நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

குற்றவாளியா? நிரபராதியா?
ஆணில் பலர் ஆதிக்கவாதி!
அவன் பேச்சை மட்டுமே!
கேட்டாகவேண்டுமென
கட்டளையிடும் சர்வதிகாரி!

தனக்காக எதையும்
வளைத்து ஒடிக்கும் தன்னலவாதி!
தேவைப்பட்டால் தயங்காது
பெண்மீது குற்றஞ்சுமத்தி
தப்பிக்கும் சுயநலவாதி!

பெண்ணை தன்கட்டுப்பாட்டுக்குள்
பொத்தி வைப்பதாய் நினைத்துக்கொண்டு
புதைக்காமல் புதைத்து வதைக்கும்
பொல்லாத மனங்கொண்ட
சந்தர்ப்பவாதி!

தன் நடத்தை பிசகலாம்
தான் வழி தவறலாம்
அதையெல்லாம் பொருத்துக்கொண்டு
தன்னோடு வாழவேண்டுமென நினைக்கும்
அதிபுத்திசாலி!

தீயைபோல் தீண்டி சீண்டும்
தீய சொற்களை கொண்டு
கொண்டவளை கொடுமைப்படுத்தும்
தீயகுணங்களைக்கொண்ட
தீவிரவாதி!

தனக்குமட்டுமே அனைத்தும் அறியும்
தன்னை நம்பிவந்தவள்
மடமையின் கூடாரமென
தன்னையே உயர்த்திக்கொள்ளும்
தற்பெருமைவாதி!

தன்னைவிட பெண்
தாழ்ந்தவளென்றும்- என்றும்
தனக்கே அடிமையென்றும்
தரைக்குறைவாய் நடத்தும்
தரிகெட்டவாதி!

எந்நிலையிலும் எச்சூழலிலும்
தன்னை விட்டுக்கொடுக்காது
தன் மார்தட்டியே வாழும்
நீதியறியா நீதிபதி
குற்றவாளியான நிரபராதி!

அகிலமெங்கும்
பரவி விரவிக் கிடக்கிறதோ
இதுபோன்ற பலவியாதிகள்

இத்தனை 
வியாதிகளையும் தாங்கிய
பயங்கரவாதியா? ஆண்கள்.. 

டிஸ்கி// அண்ணாத்தேக்களா! சகோக்களா! இதெல்லாம் நிஜமா? உங்களுக்கு இப்படியெல்லாம் இருக்கா? பாவம் மக்கா பெண்மக்க நேற்றுமட்டும் மூன்று பெண்களின் நிலைகள் இதுபோல் கேட்டறிந்து மனம் சங்கடத்திலும் சங்கடம். இதெல்லாம் எங்கேபோய் கேட்டிக” எல்லாம் பாஸ்போட் ஆபீஸ் வாசலில் வெட்டியா 6 -7  மணிநேரம் இருக்கும்படியாச்சி அதில் பல பல சுவாரஸ்சியங்கள் சொல்லிடங்காச் சோகங்கள். என நேரம்போனதே தெரியலை.. ஹூம் இப்படியெல்லாம்கூட இருப்பாங்களா?  எல்லாம் உங்க வர்கம் பண்ணுறதுதானே! அதேன் எழுதிட்டேன்.சரி சரி அதுக்காக என்னை வெஞ்சிடாதிங்க!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது