நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாராயோ வெள்ளி நிலவே


அந்தரத்தில்
உதிக்கும் நிலவே
என்
அந்தபுரம்
வரவேண்டும் நீயே
ஆடிபாட
அழைக்குது மயிலே
ஆவலோடு வந்துவிடு
அழகே

அங்கே
வழியொன்று
வைத்திருக்கிறேன்
சிறு ஓட்டை
அதன் வழியே
நுழைந்து திறந்திடு
என்
மனக்கூட்டை

மனதை மறைத்து
போட்டுள்ளேன்
ஒரு பூட்டை
அதில்
ஒளிந்து கிடக்குது
ஆயிரம் ஆசை

நமக்குள்
பேசிக்கொள்ளும்
வார்த்தை
யாருக்கும்
விளங்கிடாத பாஷை

நம்மிருவரையும்
இணைத்திருக்கும்
ஓசை
ஒருவருக்கும்
புரிந்திடாத
உயிரோசை

வானத்தில்
வந்து நீ
நின்றால்-என்
வதனத்தில்
ஒளிகூடிபோகும்

மேகத்தில்
ஒளிந்து நீ
சென்றால்-என்
இதயத்தில்
இருள்சூழ்ந்துக்
கொள்ளும்

அழகாய்
வலம்வரும் நிலவே
அமாவாசையிலும்
வேண்டும்
உன் வரவே

அந்தரத்தில்
ஒளிவீசும் அழகே
என்
அந்தபுரம்
வரவேண்டும்
நீயே

விரும்பி அழைக்கிறேன் 
உன்னை
வெள்ளி நிலவே
வந்துவிடு எனதருகே..


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது