நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்புமகனும் அழகிய யானையும்..

இந்த போட்டோவை  எடுத்தது யார்?

காட்டில் உலவும் யானைக்குடும்பம்
காலார நடக்க ஆசைப்பட்டு
கதை பேசிக்கொண்டே -தன்
குட்டிகளோடு சுற்றிவரவே

காட்டிலொரு சிறுவன் தெரிய
கவனமாய் அவனருகில் வந்து
சிறு விழியால் கண்ணடித்து
சிறுவ னவனை சிரிக்கவைத்து!

தும்பிக்கையால் அவனைத்
தூக்கிதன் முதுகிலேற்றி
வைத்துக்கொண்டு
வனமுழுதும் வலம்வரவே!

வரும் வழியில்
வழிந்தோடும் தண்ணீரைக்கண்டு
தங்கள்முகத்தை தங்களே பார்க்க
துள்ளித் துள்ளிக் குதித் தனவே!

அச்சிறுவன் மனமுழுதும்
ஆனந்தம் பொங்கி டவே!
அதை படம்பிடித்து காட்டியதும்
அன்னையுள்ளம் ஆனந்தமடைந்ததம்மா!

காட்டிலுள்ள மிருகமெல்லாம்
நாட்டில் உலா வருகையிலே!
நாட்டிலுள்ள மனிதமெல்லாம்
காட்டுக்குள்ளே உலவுதம்மா!

ஐந்தறிவு உள்ளதெல்லாம்
ஐம்பொன்னாக மினுமினுக்க
ஆறறிவு உள்ளதெல்லாம்
அறிவு மங்கிப் போனதம்மா!

//டிஸ்கி//  முசந்தம் போனபோது கிளிக் எடுத்ததையெல்லாம் கலைச்சாரலில் போட்டுயிருந்தேன் அதை நம்ம அண்ணாத்தே ஜெய்லானி சுட்டுபோட்டைவை இப்படி அழகாய் ஆணைமேல் ஊர்வலம்போகவைத்துவிட்டார் என் அன்புமகனை..
மிக அழகாய் கிரியேட் செய்த அண்ணாத்தேக்கு அல்லாரும் சேர்ந்து ஒரு பாராட்ட போடுங்க அப்படியே ஓட்டையும் கருத்தையும்போட்டு என்அன்புச் செல்லத்துக்கும் அன்பையும் தாருங்கள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது