நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது