நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேண்டாம் இனி வரவுகள்.. ம்மா என்றால்
அகிலமும் போற்றுகிறது
அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்
எங்களால் மட்டும் முடியவில்லையே
உங்களை நேசிக்க!
உங்களோடு சுவாசிக்க!

ந்து நிமிடம்
யோசிக்கமறந்த உங்களால்
அசிங்கமாகிப் போனேமே
அனாதையாக ஆனோமே

ள்ளத்தனம் செய்துவிட்டு
கருவில் கலைக்க வழியின்றி
பத்துமாதம் எப்போது கழியுமென
பயந்துப் பதுங்கிச் சுமந்து
பாசமே இல்லாமல்
பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே!
பச்சோந்தியாக ஆனவர்களே!

தாறித்தனம் செய்துவிட்டு
உயிருள்ள எங்களை
உயிரற்ற ஜடமாக்கி
உதறிவிட்டுபோவது நீங்கள்
உம்போன்றோர்களின் செயல்களால்
ஊரடிபடுவதும் உருக்குலைவதும்
ஒன்றுமறியாத எம்போன்ற
உள்ளம் ஊமையான பிஞ்சுகள்

கூடிக் கூடி குலாவி
கும்மாளமிட்ட நீங்கள்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
கூளமாக்கி எங்களை
குப்பைத் தொட்டியை நிரப்பிய
கொடும்பாவிகள்

ரக்கமற்ற அரக்கர்களாய்
இதயமில்லாது போனது ஏனோ?
இச்சையின்மேல் இன்பம்கொண்டு
எங்களை எச்சிலையாக்கிடத்தானோ

சூழ்நிலைகள் காரணமென
சூத்திரம் செய்யாதீர்
சூடுபட்ட ரணங்களோடு-நீங்கள்
சுமந்த சிசுக்களை
சித்ரவதை செய்து
சிதைத்துக் கொல்லாதீர்

ங்களோடு முடியட்டுமே!
அனாதைகளென்ற வரவுகள்
எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே
எங்களை ஆரத்தழுவும் அம்மாக்கள்...

தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது