நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலையுலகத்தில் நான்.


பதிவெழுத வந்ததால் கிடைத்த நிகழ்வுகளும் சில நெகிழ்வுகளும், காலங்கள் கடந்துவிட்டபோதும் மனதில் கிடக்கும் சந்தோஷ தருணங்கள்.அதை பகிர்வதில் மகிழ்ச்சியே!
தனக்குள் உதிக்கும் அத்தனையும் எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கவே நானும் பதிவர்களில் ஒருத்தியாக வலம்வர நினைத்து. ஏதோ எனக்கு தெரிந்தவைகளை கவிதைகளென்னும் பெயரில் கிறுக்கிவருகிறேன்.
என் எழுத்துக்கள்கூட சிலருக்கு பிடித்திருக்கிறது எனநினைக்கும்போது மனது சந்தோதங்களை உணர்கிறது. அப்படி எழுத தொடங்கியதின் விளைவு. பல நல்ல உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுதந்தது என்றால் அதுமிகையாகது.வலையுலகத்தில் நானுமிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே

கடந்த 28-8-2010. அன்று எங்கள் வீட்டில் விசேசத்திற்காக 15 நாள் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சில நல்ல உள்ளங்களையும் காணவும்
அன்பு பொங்கிய மனங்களிடம் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அன்பு சாரதாம்மாவிடம் பேசியனேன். போனிலேயே பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டார்கள். தாய்மையின் அன்பும் பேச்சும் என்னை நெகிழவைத்தது அவர்களால் வரயிலாது கன்னியாகுமரியில் இருக்காங்க நானும் போகமுடியாச்சுழல். அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.
சாராதாம்மா நிச்சயமாக வருவேம்மா.அடுத்த லீவில் உங்களைபார்க்க!

அப்புறம் நேரில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திய சகோதரர் காஞ்சி முரளியென்னும் முரளிதரன் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வீட்டின் விசேசமன்று வந்திருந்தார்கள். நெடுந்தூரம் என்றபோதும் உடல்நிலை சற்று ஒத்துழைக்காபோதும். என் எழுத்துக்களின் வாசகராய். விமர்சகராய். பிழைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராய். எங்கள்சகோதரராய்.தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு. என் அன்னையிடம் என்னைபற்றி இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை இப்படியொருமகளை பெற்றெடுக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவரின் எழுத்துக்கள் பலரையும் சென்றடைந்துள்ளது என சிலபல நல்லவாக்கியங்கள் சொல்லியபோது, பொறுப்பாலும். மனதாலும்.வயதாலும்.எவ்வளளோ பெரியவங்க சிரமம் பாராமல் எங்களைக் காணவந்ததே சந்தோஷத்தை தந்தது.அதுவும் அன்பு மனைவி, அருமை மகள், பாசமான அக்கா பசங்கள் ஆகியோரோடு வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது.அண்ணி வசந்தியையும். மருமகள் சாருவையும் எனக்கும் என்வீட்டாருக்கும் ரொம்ப பிடித்துபோனது.

அடுத்து கோலங்கள் சாரூக்காவிடம் போனில் பேசினேன் மிகக்குறுகிய காலமாக இருந்ததால் அக்காவால் எங்க ஊருக்கு வரவோ நான் கும்பகோணம் செல்லவோ நேரில் சந்திக்க முடியாமல்போனது மனதுக்கு வருத்தம்தான்.அக்காவிடம் பேசும்போதே நேரில் சந்தித்த திருப்தி குட்டிச்செல்லங்களிடம்தான் பேசமுடியவில்லை. அக்காவின் அம்மா ஊர் தஞ்சையென்றாலும் அக்கா இருப்பதோ கும்பகோணம் என்ன செய்ய நான் இருப்பதோ மு. அ. வில் இன்ஷா அல்லாஹ் வரும் லீவில் கண்டிபாக சந்திக்கனும்.யக்கோவ் தேடுதா? .

அடுத்து சுஜி, அவரிடமும் போனில் பேசினேன்.அன்போடு அழகாய் பேசிய சுஜி,  அக்கா உங்கள் கவிதைகளை புக்காக தொகுத்து வெளியிடுங்களேன் என்று தன் விருப்பதைசொன்னார் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும் சுஜி.
அடுத்து. என்தந்தையின் ஊரான அதிரை யுனிக்கோட்
”தேனி”திரு உமர்தம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.தேனி உமர்தம்பி அவர்களின் கணினி சேவையை பாராட்டி அவர்கள் பெயரில் கோவை செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என அமைத்து அவர்களை  கவுரவித்தது தமிழக அரசு.அதற்கு சில முயற்சிகள் செய்தது நானும் என்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்களும்[இங்கு கிளிகினால் முழுவிபரம்] எங்கள் தெருவுக்கு முதல் தெருவு அதுவும் என் தந்தையின் மிக நெருங்கிய பால்ய சினேகிதரின் உறவுக்காரர்தான் என எனக்கு அங்கு அவர்களின் வீட்டில் பேசியபோதுதான் தெரிந்தது.

தந்தை ”தேனி”உமர்தம்பியின் மனைவி அவர்களிடமும்,மற்றும் மருமகள் அவர்களிடமும் பேசினேன்.
தற்போது உயிரோடு இருந்திருந்தால் இவ்விருது கிடைத்தமைக்கு எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் என மனமுடைந்து அவர்களின் மனைவி கூறியபோது எனக்குள் இனம்புரியாத வருத்தம் இறுக்கிப்பிடித்தது. எந்த ஓர் ஆத்மாவுக்கு அது செய்த நன்மையின் பலனை எவ்வழியிலாவது வழங்கிவிடுவான் இறைவன்.அதோடு மறுமையிலும் நற்பாக்கியதை வழங்குவான் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு நோன்புக்காலம் என்பதால்,நிறையநேரம் இருக்கமுடியாததால் கிளம்பினேன் 10.நிமிடந்தான் என்றபோதும் மனநிறைவாக இருந்தது.என் எழுத்துக்களால் இன்னும் நிறைய நல்லவைகள் செய்யவேண்டுமென மனதுக்குள் நினைத்தவன்னம் வெளியேறினேன்.

நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுதும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வலைதளத்தின் மூலம் கிடைக்கபெற்ற சந்தோஷ தருணங்களை மனதில் நிலைநிறுதியவளாய் இன்னும் கிடைக்கபோகும் பாச நேசங்களையும். அன்பு அறிவுரைகளையும் எதிர்நோக்கியவளாக!
என் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் தோழமைகளாக. உங்களின் பாசத்தை என்றும் விரும்புபவளாக.என் எழுதுப்பயணத்தை தொடரவிரும்பும்
என்றுமே மாறா அன்புடன்

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

 கலைச்சாரலில் இப்படியும் ”கடி”நோய்கள் 

ஊமையான உணர்வுகள்.. ஒரேஒரு கிளிக்

ரம்பருந்த வீணைபோல்
நாதமிழந்த சந்தங்களாய்
நாட்டியத்தின்போது
அறுத்துக்கொண்ட சலங்கைகளாய்
நயமிழந்து, சுதிகுறைந்து,
சுகவீனமாய் சுருளும் உள்ளம்

றுத்து ஓடும் ரத்தம்போல்
ஆழ்மனதில் ஓடிடும் ஆரா ரணம்
ஆற்றவும் தேற்றவும் ஆளில்லாமல்
அயர்ந்து சோர்ந்து திண்டாடும் தினம்

சுகங்களை இழந்த சோலைகள்போல
சோகங்கள் சூழ்ந்த இருளின் தேகம்
சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்
சுகமாய் இருபதாய் நாளும் நடிக்கும்முகம்

வித வித கனவுகள் கண்ட வாழ்க்கை
விதிவழியைக் கடந்து வேகமாய் ஓட
வாழ்க்கையின் அர்த்தம் விளங்க மறுத்து
வசைவுகள் நாளும் வாங்கிக் குவித்து
விபரமறியா குழந்தையாகி
விம்மி விம்மி வெதும்பும் மனம்

வெடித்து சிதறும் மனதின் உணர்வு-அதை
வெளியே சொல்லா முகத்தின் அறிவு
விடியும் தருவாய் எதிர்நோக்கி
வெளிச்சம் தேடும் விசித்திர நெஞ்சம்

னமிணையாத மணக்கோலம்
மார்பைத் தாக்கும் வீசிய சொல்லும்
மரபுகளென்று வகுத்த கோலம்
மல்லுக்கு நிப்பதோ விதண்டாவாதமென்று
மறைத்து வாழும் மங்கைகள் ஏராளம்

மையின் கனவு ஊமையாகும்
ஊரறிச் செய்தால் கேலியாகும்
உலகம் சுற்றும் வரையில் ஊர்கோலம்
ஊர்வசிகளின் உள்ளத்தில்
உணர்வுகளின் தேக்கம்
உதறி வெடித்தால் சிதறிப்போகும்

சிதையவும் வழியில்லை சீரழிய மனமில்லை
சிந்தும் கண்ணீரில் சிறுதுளியும் பொய்யில்லை
சீராகும் வாழ்க்கையென்ற சீரிய எண்ணத்தில்
சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்

பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...

டிஸ்கி.//என்னுடைய இந்த கவிதை தமிழ்குறிஞ்யில் வெளியாகியுள்ளது

நன்றி தமிழ்குறிஞ்சி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

ஓடிவாங்க கானம் அழைக்கிறது [தொடரோ தொடர்]

என்ன எல்லாரும் வந்தாச்சா ஒன்னுமில்லைங்கோ பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் வேணுமுன்னு சின்னப்புள்ளைங்க கேட்டுகிட்டாகளா. நாமளும் அவங்களோட கூட்டாச்சா அதாங்க [சின்னப்புள்ளையாச்சே] அதான் அவங்களோட கூட்டுசேந்துட்டேன் அப்படியே அவங்க சொன்னதையும் நம்ம ரசனைக்கு தகுந்ததுபோல் தேர்ந்தெடுத்துட்டேன் நல்லாக்குதான்னு கேக்கதான் கூப்பிட்டேன் நால்லாக்குதா

ஆசை

 புல்வெளி புல்வெளி தன்னில்
 பனித்துளி பனித்துளி வந்து
 தூங்குது தூங்குது பாராம்மா அதை
 சூரியன் சூரியன் வந்து
 செல்லமாய் செல்லமாய் கிள்ளி
 எழுப்புது எழுப்புது ஏனம்மா

 இலைகளில் ஒளிர்கின்ற பூக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
 கிளைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு இசைமீட்டும்.

இயற்கை ரசித்து ரசித்து ஆனந்தப்படவைத்து அதனுள் மூழ்கவைக்கும் கானம்..

 மேமாதம்.

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன்
மடிமீது ஓரிடம் வேண்டும்.
மெத்தைமேல் கண்கள் மூடவுமில்லை
உன்மடிசேர்ந்தால் கனவுகள் கொள்ளை

வாழ்க்கையின் ஒருபாதி நானிங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நானிங்கு ரசிப்பேன்
காற்றிலொரு மேகம்போல் நான் என்றும் மிதப்பேன்.

தனக்குள் எழும் எண்ணத்தையெல்லாம் வர்ணனையோடு
வடிக்கும் வண்ணமிகு  கானம்.

 மெளன ராகம்.

சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாட்டும் தேன்மொட்டு நானா நானா.

சொல்லதான் எண்ணியும் இல்லையே பாசைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்..

விலகிய அன்பு நெருங்கும்போது ஏற்படும் உணர்வை 
வெளிச்சமிட்டுகாட்டி வெக்கப்படவைத்து புரியவைக்கும் கானம்

 அலைபாயுதே.

 எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதை
 தவனை முறையில் நேசிக்கிறேன்.

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி

அழகாய வரிகளால் இதயசெய்திகளை
இளகியகுரலில் சொல்லும் கானம்.


ஆட்டோகிராஃப்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..

யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒருகனவுகண்டால் இதை தினம் முயன்றால்.

சோர்ந்துகிடக்கும்  மனஉணர்வுகளை தட்டி எழுப்பும் கானம்


மெல்லத் திறந்தது கதவு

ஊருசனம் தூங்கிருச்சி
ஊதக்காத்தும் அடிச்சிருச்சி
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே!

உன்னெ எண்ணிநானே உள்ளம் வாடிபோனேன்
கன்னிபொண்ணுதானே ஏன்மாமனே
ஏன் மாமனே!

தன்மன எண்ணத்தை ஊரடங்கியபின் உரக்கபாடி
உள்ளத்தில் உள்ளத்தை ஊரறியச்செய்யும்  கானம்

 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எங்கே எனது கவிதை
கனவிலே! எழுதிமடித்த கவிதை.
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதோ
கவிதைதேடிதாருங்கள் இல்லையென்
கனவை மீட்டுத்தாருங்கள்

தொலைத்த காதலை தொலைக்கமுடியாமல்
தவிக்கும் தவிப்பை உணர்த்தும் கானம்

 தீபாவளி

 கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் ஒருமயக்கம் அதை ஏற்று நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
ரெக்கை விறிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே!

காதலுக்கான எதிர்பார்ப்பில் தன்காத்திருத்தலை 
வெளிப்படுத்தும் காதல்  கானம்

ரோஜா
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவைத்த ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

நிறைவேறா ஆசையென்றபோதும் அதை நிறைவேற்ற
துடிப்பதுபோல் தூண்டிவிடும் கானம்.

வைதேகி காத்திருந்தாள்
அழகு மலராட அபிநயங்ககூட
சிலம்பொலியும் புலம்புவதைக்கேள்.
 விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பலயிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது..

பூங்காற்று மெதுவாக தொட்டாலும்கூட
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றதே!

ஓர் விதவையின் உணர்வுகளையும் வலிகளையும்
வழியும்கண்ணீரோடு வதைவதை  உணர்த்தும் கானம்..

டிஸ்கி// இந்த தொடரை எழுத அழைத்த ரோஜாப்பூந்தோட்டம்...
மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி
மாணவியரின் படைப்புலகம்  அவர்கள்.அழைத்த அழைப்பையேற்று
இத்தொடர்..

ஏதோ நமக்கு தெரிந்தவரை எழுதியாச்சி கவிதை ரசனைகளோடு கலந்த கானங்கள் மிகப்பிடிக்கும். ஆனால் நமக்கு அவ்வளவாக சினிமா சம்மந்தான தொடர்பு கிடையாதுங்கோ.
தொடரில் பங்குள்ள விடுத்த அழைப்பையேற்று இவைகளை தொகுத்துள்ளேன் பிடித்திருந்தால் கருத்திடுங்கள்
அவர்கள் சவாலுக்கு அழைத்த கவிதை இங்கே பதிந்துள்ளேன் அதையும் பாருங்க

அட என்ன போறீங்க நில்லுங்க நில்லுங்க விதிமுறையே இதை தொடரனுமுன்னுதான். இத்தொடரை எழுத நான் அழைப்பது

ஆமினா [க்கா]

ஜெய்லானி அண்ணாத்தே!

வினோ!

வெறும்பய.

அப்பாடா நம்ம வேலை முடிஞ்சது இப்ப கிளம்புங்கோ வர்ட்டா...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

கல்யாணச் சந்தையிலே!...போட்டோ மேல் ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

எங்களுக்கும் அருள்வாயாக!

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
அண்ட சராசரத்தின் அதிபதியே!
அருளும் அன்பும் நிறைந்தவனே!

ஆதம் நபியை மண்ணால் படைத்து
அவரிலிருந்து பல சந்ததிகளை
அற்புதமாக மனிதரில் விதைத்து
அகிலத்தை வலம் வரவைத்த
ஆற்றல் மிகுந்த மறையோனே!

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறு காலக் கட்டங்களில்
வெவ்வேறு நபிகளை உலகுக்கனுப்பி
விபரங்கள் விளக்க மக்களுக்கு
வாய்ப்பளித்த வல்லவனே !

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராஹீம் [அலை]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை
அனைவருக்கும் அறியத்தந்து
மனிதர்களின் பொறுமைக்கும்
மனஉறுதியான இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத் தந்து
மகத்துவத்தை ஏற்படுத்திய
மாபெரும் அருளாளளனே!

இப்ராஹீம் நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும் நாள்வரைக்கும்
இம்மக்கள் மறந்திடாதவன்னம்
இத்தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாளை
ஹிதாயத்தோடு தந்தத் தூயவனே!

இறையில்லமிருக்கு மக்காவிற்கு
இறுதிக் கடமையை நிறைவேற்ற
இனிதே சென்றுள்ள மக்களங்கே
இன்னலை நீக்க கண்ணீர் மல்க
இருகரமேந்திய இறையச்சதுடன்
இறைஞ்சி வேண்டி கேட்போர்க்கு
இன்முகம் நோக்கிப் பார்ப்பவனே!
இன்பத்தை வாரிக் கொடுப்பவனே!

எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...


ஹஜ் செய்வதோடு மட்டும் நம் கடமை முடிவதில்லை ஹஜ்ஜின் காரியங்களை முடித்து நாயனின் அருள் கிடைத்து நாடு திரும்பிவந்த பின், அதன்படி நடக்க வேண்டும். நாம் செய்த ஹஜ்ஜின் கடமை இறுதிவரை பலன் தருவதுபோல் நடக்கவேண்டும். பாவங்களைபோக்கிவிட்டு வந்து நல்லதை செய்து நன்மையின் பக்கம் நன்மை முதன்மைப்படுதல் வேண்டும். இதுவே நாம் ஹஜ் செய்ததிற்கான நற்பலனைத்தரும்..

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன்அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

என் எலும்பின் வழியே!...டிஸ்கி//
கிளிக் போட்டோவின் மீது ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

காற்றோடு காற்றாய்...

எல்லைகள் கடந்து
எதையுமே எதிர்கொண்டு
எதிர் திசையில் நின்றபோதும்
ஏகாந்தமாய் ஏந்திக்கொள்வதும்

பச்சைப் பசுமையின்மேல்
மையம் கொண்டு
பறக்கும் திறனையும்
கற்றுக் கொண்டு
பூக்களின்மேல்
மஞ்சம் கொண்டு
பூந்தென்றலாய் வீசுவதும்.

புயலாய் வருவதும்
புண்படுத்திப்
புறபட்டுப் போவதும்
புழுதியாய் வருவதும்
புகையேற்படுத்தி
புழுங்க வைத்துப் போவதும்.

வசந்தமாய் வருவதும்
வருடிச் செல்வதும்
தென்றலாய் வருவதும்
தாலாட்டிச் செல்வதும்.

மனரணம் அதிகரித்து
மண்டியிட்டு கிடக்கும்போது
மாசற்ற உன்தழுவலால்-மனதை
மயக்கங் கொள்ளச்செய்வதும்.

உடலென்னும் கூட்டுக்குள்
உன் ஊடுருவலில்லாமல்
உயிரது வாழதென அறிந்து
உள்ளும் புறமுமாய்
உறவாடி வருவதும்.

பட்டுடலையும் தீண்டி
பரம்பொருளையும் தூண்டி
பசியைக்கூட சீண்டி
பஞ்சாய் பறக்கவைப்பதும்.

வேடிக்கையாய் சிலநேரம்
விபரீதமாய் சிலநேரம்
வித விதமாய்
விஸ்வரூபம் எடுப்பதும்.

உருவமில்லாது
ஒருவார்த்தை சொல்லாது
உலுக்கியெடுத்து
உதறித் தெளித்து
உலகையே ஆட்டிவைப்பதும்
உனக்கு கைவந்தக்கலை

என் சுவாசக்காற்றே!
என்னவனின் சுவாசத்தை
எடுத்துவந்து என்னுள் புகுத்தி
உன்னைப்போல்
என்னையும் உருமாற்றி
காதலுக்குள்
காற்றாய் நுழைய வைத்ததேனோ!

உனக்குத் துணையாய்
எனைச் சேர்த்து
இவ்வுலகையே
என் கனவுக் கூட்டுக்குள்
கொண்டுவர வைத்ததேனோ!.....

திண்ணை யில் வெளியாகியுள்ள என்கவிதை..
மிக்க நன்றி திண்ணை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

தீப ஒளிபோல் தகதகக்கும் கவிதை.முதலில்
தீபஒளியில் திழைக்கும் மனங்கள் அத்தனைக்கும்
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்போடு வாழ்த்துக்களை வழங்குவதில்
திருப்தியடையும் மனம்..
[மறந்துடாம தித்திப்பு பார்சல் அனுப்பிடுங்கப்பு]

அப்புறம்
என் அன்புமகன் எழுதிய முதல் கவிதை. நேற்று இரவு திடீரென்று மம்மி நான் ஒரு போயம்[poem]] சொல்லவான்னா சொல்லுங்களேன்பார்ப்போம் அப்படின்னே. உடனே இந்த கவிதையை இருவரிகள்சொல்லி முடிக்கும் சமயம் என் கன்னங்களில் கைவைத்து மம்மி ஒரு இதயம்தானே மம்மி இருக்குன்னு அவன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு தலையை சாய்த்து என்முகத்தை நோக்கிய அழகிருக்கே!!!!!!!!! அப்பப்பா அதை சொல்லில் வடிக்க இயலாது.
அத்தனை அன்பா என்மேல் உனக்கு என்றேன்.
பின்னே இருக்காதா என்செல்ல மம்மியாச்சேன்னு கட்டிக்கொண்டே.
[இன்னமும் அந்த சிலிர்ப்பு போகவில்லை]
நிறைய மனசுக்குள்  கவிதை இருக்கு மம்மி  அப்பப்ப சொல்லுவேன் ஓகேவான்னா. ட்ரிப்ள் ஓகே என்றேன்.. .

நாம்பெற்ற பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களும் நம்மை அசரவைக்கிறத்து. அது நடையாகட்டும் உடையாகட்டும் செயலாகட்டும் சிரிப்பாகட்டும். அதுசாதரணமாகவேயிருந்தாலும். ஏதொ நம்குழந்தை சாதித்துவிட்டதைபோன்ற ஓர் உணர்வுகள்தான் நம்மை ஆட்கொள்ளும்.

மரூஃப்பிற்கு ஃபுட்பால் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். அதேபோல் ஆர்ட் டிலும்,  எதைகாண்கிறானோ அதை வரைந்துவிடுகிறான்.
இளகியமனம், யாரின்முகமும் வாடியதுபோல் தெரிந்தால்,
பாவம்மம்மி அவங்க. என்பதலிருந்து பிறருக்கு உதவுவத்தில் முன் நிற்பதுவரை. நல்லபாசமுள்ளவன் அனைவரின்மேலும்.  வாப்பா [அப்பா] என்றால் அலாதிப்பிரியம்,அவர்களிடம்கிண்டலடித்துக்கொண்டேயிருப்பான்.
என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்.

தேவையில்லா எப்பொருளையும்வாங்கமாட்டான்.எதையும்  வேண்டும்தான் எனபிடிவாதம் பிடிக்கமாட்டான்,சூழ்நிலைகள்புரிந்து நடந்துகொள்வான்..ஆகமொத்தத்தில் நல்லபிள்ளை அண்ட். செல்லப்பிள்ளை..

டிஸ்கி//எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

மனக்குவளைக்குள்... .
ஒரு கிளிக் செய்யுங்கள் படத்தின்மேல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது