நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைந்து எறி


கவலைகளை

மனச்சிறையில் அடைத்து வைக்காதே
அது செல்லாக மாறி

உன்னையே அரித்துவிடும் அழித்துவிடும்

கவலைப்படுவதால்

ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு

கவலையேற்படுமென்றிருப்பின்
அது வந்தேதீரும்

வருத்தம்வந்துவிட்டதே! என

நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா

எல்லாவற்றையும் எதிர்பார்த்து
வாழ்வதே

வாழ்க்கையென்றாகிவிட்டதால்

எதையுமே

ஓர் வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்


கவலையென்பது கானல்நீர்

”ஆனால்”
நீதான் அதை நீரென்று

நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்


கவலை கவலை என

உனக்கு நீயே ஏன்
வலை பின்னிக்கொள்கிறாய்


கவலையிலும்

ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்

”வ”என்ற
 வருத்தத்தை நீங்கிவிட்டு


கவலைகளா அதை கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு அல்லது
கவலையை கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்

கவலையே காணாமல்போய்விடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

வலி


கைதடியை

தட்டித் தட்டியக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா

தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி

வீடுவந்து சேர்த்தவர்கள்
வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது

ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின்

ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு

வாக்கிங்

கத்தியில்லாமல்

குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல்

வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம்

தானாய் புலம்பியது ரத்தினமே நீ
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்
இந்த புண்பட்ட கிழவனுக்கு
எப்போது உயிர்
பொசுக்கென்று போகுமோ,,,
வலுவிழந்துவிட்டால் வாழ்க்கை
வலியாகிப்போய்விடுமோ-


என்று
வருத்தும் நெஞ்சடைக்க
விழியருவி பார்வையை மறைக்க
வெற்றிடத்தை உற்றுப்பார்த்தபடி
உருக்குலைந்த உடம்போடு

உருகியது மனம்...

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மரணம்


மரணம்

அது இல்லாதுபோனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் கமழும் "மணம்"
தீயவைகளால் உருகும் மனம்

மரணம்
தேடிப்போவது "ரணம்"
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் "மரம்"
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை........

மணம், ரணம், மரம், மரணம்!!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பரிசு


தேடி தேடி பெற்ற சுகத்துக்கு
தனக்குத்தானே தண்டனை
உடலையே உருக்கிக் கொல்லும்
ரணமான மரணம்

இறைவன் வகுத்த நியதியை மீறி
திகட்டாமல் தேடிய இன்பத்திற்கு
இறைவைன் தந்த பரிசு
திக்குமுக்காடவைக்கும் வியாதி

மாற்றான் தோட்டத்து மல்லிகையில்
தேனெடுக்க சென்ற வண்டுக்கு
அந்த மல்லிகை தந்த பரிசு
இந்த எய்ட்ஸ்

தவறென்று தெரிந்தும் தத்தித்தாவி
தவறிப்போகும் மனங்களே
உயிருள்ளவரை உள்ளச்சத்துடன் வாழுங்களேன்....

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தாய் மனசு





தங்கமே வந்துவிடு
என் தாமரையே வந்துவிடு
தாலாட்டி
நான் வளர்த்த
என் தாரகையே வந்துவிடு
உன்னை
நான் சுமந்த வேலையில்
பட்ட துன்பங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல!

சூடாக சாப்பிட்டால்
அதுஉனை சுட்டுடுமோ
என்றெண்ணி
சுரத்தே இல்லாமல்
நானுண்டேன் பலமாதம் -
ஆனாலின்று
நீ சுட்டுசுட்டு தள்ளுவதாய்
மற்றவர்
சொல்லக்கேட்கின்றேன்

மரத்தா விட்டது
ஒன்மனசு
என்மாரணைத்துதானே
பால்கொடுத்தேன்!
மறந்தா விட்டது
ஏனெப்பு
என் மனசுக்குள்ளேதானே
பொத்தி வளர்த்ததேன்!

தீராத
வலியெடுத்தல்லவா!
உனை பிரசவிச்சேன்-அதற்கு
கைமாறாகத்தான்
நீ தீவிரவாதியானாயோ!
ஒரு பாவமும் அறியாமல்
நான்னுனை பெற்றெடுத்த
பாவியடா!
பல பாவங்கள்செய்கிறாய்
நீயென
செய்தித்தாள்களில்
கண்டேனடா!

பதைபதைத்து
நானிருக்கேன்
பரிதவித்துப்போயிருக்கேன்
நான்பெற்றெடுத்த
பாவமோ!
இல்லை யார்
கொடுத்தசாபமோ!
இந்நிலைஉனக்குவர
அந்ததெய்வந்தான்
காரணமோ!
வயிற்றுக்குச்
சோறில்லையென்று
வக்கிரபுத்திக்காரர்களின்
வசியத்தில்
வழிதவறிபோனாயோ!

இந்த
லகுக்கே நீ
பொல்லாதவன் என்றாலும்
என்றைக்கும்
பெற்றவளுக்கு நீதான்
பிள்ளையடா!
ஒன்றும் புரியாமல்
புறப்பட்டு போனவனே!
போனதெல்லாம் போகட்டுண்டா
பொழுதுவிடியுமுன்னே
பொசுக்குன்னுவந்திடடா!

செய்தபாவம்
அத்தனைக்கும்
அந்ததெய்வமென்னை
தண்டிக்கட்டும்.
செய்தவினைபோதுமடா!
இனி
சிறப்பாய் வாழவந்திடடா!

என்கண்ணீரும் ஓயவில்லை
என்கண்களும் மூடவில்லை
என்புலம்பலும் தீரவில்லை
இன்னும்

எம்பொழுதும் விடியவில்லை
இருட்டோடு இருட்டாக
நம்துயரங்கள் போகட்டும்
வெளிச்சம் உருவாகி
நம்வாழ்க்கை செழிக்கட்டும்

வந்துவிடு
என் மகனே
என்னுயிர்
போகும்முன்னே..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எச்சில் பூக்கள்


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது

பெற்றோரின்
முகம்காணாயிந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும்
சிறகொடித்த பறவைகள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்-சில
மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட ஜடமாகிபோகும்
இச்சின்னஞ்சிறிய சிசுக்கள்

தான் அனாதையாக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்ற நிலையில்
அனாதையில்லத்தில்
அல்லாடும் இத்தளிர்கள்
தான் யாரென அறிந்த பின்னே
துடியாய்த் துடிக்கும்
இந்த பிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல் வலையை
காலடியில்யிட்டு மிதித்து
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச் சீரழியும்
நவநாகரீக கன்றுகளே!

தன்கற்பு எனும் மானத்தை
காத்துக் கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்..

கிடைக்குமா ஓர்வரம்



நம் விழிகள் இரண்டும் விபத்துக்குள்ளானபோது
இடம் மாறிக்கொண்டன இதயங்கள்

எடுத்துசென்ற இதயத்தில் எவ்வித எண்ணங்களையும்
இணைத்துவிடாமல் திருப்பித்தந்துவிடு

தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை

"ஆதலால்"


தாழ்மையுடன் கேட்கிறேன் தயங்காமல் தந்துவிடு

என் இறப்புக்குப்பின் நீ இயந்திரமாக வாழ்வதை
நான் விரும்பவில்லை

விரும்பி வந்தவளே நான் வெறுத்துவிட்டேன் என்றெண்ணி
உன் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொள்-என்று
உன்னிடம் சொல்லிவிட்டேனே தவிர

தவிக்கின்றேன் தினம் தினம் -உன்னோடு
இணைந்து வாழ கிடைக்குமா ஓர்வரம்
என நினைத்து ஏங்குது என்மனம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

கனவே கலையாதே


விடிந்தும் விடியாத வானம்
கலைந்தும் கலையாத கார்மேகங்கள்
கம்பளிப்போர்வையை இழுத்துப்போர்த்தியபடி நடக்கின்றேன்


புகைப்புகையாய் வந்தகறுப்புக்காற்று என்கன்னங்களை உரச
உதட்டை குவித்து ஊதிப்ப்பார்த்தேன்
கன்னத்தின்வழியே சென்றகாற்று வாயின்வழியே
வெளியேவந்தது நடந்தபடியே கண்களை ஓடவிட்டேன்

பச்சையின்மேல் இச்சைகொண்ட பனித்துளி
புல்வெளியின்மேல் படுத்து உறங்கிக்கொண்டிருக்க
பலவண்ணப்பூக்களும் குளிரில் குளித்து நடுங்க
பூக்களுக்கும் போர்வை நெய்யவேண்டும் என்று
எண்ணியபடி எட்டுவைத்து நடந்தேன்

தூரத்தில் கைக்குள் கைகோர்த்துக்கொண்டு
நடையில்கூட பிரிவினையை விரும்பாத காதலர்கள்
காலோடு கால்கள் பின்னியபடி நடந்துசெல்ல

சூரியகாந்தி பூக்கள்மட்டும் சற்றுதலைதாழ்த்தியபடி
தன் சூரியகாதலனின் வருகையை எதிர்நோக்கி நின்றன
காற்றையும் மீறி கொலுசின் ஓசை காதுக்குள் வந்தது
சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகமாய் நடைநடந்தேன்



எதிரே மலையரசி தன்மானத்தை பச்சைப்பட்டால்
மறைத்து நிற்க அவளின் இடையோரம்
வழிந்தோடும் வெள்ளையருவி சலங்கை ஒலியோடு
தன் நீரையெல்லாம் பூமிக்குதானம் தந்துகொண்டிருந்தது

இதையெல்லாம் கண்டுரசித்தபடி
குயில்கள்களின் கானங்களைக் கேட்டபடி
மலையின் மகள்மடியில் சற்று அமர்ந்து
கண்களைமூடி கண்டுவந்ததையெல்லாம்
அசைபோட்டுக்கொண்டிருக்கையில்

இருகரங்கள் என் தோள்களை அசைத்தன
கண்விழித்து பார்த்தபோதுதான் தெரிந்தது
கண்டதெல்லாம் அதிகாலை கனவென்பது
கனவுகள் கலைந்தும்
கலையாமல் நான்,,

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்சுவாசம்-உன்வசம்


எனதுயிரே,,
உன் சுவாசம் வெளியேறியபோது- அதை
என் மூச்சுக்காற்றுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்,

”வேண்டுமெனில்”
உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!
நான்விடும் மூச்சுக்காற்றில்
உன்வாசம் கலந்திருக்கும்.

என் சுவாசக்குழாயினுள்
உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,

”ஏனெனில்”
வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்
உள்சுவாசம் வெளியேருகையிலும்
என்நொடியும் என்சுவாசம்
உன்வசம் இருக்கவேண்டுமென்பதற்காக.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

இருளும்!!!ஒளியும்


எதற்கு
இறைவனின் அருளை- நாம்
பெறவேண்டுமே
அதற்கு


மனிதா!
உன் கருவறை தொடங்கி
உன் கல்லறை வரையில்
உன்னை இருளென்னும்
சோதனையைக்கொண்டு
சோதிப்பதே இறைவனின் வேலை!


அதை
தன்னம்பிக்கையென்னும் மனதில்
இறைநம்பிக்கையென்னும்
உறுதியைக்கொண்டு
வெற்றிபெறவே வைத்துள்ளான்
மனிதனுக்கு மூளை!


வெளிச்சத்தில்
அமர்ந்திருக்கும் மனிதனுக்கு
திடீரென்று
இருட்டு சூழ்ந்துகொள்கிறது-உடனே
மனதில் பயம் புகுந்துகொல்[ள்]கிறது


உள்ளத்தில் உதறல் எடுத்தபோதும்
இருட்டிய இருளுக்குள் அமர்ந்து
அதை உற்றுப்பார் உற்றுப்பார்-
இன்னும் உற்றுப்பார்
அப்போது தோன்றும் ஒரு சிறு ஒளி
அதுதான் உன் ”மனஉறுதி”


மனிதனாய் பிறந்து
மனசாட்சியோடு வாழ்வதற்கும்
மனிதனாய் பிறந்ததற்காக
மனிதத்துடன் இறப்பதற்கும்
மனிதனுக்கு நிச்சயம் வேண்டும்
மனஉறுதி!


அந்த வெண்நிலவை
சற்று கவனித்துப்பார்
அதிலும்கூட
இருளின் கலவை இருக்கும்
தனக்குள்
இருளுள்ளதே என்பதற்காக
ஒளிராமல் இருக்கிறதா
இல்லையே!


வாழ்க்கை முழுவதும்
சோதனையில்லாமல்
வாழ்ந்தவர் எவருமில்லை
அப்படி இருந்தால்
அவரிடம் கேட்டுப்பார்


ஏதோ ஒருவகையில்
இருளென்னும் சோதனைக்குள்
இன்னுமும்
ஏதோஒரு வெளிச்சமென்னும்
வெற்றியை
தேடிக்கொண்டிருப்பதை
விவரிப்பார்


இருளைவிட்டு உடனடியாக
ஒளியை கண்டால்
உன் கண்கள் உடனே மூடிக்கொண்டு
இருளைத்தேடும்
அதை உணர்ந்தபின்னே
ஒளியையை நாடும்

இருளில்லாமல் ஒளியில்லை
சோதனையில்லாமல்
வாழ்க்கையில்லை

ஆதலால்


சோதனையிலும்
வெற்றிபெற்றுவாழ்க்கை
வாழ்ந்திட
இருளை உணர்ந்து
ஒளியை பெற்றிட


இருளிலும் ஒளியிலும்
இறைவனை நினைத்திடு
ஈருலகிலும் மகத்தான
வாழ்வினை பெற்றிடு...




இக்கவிதை அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாதஇதழில் வெளிவந்த
என்கவிதை




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்


இறைவனின் துணைக்கொண்டு
இனிதே நிறைவேறியது
நோன்பென்னும் புனித விரதம்

இம்மாதம் முழுவதும் மகிழ்ந்த மனம்
கரையேரும் நோன்பை நினைத்து வருந்தும்
இனிதினம்

முடியும் மாதத்தை நினைத்து வருத்தம் ஒருபுறம்
முடிந்தபின் முதல் நாள் வரும் பெருநாளை நினைத்து
சந்தோஷம் மறுபுறம்

நாளை வரும் பெருநாளை வரவேற்கின்றேன்
இன்றே,
உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கின்றேன்

உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
தோழமைகளுக்கும் உள்ளங்களுக்கும்
என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

உணர்வோடு உறவாடு


இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்

உதிரம்தந்து உழைப்பும்தந்து

உயிரைக்கூட தரதுணிந்த
உறவுகளை உதறிவிட்டு
ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து

தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை

 பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள்,

பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை

பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில்

விளிம்பிலிருந்தா குதித்தோம்
இல்லையே
தந்தையென்னும்

உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும்

உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது

அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம்

வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு

உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை

இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை

தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை

உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின்

உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு

விலகிவிடும்போது
நீ ஓடித்ஓடி தேடிய உயிரற்ற காசால்
கலங்கத்தான்முடியுமா--இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின்

சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின்

மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது

கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு
நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம்

பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை

உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும்

வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து

வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட

பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள்

விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-
ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள்

வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/

உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும்

வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

//இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான வரிகள் //

பாவமன்னிப்பு


எங்கள் இறைவா!
அகிலத்தின் அதிபதியே!
ஆட்சி செய்பவனே!
இரக்கமுள்ளவனே!

ஈகையாளனே!
உறுதியாளனே, உண்மையாளனே!
ஊக்கமளிப்பவனே!
எல்லைகளை கடந்தவனே!
ஏற்றமுடையவனே!
ஐபூதங்களையும் அடக்கி ஆள்பவனே!
ஒரு சிறு தீங்கும் இழைக்காதவனே!
ஓர்மை நிறைந்தவனே!
எங்கள் பிழைகளை பொறுக்கச் சொல்லிமன்றாடி நிற்கிறோம் இறைவா!

எங்கள் இறைவா!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்புரிந்தும்
புரியாமலும் கூட்டத்திலும் தனிமையிலும்
ரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்த ஒவ்வொரு சிறிய பெரிய
பாவங்களையும் மன்னித்தருள்வாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் உடல் உறுப்புக்கள் செய்த

ஒவ்வொருபாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

எங்கள் இறைவா!
பூமியில் பிறந்த நாங்கள் புண்ணியம் செய்வதை விட்டுவிட்டு
பாவங்களின் பக்கம் எங்கள் முகங்களையும் எங்கள் மனங்களையும்
பிணைத்துவைத்திருக்கின்றோம் அதிலிருந்து
எங்களை மீட்டெடுப்பாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் இதயங்கள் அழுக்கடைந்திருக்கிறது பலவிதங்களில்
பாவங்கள் புதைந்துகிடக்கிறது எங்கள் உள்ளங்களை தூய்மைப்படுத்தி
எங்கள் எண்ணங்களை தெளிவானதாக்கி வைப்பாயாக!

எங்கள் இறைவா!
நாங்கள் பலவீனமானவர்கள்
ஒன்றும் தெரியாதவர்கள்
மாய உலகில் சிக்கியவர்கள்
வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்
நல்லது கெட்டது என்று தெரிந்தும் பல
நேரங்களில்தவறிழைக்ககூடியவர்கள் இறைவா!

எங்கள் ஒவ்வோர் உறுப்புகளும் பாவத்தில் மூழ்கியிருக்கிறது
எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு எங்கள் பாவங்களை போக்கிவிடு
எங்களின்
கவனக்குறைவுகளை நீக்கிவிடு

எங்கள் இறைவா!
பாவமன்னிப்புக்கேட்டு தலைகுனிந்து நிற்கிறோம்
கைகளை ஏந்தியவண்ணம் நிற்கிறோம்
எங்கள் கைகளை வெறுங்கைகளாக தட்டிவிடாதே!
உன் சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்
எங்கள் கோரிக்கைகளையேற்று எங்களின் பாவங்களை மன்னித்து
எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!

எங்கள் இறைவா!
எங்களை ஷைத்தான்களின் தீங்கைவிட்டும்
கொடியமனிதர்களின் தீங்கைவிட்டும்
கொடிய வியாதிகளின் தீங்கைவிட்டும்
நேரான பாதையிலிருந்து வழி தவறுவதைவிட்டும்
கெட்டவர்களிடம் கூட்டு சேர்வதைவிட்டும்
நல்லவர்களிடமிருந்து பிரிவதைவிட்டும்
தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதைவிட்டும்
எங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கிழைப்பதைவிட்டும்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதைவிட்டும்
அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பதைவிட்டும்
அநியாங்கள் செய்வதைவிட்டும்
அத்துமீறிய செயல்களைவிட்டும்
எங்களை காப்பற்றுவாயாக! எங்களை காப்பாற்றுவாயாக!

எங்கள் இறைவா!
புனிதமாதத்தின் இறுதியில் இருக்கிறோம்
எங்கள் பிராத்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக
இம்மாதத்தின் பொருட்டால்
எங்கள் பிழைகளை மன்னித்தருள்வாயாக!
இந்நோன்பின் பொருட்டால்
எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக!
வணக்கங்களின் பொருட்டால்
எங்கள் தவறுகளை மன்னித்தருள்வாயாக!
இனி தவறுகளின், பாவங்களின், குற்றங்களின்
பக்கமே எங்கள் உடலும் உள்ளமும் திரும்பிவிடாதவாறு
நேரான வழியில் எங்களை நடத்திச்செல்வாயாக
எங்களை பாதுக்காப்பாயாக!
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக!

எங்கள் இறைவா!
உன்னிடமே உதவி தேடுகிறோம்
உன்னிடமே எங்களை மன்னிக்கச்சொல்லி நாடுகின்றோம்
எங்களை மன்னித்து உன் அருளை எங்கள்மீது புரிந்தருள்வாயாக!
புரிந்தருள்வாயாக! புரிந்தருள்வாயாக! ஆமீன்...




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்





விழிப்”புணர்வு”



விழியே
கதை எழுதி எழுதி ஏங்கவைப்பதே
உன் விளையாட்டாகிவிட்டது

எழுதும் கதைகளை
வாசித்தும் வாசிக்காமலும்
மனங்களெல்லாம் மருகித்தவிக்கிறது


விழியே உன் வழியே-பல
விபத்துக்கள் நேர்க்கின்றன

உன்னால் பலர் வழுக்கிவிழுவதும்
வாழ்வு இழப்பதும்
வழக்கமாகிக்கொண்டே போகிறது

விழியே ஒளிதரும் உனக்கு
பிறறின் இருள் எதற்கு

உன்னால் மன ரணங்களும்
மரணங்களும் நிகழ்கிறது

விழியே! விழிப்புணர்வோடு இரு
இல்லையென்றால் உனக்கும்
விபத்துக்கள் வந்தடையகூடும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

வீழ்ந்தே கிடந்தால்?


வாழ்க்கையை வாழத்தானே வந்துள்ளோம்
வா
இந்த வாழ்க்கையை வென்றுபார்ப்போம்

வழுக்குப்பாறையின்மேல்
ஏறுவதுபோல்தான் வாழ்க்கை
வழுக்கிவிடுமேயென்று
நீ வலுவிழந்தால்
வாழ்வை தொடங்குவது எப்போது?

துயரங்களை கண்டு துவண்டு விழுந்தால்
நீ சிகரங்களை தொடுவது எப்போது?
கவலையே எனக் கலங்கிகொண்டிருந்தால்
கண்ணீருக்கு ஓய்வுகொடுப்பது எப்போது?


கண்களில் தூசி விழத்தான்செய்யும்
அதற்காக யாரும்
கண்களை கட்டிக்கொண்டு
நடப்பதில்லையே!
புனிதபூமியில் பிறந்தவிட்டபின்னே
புழுதிகளைகண்டு அஞ்சலாமா?

பிறக்கும்போது எவருமே
ஏற்றத்தாழ்வோடு
பிறப்பதில்லை ஒருதுளி நீரில்
வெளிவருகிறோம் -இதில்
விதிவிலக்கில்லை

வேதனைகளா?
அதை ”வெற்றி”லையாக்கி
சுருட்டி மடி துவட்டித் துப்பு
வெற்றியின் காரம் உள்ளிறங்கி
வேதனையின் இலை
வெளியில் விழட்டும்.

மனதில் இருள்சூழ்ந்துவிட்டதேயென
கண்களைமூடிக்கொண்டால்
வெளிச்சம் வருவது எப்படி?
ஒளிக்கு வழிவிட்டு விழிகளை திற-
உன் உள்ளத்திற்குள்
வெளிச்சம் வேகமாக பரவட்டும்.

விழுந்துவிட்டோமே என
வெக்கப்பட்டுகிடந்தால்
எழுவது எப்போது?

எழுந்துவா தோழமையே!
இலக்கைதொட ஏணியில்லையேயென
நினைத்து மனதை தளரவிடாதே -உன்
துணிவைக்கொண்டு
ஒரு தோனியை உருவாக்கி
அதில் உறுதியோடு துடுப்புபோட்டு –உன்
இலக்கைநோக்கிப்புறப்படு

தூரம் தூரம் என்று நினைத்தால்
தொடும் விரல்கூட தூரமாகிப்போகும்
அருகே எனநினைத்துப்பார்!
உலகவிவரம்
உன் விரல்நுனியில் வந்தடையும்.

குட்டைநீராய் கிடந்து-உனை
நீயே சிறைபடுத்திக்கொள்ளாமல்
அருவி நீராய் பாய்ந்துவா
அதிலிருந்து
தெளிந்த நீரோடையாய் ஓடு

சிலர் கல்லெறிந்து கலக்கலாம்-சில
சாக்கடைகள் சேரலாம் அதையெல்லாம்
சரிசெய்து
சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு

ஆங்காங்கே இளைப்பாறிக்கொள்
அப்போதுதான்
சலைக்காமல் செல்வாய்
வாழ்க்கைமுழுவதும் வெல்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேரி இன்பம் பெறுவாய்.


தந்தையின் தவிப்பு


தந்தையின் தவிப்பு




எனது அன்பு மகனே

அன்னையைமட்டும்

அணைத்துகொள்கிறாய்

இந்த தந்தையை ஏன்

தள்ளிவைத்தே பார்க்கிறாய்



ஈன்றெடுத்தவள்

அன்னையென்றாலும்

அதில் இந்தத்

தந்தைக்கும் பங்குண்டல்லவா



சிலஇடங்களிலும் சினிமாக்களிலும்

தந்தைகளை தரக்குறைவாகவே

சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்

தவறாகவே

சித்தரிக்கபடுகிறது!



சில சமயங்களில்

என் பாசத்தை உன்மீது

வெளிப்படுத்த தவறிவிடுவதால்

உன்மீது எனக்கு

பாசமில்லை என்றாகுமா



அன்னையும் தந்தையும் காட்டும்

அளவுக்கு மீறிய பாசத்தால்

குழந்தை

அல்லல்படகூடாதே என

என்பாசத்தை

பூட்டியே வைத்துள்ளேன்



அதை புரியாத நீ

என்னை ஒரு

பூச்சாண்டியைப்போலவே

பார்ப்பதைதான்

என்னால்

பொறுக்கமுடிவதில்லை



விரோதியல்லடா உன் தந்தை

உன்னை

இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட

என்னை நான்

மெழுகாக்கிக்கொண்டேன்



உருகுவதற்காக

வருந்தாது மெழுகு

தன்

உயிரைக்கொன்று

ஒளியை மிளிரவைக்கும்

அதுபோல்தான் நான்



மகனே

நீ உயிர்வாழ

உன் அன்னை -தன்

உதிரத்தைப்

பாலாக்கித்தந்தாள்



நான்

உனக்காக என் உயிரையே

உழைப்பாக்கி தந்தேன்

உணர்வாயா?

என் உணர்வுகளைப்

புரிவாயா-இந்த

தந்தையின் தவிப்பை

தவப்புதல்வனே

நீ,,,,,,,,,,,,,அறிவாயா?





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பட்டங்கள் பல



முதிர் கன்னியாய்
முப்பது வருடங்கள்
காத்திருந்தாலும்
ஏனென்று கேட்க்காத
ஊர் உலகம்

காதலித்தவனையே
கைபிடித்துகொண்டு போனால்
அவளுக்கு கொடுக்கும் பட்டம்
”ஓடுகாலி”


ஊரறிய கைபிடித்து
காலமெல்லாம் கூடவே
கடைசிவரை வருவேனென்று
கட்டியவன்
திடீரென்று கலட்டிவிட்டு
காணாமல் போய்விட்டால்

வாய்கூசாமல் இவளுக்கு
கொடுக்கும் பட்டம்
”வாழாவெட்டி”

கட்டிய நாள்முதல்
கட்டில் ஆடியும்
தொட்டில் ஆடாவிட்டால்
அட்ச்சதை தூவி
ஆசிர்வதித்த அதே வாயால்
அஞ்சாமல் கொடுக்கும் பட்டம்
”மலடி”


விதி செய்த சதியால்
கட்டியவன் காலமாகிப் போக
கலங்கி நிற்கும் அவளுக்கு
கலப்படமே இல்லாமல்
கொடுக்கும் பட்டம்
”விதவை”

அடி பெண்ணே!

படித்து பட்டங்கள் பல
பெறா விட்டாலென்ன
பெண்களுக்காகவே
பல பட்டங்களை
வாரி வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்

வாழுந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
தன்மானமுள்ளவளென்று
உன்னை
இந்த தரணியே பேசும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அடியே அன்னகிளி


அடி கானகருங்குயிலே
கரிசல்காட்டு பொன்மயிலே
மாலவேளயிலே
உன்னகட்டிய மச்சான்
நாவருவேன்

தளதளன்னுசேலகட்டி
தலநிறைய பூவச்சி
தங்கச்சிலையாட்டம்
தமிழச்சியே காத்திருடி

சோலக்காட்டுக்குள்ள
நாம சோடிசேந்து போகையில
நம்ம காட்டிகொடுத்துவிடும்
உன் கெரண்டகால்கொலுசு

கெலட்டி வைச்சிபுட்டு
என்கைபுடிச்சி வாடிபுள்ள
கம்மாகரவோரம்
கதகதையா பேசிக்கொள்ள

உன் செந்தூரகண்ணத்துல
குழிஒன்னு இருக்குபுள்ள
அதகண்டுகொண்டே வருகையில
உனக்குள்ள விழுந்தேன்புள்ள

உதட்டோர மச்சமொன்னு
என்ன மொரச்சி மொரச்சி
பாக்குதடி
உயிரோடு கோக்கச்சொல்லி
என்கிட்ட உத்தரவு
கேக்குதடி

ஆயிரம் மையில்தாண்டி,
ஆசமச்சான் கனவுகண்டுகாத்திருக்கேன்
ஆதரவா ஒருவார்த்த
அன்னக்கிளியே தூதுவிடு.
அடுத்தமாதம் வந்திடுவேன்
எதிர்பர்த்திடு அன்போடு.......

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என் உறவே


காலைபனித்துளி
கதிர்களில் ஆட –அதை
கண்ட என்கண்கள்
கும்மாளம் போட
மகிழ்வென்னும் சோலைக்குக்குள்
மத்தாப்பூ பூத்ததுபோல் :
ஆனது நம் உறவு;


சூரியனின் சூடு சுல்லென்று சுட
–அதை
சில்லென்ற காற்று வருடி விட
சுறுசுறுப்பான உடல்
சிட்டாய் பறந்ததுபோல்
:ஆனது நம் உறவு;


அந்திவானம் மஞ்சள் அரைக்க
அதை அவசரமாய்
கறுத்தமேகம் மறைக்க
மூடியிருந்த முக்காடை
கிழித்துக்கொண்டு
எட்டிப்பார்த்த ஒளிகதிர்களைபோல்
:ஆனது நம் உறவு;


இருண்ட வானத்தில் 
சின்னதாய் சிதறிகிடக்கும்
மின்மினிபூச்சிகளாய்
நட்சத்திரங்கள் மின்ன,
உருண்டை உலகில்
உன்னதவானில்
உலாவரும் வெண்ணிலாவைபோல்
:ஆனது நம் உறவு;


கறுத்து வெளுத்த மேகங்கள்
பவணி வர -அதனுடன்
கண்ணைபறிக்கும் வெளிச்சத்துடன்
மின்னல் இணைய
பட்டாளத்து வெடிசத்தமாய்
இடிகளும் வெடிக்க
வெள்ளைமழை
வருகை தருவதுபோல்
:ஆனது நம் உறவு;


அடர்ந்த காட்டுக்குள்
அத்தனைகுயில்களும் கானம்பாட
அதைக்கேட்டு அங்குள்ள
மரங்களெல்லாம் தன்னைமறந்து ஆட
சில்லுன்று  வீசும் தென்றல்காற்றில்
சில்வண்டுகளின் ஸ்ரிங்காரம்போல்
:ஆனது நம் உறவு;


மலைக்காதல்
வெள்ளையருவி  நீரையெல்லாம்
மண்ணுக்கு தானமாய் தர
பூமியைநோக்கி
வேகமாய்வந்து விழ
அதிலிருந்து
எழும் வெண்பஞ்சு புகைபோல்
:ஆனது நம் உறவு;

எனதுறவே!

உறவுக்குள் உயிராய்
உறைந்துவிட்டபின்பு
நம் உறவுக்குள்
இனி பிரிவென்பதேது
உயிரோடு உயிர் சேர்ந்த உறவு
இதில்
வேண்டாமே என்றைக்கும் பிரிவு.........


//இக்கவிதை உறவா பிரிவா என்ற தலைப்புதந்து
எழுதசொன்ன கவிதை,
இம்மாத தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதி வெளியான கவிதை://

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்

கொஞ்சம் கேளுங்களேன்



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையானது

”இனியாவது”

கலந்து ஆலோசியுங்கள்
கருகலைப்புகள்
என்ற பெயரில்நாங்கள்
கொல்லப்படாமலாவது
இருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

உயிரே உயிரே உருகாதே


மனபாரம் அதிகமாவதால்
மருந்துக்கு பதிலாக
விசமென்று தெரிந்தும்
விதைக்கிறாய்
உன் உதட்டில்


உதடு காய்யும்போதெல்லாம்
நாக்கால்
உமிழ்நீர்கொடுத்து உதவுகிறாய்
அதை
உள்வாங்கிய குழாய்
உள்ளுக்குள் சென்று
உருக்குலைக்கிறது
உன்குடலை

நெருபென்று தெரிந்தும்
கொழுத்திகொள்கிறாய்
குடலை வருத்திக்கொல்கிறாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்துபோகிறாய்
உயிரை இழக்கப்போகிறாய்


உன்வசம் நீனில்லை
எதற்க்கிந்த புகையிலை
புண்பட்ட நெஞ்சிற்கு
தீ,, பந்தம் எதற்கு
இதை உணர்ந்தால்
நீ  என்றும் உனக்கு
இல்லையேல்
விடியாது கிழக்கு

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

புகைவண்டி



கோ ஓஓஒஒஒ என்ற ஓசையுடன்
தன் பரிவாரங்களை
பின்னால் இழுத்துக்கொண்டு

புறப்பட தயாரானது
புகைவண்டி

இருவரிக்கவிதைகளாய்

இணைந்திருந்த
தண்டாவளத்தின்மேல்

தன்நீண்ட இரும்பு உடலை
இழுத்துக்கொண்டு தனக்கு

இணையில்லை
என்பதுபோல்

தன்னை ஆட்டி ஆட்டிச் செல்கிறது

அதன் ஓசைகள்

ஏழு ஸ்வரங்களையும்
ஒன்றாய் இணைத்ததுபோல்

ஒவ்வொரு சமயத்திலும்
ஒவ்வொரு ஓசை எழுப்பியபடி

ஒய்யாரமாய் ஓடும்

அதன் உள்ளுக்குள் அமர்ந்திருக்கும்
அத்தனை பேருக்கும் ஆனந்தத்தில்
ஆழ்த்துவதுபோல் மனம் ஆர்ப்பரிக்கும்


கூட்டமாய் போகும்போது

கும்மாளம் அடிக்க,

காத[லி]லன் கூடபோகும்போது
பார்வைகளை பறிமாறிக்கொள்ள,

கணவருடன் போகும்போது

தோள்களே தூளியாக்க,

தனியாய் போகும்போது
மனதின் நினைவுகளை
அசைபோட்டுக்கொள்ள,

தன்னை சன்னலோரம் சாய்த்தபடி
சந்தித்தவைகளையும் சிந்தித்தவைகளையும்
நினைவுகளுக்குள் நிலைநிறுத்திக்கொள்ள,
புதியவர்களாக இருந்தால்
நட்புகளை பகிர்ந்துகொள்ள
என


அதனுள்

பலவித பரிமாணங்களை
பார்க்கலாம்
ரயில் ஸ்நேகம்

சிலநேரம் நம் ரணங்களுக்கு
மருந்தாகும்
அதுவே சில நேரம்

நம் உணர்வுகளை ரணமாக்கும்


பாலங்களை கடக்கும்போது

தடக் தடக் டடக் டடக்
ஒரு அச்சம் கலந்த இம்சை
அதுவும் ஒருவகையில்

ஆனந்த அவஸ்தை


எதிரே அசையும்

பச்சை புடவையை பார்த்ததும்
ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஜிஜிக் ஊஊஉம்

என்ற உருமலோடு
இந்த இரும்பு மனிதனும்

தன் உடலனைத்தைம்
தன் கட்டுக்குள் கொண்டுவந்து

சன்றென்று நிறுத்திடுவான்


எதையோ

விட்டு விட்டுபோவதுபோல்
இதுவரைகூட வந்த
அத்தனை

நிஜங்களையும் நிழல்களையும்
நினைத்தவாறு

நின்ற இடத்திலிருந்து
திரும்பித்திரும்பி பார்த்தபடி போவோம்

இந்த
நிலையில்லா உலகை நினைத்தபடி”

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்


வருவாயா வருவாயா


வண்ணத்துப்பூச்சியே வர்ணத்துப்பூச்சியே
உன் வண்ணங்களைகண்டு
நான்வாயடைத்துப்போனேன்
இத்தனை
வர்ணங்களையும் சுமந்துகொண்டு
நீ
சுகமாய் பறப்பதை பார்த்து
நான் பூரிப்புகொண்டேன்


நீ
வளைந்து நெளிந்து
காற்றில் மிதப்பது கண்டு
கண்சிமிட்ட
மறந்து நின்றேன்

மலர்களிமேல்
மட்டும்தான் உன்பிரவேசமா-
இந்த
மங்கைமேல்லெல்லாம்
கிடையாதா


அழகிய வண்ணமே
உன்னை என் தோழியாய்
அழைக்கிறேன்
நானும் மலர்தானே
எனைநாடிவருவாயா
என்தோளில் அமர்வாயா

என் தோட்டத்து முற்றத்தில்
என் முட்டுக்காலை கட்டியபடி
அந்தமுழுநிலவை ரசித்தபடி
நான் தனிமையில்
அமர்ந்திருக்கும் வேளையில்
என்உள்ளங்கையில்
வந்து அமர்வாயா


உன் வண்ணமான
வர்ணங்களை
என் கைகளில் ஏந்தி
காணவேண்டும்
உன் பஞ்சு மேனியை
என் பிஞ்சு
விரல்களால் தொட்டுத்தீண்ட
வேண்டும்


சுற்றித்திறியும் சுகந்தமே
சொல் சொல்
எப்போது வருவாய் என
உனைக்காண
சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன்
உன்னைச்
 சொந்தங்கொண்டாடக்
 காத்திருக்கிறேன்.




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்

அன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்

1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்



இன்பம்- என் இறைவனை நேசிப்பதில்



ஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்
4

உள்ளம்- அது என்னவனின் சொந்தம்


ஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்
6


என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடை



ஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு


ஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்


ஒருவருக்கொருவர்- விட்டுகொடுத்து வாழநினைப்பது
8



ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]
7

ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பது



அஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்

ஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,

எனக்கு கிடைத்தமுதல் விருது



இத்தளத்திற்காக இந்த விருதை வழங்கி என்னை கெளரப்படுத்திய
என் அன்புத்தோழி சாருலதவிற்கு என்மனமார்ந்த் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் இவ்விருதை இங்கு வந்து செல்லும் அ
னைத்து தோழமைகளுக்கும்
தந்துமகிழ்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ரகசியங்கள்

முத்தமிடும்போது
முத்திரைபதிக்க
முன்னுரை,,,,,,
இந்த மூக்குத்தி



காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
 இந்தக் கம்மல்


சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீதமாய்
ஸ்வரம் கொடுக்கும்
இந்த சங்கிலி



வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப்பிடித்து
இழுத்துக்கொள்ளும்
 இந்த வலையல்



மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
இந்த மோதிரம்


காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
இந்த கால் கொலுசு



பெண்ணரசிகளே
புன்னகையுடன் பொன்நகையும்
சேர்த்திடுங்கள்
புதுமணத்தம்பதிகளாய்
வாழ்ந்து மகிழுங்கள்.......

அன்புடன் மலிக்கா


இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது