நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதை எழுதுவது எப்படி?இக்கவிதையில் எதுவும் குறையிருக்கா? ஏன் கேட்கிறேன் என்றால் அதுக்கும் காரணமிருக்கு.
கவிதைகள் கட்டுரைகள் வெளியிடும்  ஒருபிரபல .காமிற்கு எல்லாரும் அனுப்புகிறார்களே நாமும் அனுப்புவோம் என கவிதைகள் பல அனுப்பியுள்ளேன். அத்தளத்தில் சிலகவிதைகள் வெளியாகி உள்ளது.
அதில் 3.4 கவிதைகள் ”நாட் செலக்டட்” என திரும்பி வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஏன் என தெரிந்துகொள்ளலாமா என மெயில் அனுப்பினேன். பதில் வந்தது மிகவும் ஒன்று பதில் வந்தது  ”பழைய நடைக் கவிதையிது” என
என்னடாயிது கவிதை நடையில் பழையது இல்லாமலா புதியது தோன்றின என நினைத்துக்கொண்டு. சில நாட்கள் கழித்து அந்த கவிதை வேறு தளங்களுக்கு அனுப்பினேன் அங்கே அவை வெளியானது.அந்த கவிதைகள் இவைகள்தான் அடக்கம்      அத்தனைக்கும் ஆமெனில். தற்போது இங்கே வெளியிடப்பட்டிருக்கும் காலம்யாவும்..கவிதையும் சேர்த்து.

முதல் தடவை ரிஜெக்ட் செய்ததும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அதேயிடத்திற்கு அனுப்பினேன். ஏன் தெரியுமா? நமது எழுதுக்கள் சரியில்லையா?  அல்லது எண்ணங்களில் எழும் வரிகள் சரியில்லையா? அல்லது நம்முடையது கவிதையே இல்லையா? என்ற எண்ணம் எழுந்ததாலும். என்னமாதரியான கவிதைகளை செலக்ட் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளவும்தான்..

இக்கவிதை அனுப்பியபோதும்  அதே பதில் வந்ததும் மீண்டும் மெயில் எழுதினேன்.
//sorry not selected//என்பது ஏனென தெரிந்துகொள்ளலாமா?
கவிதையை எப்படி எதிர்பார்கிறீர்கள். இங்கிலிஸ் கலந்து எழுதும் கவிதைகளையா? அல்லது வரிகளை உடைத்துபோட்டும் எழுதும் கவிதைகளையா? விபரம் தந்தால் அதற்கு தகுந்தார்போல் எழுதலாமில்லையா?
விபரம் தருவீர்களா?

எனக்கேட்டு எழுதினேன் இதுவரை பதில்லை.

நான் யாரையும் குறைசொல்லவில்லை. இங்கிலீஸை தமிழாக்கி கலந்த கவிதைகளுக்கு உள்ள மதிப்பு, தமிழைமட்டும் இழைத்து எழும் கவிதைகளுக்கு கிடைப்பதில்லையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. [நான் எழுதுவதெல்லாம் கவிதையென சொல்லவில்லை இருந்தபோது கவிதையென நினைத்து எழுதுவதால் இப்படி தோன்றியிருக்கலாமோ] நிறையபேர்களின் ஆதங்கம் இதுதான். அதைதான் நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்தால் எப்படி எழுதினால் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது ஏற்றுக்கொள்வாகள் என தெரிந்துகொள்ளலாமில்லையா?
சொல்லுவீங்கதானே!

அப்படியே கவிதை எழுதுவது எப்படி?ன்னு யாராவது சொல்லிதந்தால் அந்த வகுப்பில் முதல் மாணவியாக நான் சேர்ந்துகொள்வேன்..
அட்ரஸ் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கிலீஸில் கேட்டாதான் சொல்லுவீங்கன்னுதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

35 கருத்துகள்:

 1. அடபோங்க மலிக்கா உங்களைப்பற்றி உங்களுக்கென்ன தெரியும். கணினியில் எங்கு நோக்கினும் உங்களைபற்றியே அதாவது உங்கள் கவிதைபற்றியேயிருக்கையில் இதுக்கெல்லாம் போய் வருதப்பட்டுகொண்டு. இதோ இங்கு போய் பாருங்கள் உங்களைபற்றி இன்று சொல்லியிருக்காங்க http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_26.htmlஅருமையாக..

  சிலருக்கு புரியவில்லை என்பதற்காக நீங்க ஏன் வருந்தனும்.உங்கள் கவிபயணம் தொடந்து போகட்டும் நல்லவைகளைநோக்கி..வாழ்த்துக்கள் அன்புடன் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 2. அடபோங்க மலிக்கா உங்களைப்பற்றி உங்களுக்கென்ன தெரியும். கணினியில் எங்கு நோக்கினும் உங்களைபற்றியே அதாவது உங்கள் கவிதைபற்றியேயிருக்கையில் இதுக்கெல்லாம் போய் வருதப்பட்டுகொண்டு. இதோ இங்கு போய் பாருங்கள் உங்களைபற்றி இன்று சொல்லியிருக்காங்க http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_26.htmlஅருமையாக..

  சிலருக்கு புரியவில்லை என்பதற்காக நீங்க ஏன் வருந்தனும்.உங்கள் கவிபயணம் தொடந்து போகட்டும் நல்லவைகளைநோக்கி..வாழ்த்துக்கள் அன்புடன் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 3. என்ன அருமையான காதல் கவிதை. இதையா வேண்டாமென்றார்கள். அவர்களுக்கு வேண்டாமென்றால் போகட்டும் நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  வாழ்த்துக்கள் மலிக்காமேடம்..

  பதிலளிநீக்கு
 4. கவிதை நன்றாகத் தான் உள்ளது, எந்த தளம் என்றுத் தெரிந்தால் காரணம் கூற இயலும். ஏனென்றால் ஒரு சில தளங்கள் இலக்கிய நோக்கோடு இருப்பவை. ஒரு சில வெகு ஜன தளங்கள். அதனால்தான் கேட்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. "A poet is born not made"
  If your not born a poet, then you can be made into one.
  You says that you are not more educated,(college education) so you are a born poet.

  பதிலளிநீக்கு
 6. எல் கே கூறியது...

  கவிதை நன்றாகத் தான் உள்ளது, எந்த தளம் என்றுத் தெரிந்தால் காரணம் கூற இயலும். ஏனென்றால் ஒரு சில தளங்கள் இலக்கிய நோக்கோடு இருப்பவை. ஒரு சில வெகு ஜன தளங்கள். அதனால்தான் கேட்கிறேன்//

  தளங்கள் எதுவாக இருந்தாலும் பொதுநோக்கம் கொண்டவையாக இருக்கவேண்டுமே தவிர அதற்குள் இதுபோன்ற உட்பிரிவுகள் தமிழ் இலக்கியத்திலும் அவசியமா? என்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுவிட்டேன். தாங்கள் புரிந்துகொண்டமைக்கு நன்றி கார்த்தி..

  பதிலளிநீக்கு
 7. சிலருக்கு புரியவில்லை என்பதற்காக நீங்க ஏன் வருந்தனும்.உங்கள் கவிபயணம் தொடந்து போகட்டும் நல்லவைகளைநோக்கி..வாழ்த்துக்கள் அன்புடன் மலிக்கா..

  இதுவே எனது கருத்தும் மலிக்கா

  பதிலளிநீக்கு
 8. கவிதை எழுதுவது எப்படி?

  என்று சொல்லிக்கொடுக்கப்போகிறீர்கள் என்று ஆவலுடன் படித்தேன்.

  நீங்கள் எங்களிடம் கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

  அவர்கள் வெளியிடாவிட்டால் போகிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்.

  வலைப்பூவில் வெளியிட்டால் உடனுக்குடன் பாராட்டப் பலபேர் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 9. தங்கள் இந்த பதிவைப் பற்றிய கருத்து நாளை சொல்கிறேன்...!

  பதிலளிநீக்கு
 10. சகோ நலமா ?

  இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நானும் பல டாட்.காமுகளுக்கு அனுப்பியுள்ளேன். பிரசுரிக்க படுவதே இல்லை, தேர்வு செய்யப்படவில்லை, நிராகரிக்கப்படுகிறது போன்ற வசனங்களுடன். நமது கவிதைகளை பிரசுரிக்க அவர்களுக்கு தகுதி இல்லை என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான். சில சுமாரான கவிதைகள் கூட பிரசுரமாகும்போது கோபம் கூட வருவதுண்டு. இலக்கிய உலகிலும் நிறைய அரசியல் இருக்கு சகோ. நாம் நமது திறன் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்போம். நாளை நமதே

  விஜய்

  பதிலளிநீக்கு
 11. தங்கை அன்புடன் மலிக்கா,
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  தங்களின் தலைப்புக் கேள்வியே தப்பு என்பது என் கருத்து. எப்படி நீந்துவது என்று மீன் குஞ்சு கேட்கும் அபத்தம் போன்றது.

  கவிதை என்பது எழுத்துகளால் மொழிபெயர்க்கப் பட்ட உணர்வுகளின் ஒரு குவியல் என்று சொன்னால் நீங்கள் இதில் வித்தகர் என்பதே நான் கண்டது. 

  நீங்கள் குறிப்பிடும் தளத்தை நான் ஓரளவு ஊகித்துவிட்டேன். 
  அவர்களின் ரசனையோடு ஒத்துப்போவதை பதிகிறார்கள். தங்களைப்போன்ற கவிகள் யார் ரசனைக்காகவும் தம் படைப்பு முறையில் சமாதானம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னைப்போன்ற வாசகர்களுக்காக தொடர்ந்து தொய்வின்றி எழுதுங்கள்.

  மேலேயுள்ள கவிதையில் "வஞ்சியவள்" என்று படர்கையில் சுட்டிவிட்டு "மாறியெனை" "நின்றிடுவேன்" என தன்னிலையிலும் சுட்டுவதில் நெருடல் இருக்கிறது. கவனியுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. சில தளங்களில் பின்நவீனத்துவக் கவிதைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.இந்தக் கவிதைக்கு ஒரு குறையுமில்லை மல்லிக்கா.தளராமல் தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
 13. இது கவிதையே!
  பழையநடைக்கவிதை என்று
  பாவிகள் ஒதுக்கிவிட்டார்.
  இளையதலைமுறைகள் சில
  இப்படித்தான் எண்ணுகின்றன.
  இது கவிதையே!ஏக்கம்கொள்ளாதே.
  வசனங்கள்மாற்றி புரியாதன்மையோடு
  மீண்டும் எழுதி அனுப்புக அவர்கள்
  அன்போடு ஏற்ப்பர்.

  அன்பன்
  வதிரி.சி.ரவீந்திரன்.

  பதிலளிநீக்கு
 14. சிலருக்கு புரியும் ஆனால் ,புரியவில்லை என்பார்கள் . நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்து இருக்கும். விட்டு தள்ளுங்க சகோதரி.

  பதிலளிநீக்கு
 15. //இதுபோன்ற உட்பிரிவுகள் தமிழ் இலக்கியத்திலும் அவசியமா?//

  அவசியம் என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இன்னும் சில ஹேமா சொன்ன மாதிரி பின் நவீனத்துவ (அப்படினா என்ன ஹேமா ) கவிதைகளை மட்டுமே ஒத்துப்பாங்க,. இன்னும் சில நீங்க எழுதி இருக்கறதுக்கு நீங்க கோனார் நோட்ஸ் எழுதினாத்தான் புரியும் மாதிரியான கவிதைகளை மட்டும் ஒத்துப்பாங்க

  பதிலளிநீக்கு
 16. நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது...!

  ஓர் எடுத்துக்காட்டு...!

  இது இன்று கவிஞர் என்று சொல்பவர்களுக்கெல்லாம் "கவிஞர்" இவர்...!
  இவர் யதார்த்தக் கவிஞர்...! ஓர் ஏழை தொழிலாளிக்கும்...! விவசாயக்கூலிக்கும்...! பாமரனுக்கும்....! பரமஎழைக்கும்...! படிக்காத தற்குறிக்கும்.. இவரின் வரிகள் எளிதாய் விளங்கும்...!

  அப்பபேர்பட்ட மக்கள் கவிஞன் "கண்ணதாசன்" வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்ச்சியை சொல்கிறேன்...! இதிலிருந்து தங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்...!

  கண்ணதாசன் ஓர் கல்லூரி தமிழ் விழாவிற்கு சென்றிருந்தார்....! அவ்விழாவில் அவர்க்கு உற்சாக வரவேற்ப்பு...! இனிதே விழா தொடங்கியது...! வரவேற்புரை... முன்னிலை... என பலர் உரையாற்றினர்...! அனைவரும் அவரை புகழ்ந்து உரையாற்றினர்...! இது முடிந்ததும் அக்கல்லூரி மாணவன் ஒருவர் கவிதை படித்தார்...! அவ்வரங்கமே அமைதியாய் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருதது... அடுத்து கவிஞர் உரையாற்றும் நேரம் வந்தது... அவர் உரையாற்ற எழுந்ததும் கையொலிகளை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டியது கூட்டம்... கவிஞர் உரையாற்ற தொடங்கியதும்...முதலில் ஓர் கவிதையை படித்தார்...! அக்கவிதையை படித்து முடிக்கும்முன்பே... கையொலியில் அந்த அரங்கமே அதிர... அத்துடன் அக்கவிதையை பற்றி ஆஹா...!ஓஹோ...! என்ற புகழாரம்...! கவிஞர் கவிஞர்தான்...! இதுபோன்ற கவிதை படைக்கும் இவரை வெல்ல எவருளர் என்ற வாழ்த்துக்கள்...! புகழாரம்...! இந்த புகழாரம் அடங்கியபின் கவிஞர் கண்ணதாசன் பேசினார்...! "இவ்வளவு நேரம் நீங்கள் புகழ்ந்த புகழ்சிகளெல்லாம்...இதோ இவரைத்தான் சாறும் என அருகில் நின்றிருந்த... அதாவது கண்ணதாசன் உரையாற்றுமுன்.... மேடையில் கவிதை படித்த கல்லூரி மாணவனை... அழைத்து பக்கத்தில் நிற்க வைத்தார்...! அரங்கில் குழுமியிருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்துபோயினர்...! என்ன..? என்ற வினாவுடன்...! அப்போது கவிஞர் கண்ணதாசன் சொன்னார்...! "இவ்வரங்கில் குழுமியுள்ள அனைவரும்.... கவிதை எப்படி இருந்தது என்பதை கவனிக்கவில்லை....! அக்கவிதை யாரால் சொல்லப்படுகிறது... யார் வாயால் உச்சரிக்கப்படுகிறது என்பதைத்தான் கவனித்தீர்கள்...! சற்றுமுன் நான் படித்த கவிதை இந்த கல்லூரி மாணவருடையது...! நான் கவிதை படிப்பதற்கு முன்னால்... இக்கல்லூரி மாணவன் படித்த கவிதை என்னுடையது" என்றார்...! மேலும் தன் உரையில் "நான் இம்மேடைக்கு வருவதற்கு முன்... இம்மாணவனும்... நானும்... எங்கள் கவிதையை மாற்றிக்கொண்டோம்...! இம்மாணவன் என் கவிதையை முதலில் படிக்க... நீங்கள் வரவேற்கவும் இல்லை...! கரவொலி எழுப்பி வாழ்த்தவுமில்லை...! ஆனால்...! இம்மாணவன் கவிதையை நான் படிக்க... வாழ்த்துக்கள்... கரவொலிகள் எழுந்தன...! எனவே... இந்த வாழ்த்துக்களும்... கரவொலியும்.... கவிதைக்கல்ல...! மனிதர்க்குத்தான்..! என்பது விளக்கத்தேவையில்லை" என்றார்... அத்துடன் தொடர்ந்து "இனியாவது யார் வாயிலிருந்து கவிதை வருகிறது என்பதை பார்க்காதீர்...! கவிதை எப்படி இருக்கிறது என்பதை உற்றுநோக்கி... வாழ்த்துங்கள்... வரவேற்பளியுங்கள்" என்றார்...!

  பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது "கருடா சௌக்கியமா?" என எழுதிய கவிப்பேரரசு கண்ணதாசன் சொன்னது...!

  என் மானசீக குரு.... கவிஞர் கண்ணதாசன் சொன்ன.... இந்த பதில்தான்... தங்கள் இப்பதிவிற்கு நான் அளிக்கும் பதில்...! கருத்து...!

  பதிலளிநீக்கு
 17. ////அப்படியே கவிதை எழுதுவது எப்படி?ன்னு யாராவது சொல்லிதந்தால் அந்த வகுப்பில் முதல் மாணவியாக நான் சேர்ந்துகொள்வேன்..
  அட்ரஸ் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கிலீஸில் கேட்டாதான் சொல்லுவீங்கன்னுதான் ஹி ஹி//////////

  நாங்க... சிட்டி, செங்கல்பட்டு, நர்தார்காடு, சவுதார்காடு, எப்.எம்.எஸ்.. எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கோம்....!

  இந்த.. நக்கலு...! நையாண்டி...! ஏகதாச்சி...! குத்தலு...! குசும்பலு...! எங்ககிட்ட வேணாம்...! என்ன...! புரியுதாங்கோ...!

  பதிலளிநீக்கு
 18. என்னுடைய இப்பதிவிற்கு இத்தனைபேரின் அறிவுரைகளும் அருமையான விளக்கங்களும் தந்து நெகிழசெய்துவிட்டீகள். எந்த ஒரு படைப்பாளனும் அவனுடைய படைப்பை பிறர் குறைசொல்வதையோ!
  ஒதுக்கிதள்ளுவதையோ விரும்புவதில்லை. ஆனால் அப்படி செய்யும்போதான் அந்தபடைப்பாளன் இன்னும் இன்னும் என தன் எண்ணங்களை மேலோங்கச்செய்து அதனை செழுமைப்படுதவும் செயலாக்கிகாட்டவும் தூண்டப்படுகிறார் என்பதை உணர்ந்துகொண்டால். எவ்வளவு பெரிய தடைகளையும் முறியடித்து தான் எண்ணிய இலக்கை அடைவார். அதனால் நான் இதெற்கெல்லாம் வருத்தமோ! சோகமோ அடைந்து மூலையில் முடங்கிவிடவிடுபவளில்லை. இது நமக்கு மட்டும் நடப்பதல்ல அனைவரும் இப்படிதான் ஏதோ ஒருவகையில் வருதங்கள் அடையும் சந்தர்ப்பம் அமையும். இதையெல்லாம் தாண்டிதான் மேலே வரனுமுன்னு சொல்லுறாங்க இதுவும் ஒருவகைக்கு நல்லதுதான் அப்பதான் இன்னும் இன்னும் என மனம் முன்னேறத்துடிக்கும். இல்லையா மண்ணுக்குள் வைத்துமூடினாலும். மண்ணின் மேல்பரப்பிலிட்டுவிட்டு போவோர் வருவோரால் மிதிபட்டு அதன்வழியே உள்சென்றாலும் வித்து வேர்விடுவததில்லையா. அதுபோல் வித்தாக எண்ணங்களை விதைத்து விடுவோம் வேராக! வளர்வோம் விழுதாக..

  பதிலளிநீக்கு
 19. எனது அன்பு நெஞ்சங்களுக்கு. தங்களின் ஊக்கம்தான் என்னை இந்தளவு கொண்டுவந்ததே! என் எண்ணங்கள் உயர்ந்ததாகி அதன் வழியே எழுத்துக்கள் சிறந்ததாக விளங்கவும் அதன்மூலம் தங்கள் அனைவரின் நெஞ்சில் நிலைத்து நிற்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம்
  என்றும் வேண்டியவளாக இருக்கிறேன்..

  தங்கள் அனைவரின் அன்புக்கு. எனது உளமார்ந்த நன்றிகள் கோடானகோடி..

  பதிலளிநீக்கு
 20. வாங்க சகோ ஹாசீம். முதல்வருகையிலேயே பாசம்கலந்து கருத்தை தந்திருக்கீங்க.
  நான் மிக சாரணமானவள் இலக்கியம் கற்றறிந்தவர்களுக்கே பலசமயம் இப்படியாகிருக்காம் நாமெல்லாம் எம்மாத்திரம்.

  சகோ விஜய் தங்கள் சொல்வது மிகவும் சரியே.. மண்ணை முட்டி மோதிதான் வித்து விழுதாகி வேர்விட முயன்றிடுமாம் முயச்சிபோம் மூச்சுள்ளவரை..

  சகோ சபீர்.அன்பு நிறைந்த பகிர்ந்தலுக்குமிகுந்த மகிழ்ச்சி நெருடலை நீக்கிவிட்டேன்..

  பதிலளிநீக்கு
 21. //nidurali கூறியது...

  "A poet is born not made"
  If your not born a poet, then you can be made into one.
  You says that you are not more educated,(college education) so you are a born poet.//

  வாங்க தந்தையே.. இதற்கு நான் எப்படி பதில்சொல்வது என தெரியவில்லை! இறைவன் எதை நாடியுள்ளானோ அதுவாகவே மனிதர்கள் படைக்கபடுள்ளார்கள்.

  என் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எழுதின்மூலம் வடிவம் கொடுக்கிறேன் அவ்வளவுதான் இதுவும் நானாக செய்யவில்லை எல்லாம் இறைவனின் செயல். அவன் நாடியபடியே அனைத்தும் நடக்கும். எவன் வசத்திலிருந்து நாம் வந்தோமோ அவன் வசமே மீண்டும் செல்வோம். ஆகவே என் ஒவ்வொரு செய்கைக்கும் அவனின் உதவிவேண்டும். அகில உலகையும் படைத்து பராமறிக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

  பதிலளிநீக்கு
 22. சகோ முரளி. ஒரு அருமையான சம்பவத்தை மிக அழகாக எடுத்துரைத்து அதன்வழியே எங்களுக்கும் பாடம் கற்றுத்தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

  அதுசரி அவர்களின் கவிதைக்கே அப்படின்னா. நானெழுதுறதெல்லாம் வெறும் தூசு..[கவிதையின்னு நானா சொல்லிகிட்டாதான்]அதுக்குதான் நான் அப்பமே கேட்டேன் கவிதை எழுதுவது எப்படின்னு யாராவது கிளாஸ் எடுத்தா நாந்தான் ஃபஸ்ட் அங்க இருப்பேன்..

  //நாங்க... சிட்டி, செங்கல்பட்டு, நர்தார்காடு, சவுதார்காடு, எப்.எம்.எஸ்.. எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கோம்....! //

  அச்சோ இத்தனையும் பார்த்த ஆளா நீங்க![இதில் ஒன்னுகூட நான் பார்த்தேயில்லைய சகோ!] அப்ப உங்ககிட்டதான் கத்துக்கனும் கவியெழுத. குருவே தட்சனை எவ்வளவுன்னு சொன்னா நான் அண்ணி பெயருக்கே டிராப்ட் எடுத்து அனுப்பிடுவேன்..

  பதிலளிநீக்கு
 23. sinnathambi raveendran கூறியது...

  இது கவிதையே!
  பழையநடைக்கவிதை என்று
  பாவிகள் ஒதுக்கிவிட்டார்.
  இளையதலைமுறைகள் சில
  இப்படித்தான் எண்ணுகின்றன.
  இது கவிதையே!ஏக்கம்கொள்ளாதே.
  வசனங்கள்மாற்றி புரியாதன்மையோடு
  மீண்டும் எழுதி அனுப்புக அவர்கள்
  அன்போடு ஏற்ப்பர்.

  அன்பன்
  வதிரி.சி.ரவீந்திரன்.//

  வாங்க முதலில் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

  ஆகா இது நல்ல ஐடியாவாயிருக்கே. புரியாத பாஷையொன்னு இருக்கு அதுவும் கலந்து எழுதிடுவோம்..

  வேணாமுங்கோ தமிழே நமக்கு தட்டுபாடு இதில் புரியாதன்மைக்கு நான் எங்கேபோவேன்..

  பலருக்கு புரியாமல் எழுதுவதைவிட சிலருக்கு புரிவதுபோல் எழுதினாலேபோதும் அந்தசிலரில் மிகபலர் உருவாகக்கூடும்.

  பதிலளிநீக்கு
 24. ////சகோ!] அப்ப உங்ககிட்டதான் கத்துக்கனும் கவியெழுத////////

  நக்கலு...!

  என்னாதிது...!
  என்ன வைச்சு காமெடி... கீமெடி செய்றீங்களா...?

  ஐயோஓஓஓ.....! அய்யோ...!

  பதிலளிநீக்கு
 25. யார் நிராகரிக்கப்படவில்லை???

  சிவாஜி கணேசன் முகம் திரையில் எடுப்பாக இல்லை என்று நிராகரிக்கப்பட்டபிறகு கிடைத்தது பராசக்தி.
  அமிதாப்பச்சன் ஒரு ஒல்லிப்பிச்சான் என நிராகரிக்கப்பட்டு அதே ஸ்டூடியோவில் வேலை ஆளாக சேர்ந்தவர்.
  ஒவ்வொரு இமய சாதனையிலும் ஒரு பள்ளத்தாக்கு தோல்வி இருக்கிறது. இதில் சாதிப்பவர்கள் " கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்" என்று கண்ணதாசனின் வரிகள் மாதிரி வாழ்கிறார்கள்.


  உங்களிடம் அந்த குணம் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. இதுக்கெல்லாம் மனம் தளரக்கூடிய ஆளே இல்லியே நீங்க? ஒருவேளை, அந்த டாட் காம் ஆசாமிகள் கவிதைங்கிறது லண்டன்ல இருக்க டவுணா, இல்லை அமெரிக்காவுல இருக்க கிராமமோனு கேக்கிற என்னை மாதிரி ஆளா இருப்பாய்ங்களோ?? ;-)))))))

  பதிலளிநீக்கு
 27. மேடம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்.. பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்பும்போது அந்த அந்த இதழ்களின் ஸ்டைலை பார்த்து அதற்கு ஏற்றார்போல் அனுப்பனும்.. உதாரணமா குமுதம் இதழுக்கு குழந்தைகள் கவிதைகள் செலக்ட் ஆகும்.. ஆனந்த விகடன் காதல், பெண் சம்பந்தப்பட்டு எழுதினால் போடுவாங்க.. அதனால நாம படைப்பு வர்லைன்னா படைப்பின் தரம் கம்மியோன்னு நினைக்க தேவை இல்லை

  பதிலளிநீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 29. காஞ்சி முரளி கூறியது...

  ////சகோ!] அப்ப உங்ககிட்டதான் கத்துக்கனும் கவியெழுத////////

  நக்கலு...!

  என்னாதிது...!
  என்ன வைச்சு காமெடி... கீமெடி செய்றீங்களா...?

  ஐயோஓஓஓ.....! அய்யோ...!// அது என்ன கீமெடி சகோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 30. ZAKIR HUSSAIN கூறியது...

  யார் நிராகரிக்கப்படவில்லை???

  சிவாஜி கணேசன் முகம் திரையில் எடுப்பாக இல்லை என்று நிராகரிக்கப்பட்டபிறகு கிடைத்தது பராசக்தி.
  அமிதாப்பச்சன் ஒரு ஒல்லிப்பிச்சான் என நிராகரிக்கப்பட்டு அதே ஸ்டூடியோவில் வேலை ஆளாக சேர்ந்தவர்.
  ஒவ்வொரு இமய சாதனையிலும் ஒரு பள்ளத்தாக்கு தோல்வி இருக்கிறது. இதில் சாதிப்பவர்கள் " கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்" என்று கண்ணதாசனின் வரிகள் மாதிரி வாழ்கிறார்கள்.// நிராகரிக்கப்பட நிராகரிக்கப்பட இன்னும் நிமிர்ந்துநிற்க வழிவகுக்கும். ஊக்கம் கொடுப்பவர்களைவிட ஒருபடிமேலேபோல் இன்னும் முன்னேற வழிவகுப்பவர்கள். நம்மை நிராகரிப்பவர்கள்தான். ஆதாலால் அதைஅப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்பட்டால் இன்னும் சிறப்பகாலம்.


  //உங்களிடம் அந்த குணம் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன்.//
  நிறைய இருக்கு சகோ. தங்களின் வருகைக்கும் ஊக்கம்கொடுக்கும்படியா கருத்துரையை வழங்கியமைக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 31. //ஹுஸைனம்மா கூறியது...

  இதுக்கெல்லாம் மனம் தளரக்கூடிய ஆளே இல்லியே நீங்க? ஒருவேளை, அந்த டாட் காம் ஆசாமிகள் கவிதைங்கிறது லண்டன்ல இருக்க டவுணா, இல்லை அமெரிக்காவுல இருக்க கிராமமோனு கேக்கிற என்னை மாதிரி ஆளா இருப்பாய்ங்களோ?? ;-)))))))//

  அதெல்லாம் தளர்ந்துவிடுவோமா! என்ன. இதெல்லாம் கடக்காமல் முன்னேறினால்தான் போரடிக்கும் ஆங்காங்கே இப்படியெல்லாம் நடக்கிறது நமக்குமட்டுமென்ன விதிவிலக்காயிடுமா? ஹுசைனம்மா. இதையெல்லாம்விட என்ன என்னவெல்லாமோ தாங்கிட்டோம் இதை தாங்கிகொள்ளமாட்டோமா..

  அது சரி கிராமம் டவுன் யின்னா ஹுசைன்னமா அப்படிக்கிறது எங்கிருக்கு எப்புடியிருக்கும்..

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்கனுமுன்னு தோனுதாஆஆஆஆஆஆ

  பதிலளிநீக்கு
 32. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  மேடம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்.. பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்பும்போது அந்த அந்த இதழ்களின் ஸ்டைலை பார்த்து அதற்கு ஏற்றார்போல் அனுப்பனும்.. உதாரணமா குமுதம் இதழுக்கு குழந்தைகள் கவிதைகள் செலக்ட் ஆகும்.. ஆனந்த விகடன் காதல், பெண் சம்பந்தப்பட்டு எழுதினால் போடுவாங்க.. அதனால நாம படைப்பு வர்லைன்னா படைப்பின் தரம் கம்மியோன்னு நினைக்க தேவை இல்லை//

  உண்மைதான் சகோ. நம் படைப்பின்மீது நமக்கில்லாத நம்பிக்கை பிறருக்கெப்படி வரும். என் படைப்புகள் மீது என்றுமே எனக்கு நம்பிக்கை சிறிதளவும் குறையாது. எனக்கு நான் எழுத்தும் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் எப்போது நாம் நம்மை நேசிக்கிறோமோ அப்போதுதாம் நம்மை பிறரும் நேசிப்பார்கள் என்பது எனது கருத்து..

  நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 33. அன்புடன் மலிக்கா, மரபு கவிதைகள் எழுதுவது வேறு, நம் மனதுக்குப் பட்டதைக் கவிதையாக எழுதுவது வேறு. அதில் இலக்கணம் முக்கியம் இதில் உணர்வுகள் வெளிப்படுவது முக்கியம் நம் திருப்திக்காக எழுதும்போது அங்கீகாரம் எதற்கு.?நானும் சில வரிகள் கவிதை என்று எண்ணிஎழுதியுள்ளேன். வாசிப்பவர்கள் அதனை எப்படி வரவேற்கிறார்கள் என்பதே முக்கியம். நான் “ உஷ். தொந்தரவு செய்யாதீர்கள் “என்று ஒரு பதி எழுதி இருந்தேன். அதற்கு ஒரு வாசகர் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. எதற்கும் குழம்ப வேண்டாம். உங்கள் கவிதை படித்தேன் நிறைவாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. எப்படி எழுதணுமாம்!
  எனக்கும் கொஞ்சம் சொல்லித் தர சொல்லுங்களேன்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது