புனிதப்பணி
ஈகை குணமும்
ஈர்த்த அன்பும்
இருப்பதினால்
இன்னும்
இப்பிரபஞ்சம்
ஈரப்பதத்துடன்
இனிமையாய்
அதை
உணர்த்தும் விதமாய்
ஆங்காங்கே
உன்னதமாய்
உதவும் கரங்களும்
உள்ளன்புகளும்
பல கொண்ட
சுடர்வம்சமென்னும்
தொண்டு நிறுவனம்
வாழ்க்கைக்கு
உதவுவதைவிட
வாழ
வழிகாட்டித் தருதலே
உயர்விலும் உயர்வு
தம் வம்சங்கள்
நிறைவடையக்காணும்
இவ்வுலகில்
பிறரின் வம்சங்களும்
நிறைவடைய
சுடர்விட்டு
சூரிய வெளிச்சமாய்
சுற்றிப் பரவும்
அறிவொளியை
அள்ளிவழங்கும்
ஆன்மாக்கள்
சுடர்வம்சத்தின்
நல்உள்ளங்கள்
கல்விக்
கதவுதிறந்தால்
கஷ்டதின் வழியை
சிறைப்படுத்தும்
அறிவுக்
கதவுதிறந்தால்
அறியாமையின்
இருளை
அகற்றிவிடுமென்ற
உன்னத பணியை
உயர்வாய் செய்யும்
சுடர்வம்சம்-நல்
பணிகளுக்கு - ஓர்
உயரிய உதாரணம்
சுற்றும் பூமியெங்கும்
சூரிய ஓளி
பரவுவதைப்போல்
சுடர்வம்சத்தின்
உதவித் தொண்டொளி
சுதந்திரக் காற்றைப்போல்
சுற்றிப்பரவட்டும்
மென்மேலும்
மேன்மைப்பெற்று
சிறப்பாய்
செயல்பட
அந்த இறைவனின்
அருளும் நிறைவும்
என்றென்றும்
அதனருகிலேயே
இருக்கட்டும்..
இது திருச்சி சையது அண்ணனுக்காக
எழுதி வாசித்தது.
வெற்றிமேல் வெற்றி பெறு
என் உடன் பிறவா
சகோதரா!
உமை வாழ்த்தி
ஒரு கவி
பலர் முன்னிலையில்
வாசிக்கும்
உம் சகோதரி
பொன்தேடி புகழ்தேடி
அருள்தேடி பொருள்தேடி
வசதிதேடி வாய்ப்புத்தேடி
அலையும் காலத்திலும்
அதையெல்லாம் தாண்டி
அன்பைத்தேடியும்
ஆன்மாக்கள் அலைவதும்
மறுக்கமுடியா தென்ற
உண்மையை
அழகாய் தேர்ந்தெடுத்து
அற்புத வரிகள் கொடுத்து
அதையின்று
வெளியிடுகிறாய்
அன்பைத்தேடி
என்ற தலைப்பு
அது
ஆன்மாக்களை
கவரும் சிறப்பு
பதிமூன்று
கதை கருக்கள்
அதில்
பதிந்துநிற்கும் உம்
முத்திரைகள்
அன்பைத்தேடி
படிப்பவர்களுக்கு
அகம் மகிழ்வைத் தரும்
இச்சிறுகதைகள்
சின்னஞ் சிறிய
சிறுகதைகள்
அதில்
சிந்தனைகள் பல
வகைகள்
புரிந்துகொள்ளும்
பலருக்கிது
அழகிய
படிப்பினைகள்
பல
சிறப்புக்குரியவர்களின்
பாராட்டுகள்
இப்புத்தகத்தின்
இன்றியமையா
பெரும்
பாக்கியங்கள்
கதைக் களத்தின்
கற்பனைகள்
கதாசிரியனே
உனக்கு என்
கைத்தட்டல்கள்!
இன்னும் இன்னும்
இலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு
இவ்வுலகத்திலும்
சிறப்பு பெற்று
ஈருகலத்திலும்
வெற்றி பெற
இருகரம்யேந்தி
இறைவனிடம்
வேண்டுபவள்
என்றென்றும்
உம்
சகோதரியானவள்...
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மனம்நிறைவடைகிறது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதால் மனிதயினம் மகத்துவம் பெரும். நாமும் நம்மாளான உதவிகளை செய்து ஈருலகத்திகற்கும் நன்மைகளைதேடிக் குவிப்போமாக!!
அன்புடன் மலிக்கா
சுடர்வம்சத்தின் மிகச்சிறந்த சேவைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசகோதரர் திருச்சி செய்யதுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியின் சில செய்திகளும், புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் உலகத்தமிழர் பற்றிய செய்தியில் பார்த்தேன். ரொம்ப சந்தோசம்.
கவிதை இரண்டுமே நல்லா இருக்கு மலிக்கா. பாராட்டுக்கள்.
//ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதால் மனிதயினம் மகத்துவம் பெரும்.//
பதிலளிநீக்குஉண்மைதான், வாழ்த்துக்கள்.
கவிதை அழகு. நல்ல பகிர்வு. :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா , கவிதை ரொம்ப நல்லா இருக்கு .மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குடெம்பிளேட் ரொம்ப நல்லா இருக்கு என்னோட மெயில் கிடைத்ததா? குழந்தைகள், அண்ணன் நலமா ,விசாரித்ததாக சொல்லவும்
பதிலளிநீக்கு//இன்னும் இன்னும்
பதிலளிநீக்குஇலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு//
அழகான கவிதை வரிகளால் உள்ளப் பூர்வமான வாழ்த்துகள் கண்டேன் ஒரு படைப்பாளியை படைப்பாளி வாழ்த்துவதே பெருமை அந்த வகையில் உங்கள் வரிகள் அனைத்தும் அருமை சகோதரி.
//சுற்றும் பூமியெங்கும்
பதிலளிநீக்குசூரிய ஓளி
பரவுவதைப்போல்
சுடர்வம்சத்தின்
உதவித் தொண்டொளி
சுதந்திரக் காற்றைப்போல்
சுற்றிப்பரவட்டும்//
//இன்னும் இன்னும்
இலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு//
அழகான கவிதை வரிகளால் உளபூர்வமாக அமைந்திருந்தது உங்கள் வாழ்த்துக் கவிதை, ஒரு படைப்பாளியை ஒரு படைப்பாளி வாழ்த்துவதே பெருமை அந்த வகையில் உங்கள் வரிகள் அனைத்தும் அருமை சகோதரி.
கவிதாயினி சகோதரி மலிக்கா......
பதிலளிநீக்குவஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்
15.1.2010 அன்று மேடை மேல் நின்று
வெற்றி மேல் வெற்றி பெறு
புனிதப்பணி எனும்
இரு கவிதைகள் வாசித்தார்
திருச்சி சையதையும்
சுடர்வம்சத்தையும் ஆசித்தார்
இவர் பேனாவும் பேசும் - இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்
பேதையைக் கவிதை என்பர் இலக்கியத்தில்
கவிதையே கவிதை செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள் எல்லாம் பொன்னாகும்.
திரைக்குப் பின்னால் கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு கவிதை படிப்பார்
சமூக அவலங்களை ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார் – மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும் முத்திரையைப் பதிப்பார்
வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு -கமால்
Assalamu Alaikkum Warahmathullah.
பதிலளிநீக்குMalika’s both kavidas are very nice.
With best regards
‘Abu Mymoona’
பாராட்டுக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது அனைவரும் கவிஞர் ஆவதைக் காண முடிகிறது.
பதிலளிநீக்குபொருத்தமான நேரத்தில் பொருத்தமான பாராட்டு, கமால் அவர்களே!
பதிலளிநீக்குஷேக்
மகிழ்ச்சி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா!!
பிடித்திருந்தது.
பதிலளிநீக்குமிகுந்த ஆத்மார்த்தமான கவிதைகள் மலிக்கா!
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசுடர்வம்சத்தின்
பதிலளிநீக்குசேவைக்கு பாராட்டுக்கள்.
Rajakamal
பதிலளிநீக்கு28 ஜனவரி, 2010 3:36 pm //சுற்றும் பூமியெங்கும்
சூரிய ஓளி
பரவுவதைப்போல்
சுடர்வம்சத்தின்
உதவித் தொண்டொளி
சுதந்திரக் காற்றைப்போல்
சுற்றிப்பரவட்டும்//
//இன்னும் இன்னும்
இலக்கியத்தில்
சிகரத்தின் எல்லை தொடு
சிறந்த படைப்பாளனாய்
வெற்றிமேல் வெற்றி பெறு//
அழகான கவிதை வரிகளால் உளபூர்வமாக அமைந்திருந்தது உங்கள் வாழ்த்துக் கவிதை, ஒரு படைப்பாளியை ஒரு படைப்பாளி வாழ்த்துவதே பெருமை அந்த வகையில் உங்கள் வரிகள் அனைத்தும் அருமை சகோதரி.
அருமை!
பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஒரு படைப்பாளியை ஒரு படைப்பாளி வாழ்த்துவதே பெருமை!
பதிலளிநீக்குCorrect Raja!
மகிழ்ச்சியளிக்கிறது மலிக்கா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்குஇன்னும் இன்னும் நிறைய சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் மலிக்கா மேடம்..
பதிலளிநீக்குவாழ்த்துக் கவிதைமகிழ்ச்சியளிக்கிறது மலிக்கா
பதிலளிநீக்கு/பாராட்டுக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது அனைவரும் கவிஞர் ஆவதைக் காண முடிகிறது../
நிஜம்தான்
பொன்தேடி புகழ்தேடி
பதிலளிநீக்குஅருள்தேடி பொருள்தேடி
வசதிதேடி வாய்ப்புத்தேடி
அலையும் காலத்திலும்.
அழகான அர்த்தமுள்ள வரிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி.
அபுல் பசர்
பதிலளிநீக்கு28 ஜனவரி, 2010 8:07 pm பொன்தேடி புகழ்தேடி
அருள்தேடி பொருள்தேடி
வசதிதேடி வாய்ப்புத்தேடி
அலையும் காலத்திலும்.
அழகான அர்த்தமுள்ள வரிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி.
- அர்த்தமுள்ள விமர்சனம் அபுல் பசர்!
Your kavithai is very powerful!
பதிலளிநீக்குRamu
பாராட்டுகளை கொடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்! சந்தோஷமா இருக்குங்க.
பதிலளிநீக்குசுடர் வம்சத்ஹ்டின் சேவை பாராட்டுக்குரியது மட்டுமன்றி நன்றிக்கும் உரியது. மலிக்கா உங்க கவிதையை பத்தி சொல்லனுமா என்ன? பின்னிருக்கீங்க
பதிலளிநீக்குமென்மேலும் பலவெற்றிகள்கான இந்த முகம்தெரியா அன்னையின் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு/தம் வம்சங்கள்
பதிலளிநீக்குநிறைவடையக்காணும்
இவ்வுலகில்
பிறரின் வம்சங்களும்
நிறைவடைய/
தமிழ்குடும்பத்தில் தோழியானவளே!
உன்னைக்கண்டு நான் வியந்துபோகிறேன்! இந்தியாவந்ததும்
உனைக்கான ஓடோடி வருவேன்.
என் கணவர் குழந்தைகள் உனைப்பார்க்க ஆவலாய் உள்ளார்கள் அதைவிட நானும்.. என்றுமே உந்தோழியாய் இருக்க ஆவல்
ரபீக்கா ஷாஜர் சென்னை
வாழ்த்த வார்தைகள் தேடுகிறேன் தோழியே! தாஜ்மா நிஷா பஹ்ரைன்
பதிலளிநீக்குவாழ்த்த வார்தைகள் தேடுகிறேன் தோழியே! தாஜ்மா நிஷா பஹ்ரைன்
பதிலளிநீக்குபாராட்டுக்குள் சகோதரி....
பதிலளிநீக்குநல்ல மனம் கொண்டவர்களின் முயற்சிகளை பாராட்டும் உங்கள் நல்ல மனம் வாழ்க!
பதிலளிநீக்குஇளம் வயதில் அறிவியல் துறையில் சாதனை மற்றும் ஆங்கில நாவல் எழுதும் ஆர்வத்தைப் பாராட்டி கே. சாய் கோகுலுக்கு இளம் சுடர் விருதும், பன்முகத் திறனுக்காக நிவேதிதாவுக்கு கலைச் சுடர் விருதும், தமிழ் இலக்கியத்துறை சேவைக்காக ஆசிஃப் மீரானுக்கு இலக்கியச் சுடர் விருதும், கல்வி மற்றும் சமூக சேவைக்காக சிவஸ்டார் கோவிந்தராஜுக்கு சமுதாயத் சுடர் விருதும், தமிழ் சேவைக்காக காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தினுக்கு சுடர் ஒலி விருதும் புத்தகவெளியீடும் நடைப்பெற்றது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
எத்தனைபேருக்கு இந்தமனம் இருக்கும்.இவர்களைப்போன்றவர்களும் சுடர்வம்சம்போன்றவர்களும்
பதிலளிநீக்குஇன்னும் இவ்வுலகில் இதேபோன்று இன்னும் பலபேர் வாழ்பவர்களும் இருப்பதால்தான்
இன்னும் இப்பிரபஞ்சம் ஈரபத்தத்துடனே இருக்கிறது.
அவர்களுக்காக நான்கவிதையெழுதியதில் வாசித்ததில் பெருமைப்படுகிறேன்.
- உங்களை நினைத்து
பெருமைப்படுகிறேன்.
திருச்சி சையது நல்ல இலக்கியவாதி என தெரிந்து மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதிருச்சி சையது நல்ல இலக்கியவாதி என தெரிந்து மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதிருச்சி சையது நல்ல இலக்கியவாதி என தெரிந்து மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஇதுபோன்ற நிகழ்ச்சிகளால் மனம்நிறைவடைகிறது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதால் மனிதயினம் மகத்துவம் பெரும். நாமும் நம்மாளான உதவிகளை செய்து ஈருலகத்திகற்கும் நன்மைகளைதேடிக் குவிப்போமாக!!
பதிலளிநீக்கு..................................
தகவலுக்கு நன்றி சகோதரி மலிக்கா!
நான் இந்த புத்தகத்தை வாங்க விருப்புகின்றேன். சுடர் வம்சம் முகவரி தர முடியுமா?
...................................
ஈகை குணமும்
பதிலளிநீக்குஈர்த்த அன்பும்
இருப்பதினால்
இன்னும்
இப்பிரபஞ்சம்
ஈரப்பதத்துடன்
இனிமையாய்!
நல்ல கவிதை கவிதை அம்மா!
நல்ல கவிதை அம்மா!
பதிலளிநீக்குகவிதாயினி சகோதரி மலிக்கா......
பதிலளிநீக்குவஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்
15.1.2010 அன்று மேடை மேல் நின்று
வெற்றி மேல் வெற்றி பெறு
புனிதப்பணி எனும்
இரு கவிதைகள் வாசித்தார்
திருச்சி சையதையும்
சுடர்வம்சத்தையும் ஆசித்தார்
இவர் பேனாவும் பேசும் - இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்
பேதையைக் கவிதை என்பர் இலக்கியத்தில்
கவிதையே கவிதை செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள் எல்லாம் பொன்னாகும்.
திரைக்குப் பின்னால் கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு கவிதை படிப்பார்
சமூக அவலங்களை ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார் – மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும் முத்திரையைப் பதிப்பார்
வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு -கமால்
கவிஞர் மலிக்காவை பாராட்டி கவிஞர் கமால் அவர்களின் கவிதை பிரமாதம்!
மலிக்கா அவர்கள் ஒரு சிறந்த மனுஷி என்று நிருபித்துவிட்டார்!
பதிலளிநீக்குபாலா
மலிக்காவிற்க்கு
பதிலளிநீக்குஎங்கள்
கைத்தட்டல்கள்!
ரகுவையும் சையதுவையும் மனமார பாராட்ட நினைக்கிறேன் ...
பதிலளிநீக்குமலிக்கா உன்னிடம் உள்ள நல்ல மனசுக்கு தலை வணங்குகிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துவதற்க்கு நல்ல மனசு இருக்கணும். அது உன்கிட்ட நிரய்ய இருக்குடி அம்மா!
பதிலளிநீக்குஉன் தந்தை வயதுடைய...
ராமலிங்கம்
உங்கள் நல்ல மனசுக்கு ஏத்தமாதிரி உங்களுக்கு கணவரும் குழந்தைகளும் அண்ணனும் அமைந்துள்ளார்கள்! நிறைய சாதனைகள் படைக்க எம் பிரார்த்தனைகள்!
பதிலளிநீக்குஅன்பாலயன்
விழாவில் பங்கெடுத்து சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள். மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாழவழி சொல்லிக்குடுத்தலே நன்று.
பதிலளிநீக்குஉதவிடுவோம்.
வாழ்த்துகள்.
பல வருஷங்களுக்குமுன் குங்குமம் வார இதழில் படித்த திருச்சி சையதுவின் குடும்பம் சிறுகதை இன்னும் மனசை விட்டு அகலவில்லை.
பதிலளிநீக்குஇவ்வுலகத்திலும்
பதிலளிநீக்குசிறப்பு பெற்று
ஈருலகத்திலும்
வெற்றி பெற
இருகரம்யேந்தி
இறைவனிடம்
வேண்டுபவள்
- சுத்தமான உள்ளத்துடன் செய்யும் பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டு.
- சுத்தமான உள்ளத்துடன் செய்யும் பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டு.
நான் பிரபல கதாசிரியர் ராஜேஸ்குமார் அவர்களின் ரசிகன். அவர் தனது நூறாவது சிறப்பிதழில் திருச்சி சையது கல்லூரி இதழுக்காக தன்னிடம் எடுத்த பேட்டியை தனக்கு பிடித்த பேட்டி என்று கூறியதை இந்த சபைதனில் பதிவு செய்கிறேன்.
பதிலளிநீக்குசம்பத்
திருச்சி ஜமால் முஹமது கல்லூரி என்ற நந்தவனத்தில் பூத்த பாரிஜாத மலர் திருச்சி சையது!
பதிலளிநீக்குநிஹ்மத்துல்லா
முன்னால் ஜமால் முஹமது கல்லூரி மாணவர்.
அன்பு மகளே,
பதிலளிநீக்குஅன்புடன் கவிதையை வடித்த அழகு,
அவையினில் அதனைப் படித்த அழகு,
அன்பைக் கொண்டே முடித்த அழகு,
அனைத்துமே எனக்குப் பிடித்த அழகு.
ஷேக் சிந்தா மதார்
என்னை வாழ்த்தி, என் படைபுகளுக்கு கருத்துக்களும் ஊக்கமும் தரும்,
பதிலளிநீக்குஎன் அன்புக்குறிய பாசமிகுந்த அத்தனை இதயங்களுக்கும்
என் மனமார்ந்த நெகிழ்வும்.
நன்றியும்.நன்றி நன்றி நன்றி...
இன்னும் இன்னும் நல்லபடைப்புகள்தர இறைவனின் அருளும் தாங்கள் அனைவரின் ஆசியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கருத்துக்களும் நிச்சயம் வேண்டும் .
அன்போடு என்றுமே தாங்களனைவரின் ஆதரவும் எனக்குத்தாருங்கள்
லட்சுமி கூறியது...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி சகோதரி மலிக்கா!
நான் இந்த புத்தகத்தை வாங்க விருப்புகின்றேன். சுடர் வம்சம் முகவரி தர முடியுமா?/
நிச்சியம் தருகிறேன்
சுடர்வம்சத்தின் தலைவர் திரு ரகுராஜ்
அவர்களின் தொலைபேசி
எண்..
0502164375..
இமெயில்..
raagzee_05@yahoo.com
தொடர்புகொள்ளுங்கள்..