நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பச்சை பசுமையாய் பதின்ம பருவம் [தொடரோ தொடர்]

கொசுவர்திச்சுருளானயான இத்தொடரை, எழுத அழைத்த நாஸியாவுக்கு பெரிய நன்றி. ஏம்மா எத்தனை நாளா என்னைய இப்படியெல்லாம் மாட்டிவிடனுமுன்னு திட்டம், சரி சரி சொல்லுறேன் கேளுங்கோ
[அது சரி பதின்ம வயதுன்னா என்னங்கங்கங்கொ]
நமக்கு கல்லூரி வாழ்க்கையெல்லாம் கிடையாதுங்கோ பள்ளிக்கூடமே முடியலைங்கோ.
[13 வயதோட அல்லாம் க்ளோஸ்] நல்லது பள்ளிக்கூடமாவது போனியா இல்லையா. அதத்தானே சொல்லப்போறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவும் ராணியுமாம் அவங்களுக்கு. அச்சோ அந்தகாலத்துக்கதையான்னு ஓடிடாதீங்க நில்லுங்க நில்லுங்க.
அந்தகால நினைவுகள் நெஞ்சுக்குள் புடம்போட்ட தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது மறக்கமுடியுமா? மறக்கதான் இயலுமா!

ராஜகுமாரிமாதிரி பிறந்து. வளரும் சமயதில் பெங்களூரில் என்
2, 1/2 வயதிலேயே எல் கே ஜியும். யுகே ஜியும். அடுத்தடுத்து தந்தை வியாபார சம்பந்தமாக வேறு வேறு ஊராக செல்ல.
[அம்மாவின் அம்மா] உம்மமாவிடம் வளரவிடப்பட்டேன். ஒன்றிலிருந்து நான்காம் வகுப்புவரை பள்ளியின் அனுபவமே தனிதான் இதையெல்லாம் மறந்தா??????

பள்ளித்தோழியானவர்கலெல்லாம். என்னைவிட 2.3 வயது பெரியவர்களே! [நாமதான் இன்னும் பச்சப்புள்ளையே]
நாங்கள் தோழியான கதை மிக சுவாரசியம். ஆளுக்கு ஆள் காசு சேர்த்து கடலைமிட்டாயும். இலந்தைவடையும் வாங்கி மொகழமரத்தின்கீழ் அமர்ந்து
நான். தாஜ்மா. மர்ஜுனா. சாந்தி. நான்குபேரும் தோழிபோட்டுக்கொண்டோம்.
அதில் மூவரும் இன்றுவரை தோழியாகவேயிருக்கிறோம். [சாந்தியைத்தவிர.
அவள்மட்டும் வேறு ஊர் போய்விட்டதாக கேள்வி.]சாந்தியின் தம்பி மாரிமுத்தும் அவளும் ஒரேகிளாசில் படிப்பார்கள் .

ஒருநாள் சாந்தி வரவில்லை கேட்டால் பெரியபொண்ணு ஆயிட்டா எனசொன்னதும் நாங்கமூவரும் சேர்ந்து வீட்டில் சொல்லாமல். பள்ளிக்கூடம்போவதாகசொல்லிவிட்டு
பள்ளிக்கு வருவதுபோல் வந்து சேர்த்து வைத்திருந்த காசில். கிளாஸ்கோ பிஸ்கட் 4 பாக்கட் வாங்கிக்கொண்டு அவள் வீட்டுக்குச்சென்று விட்டோம்
அவள் வீட்டுக்கும் எங்கவீட்டுக்கும் சுமார் 2 கிலோமீட்டர்.
அதுவும் தோப்புக்குள் நாங்கலெல்லாம் யார் துணையுமில்லாமல் தோப்புக்கு போகமாட்டோம். ஆனால் தோழியென்றதும் அதெல்லாம் மறந்துபோச்சி.
அங்கேபோனதும் அவங்க அம்மாவும் அப்பாவும். ஏன்கண்ணுங்க இவ்வளதூரம் வந்தீங்க அம்மா அப்பாக்கு தெரிந்தா அடிப்பாங்க. இந்தமோரக்குடிச்சிட்டு வாங்க கொண்டுபோய்விட்டுவிடுகிறேன் என்றார். மூவரும் மாடுமாதிரி தலையை ஆட்டிய அப்போதுதான் பயம் உள்ளுக்குள் கிளம்பியது. இன்னக்கி அடி அடிதான்னு. ஆனாலும் சாந்தியை பார்த்துட்டோம் மூன்றுநாள் பார்க்கமல் என்னவோபோலிருந்தது இப்போது சரியாகிவிட்டது.

நாங்க நினைத்தபோல் பொண்ணாட்டாமெல்லாம் ஜோடிச்சி இல்லை. ஒரு உலக்கையைபோட்டு ஓரமாக உக்கார்ந்து இருந்தாள் உம்மென்று.ஒன்றும்புரியாமல் சீக்கிரம் பள்ளிக்கூடம் வந்திடுடி என்று சொன்னதோடு கிளம்பிவிட்டோம் சாந்தியின் அப்பாக்கூட.

நல்லபிள்ளைகளாட்டம் வீட்டுக்கு போயாச்சி ஒன்றும் நடக்கலை பயந்ததுபோல் என்றிருக்க. இரண்டுநாள்கழித்து நம்ம ஆம்பள பசங்க [எப்பாடி ரொம்ப பொல்லாதவங்க] வீட்டுள போட்டு கொடுத்திருக்காங்க. அப்பன்னுபாத்து நான் எங்க தெரு பசங்களோட குளத்தில் குளிக்கப்போகும்போது ஒரு திருமணமான அக்கா அதோ அந்த நடுச்சுவற்றை யார் முதலில் தொடுவதென போட்டிக்கு வருகிறாயா என்றார்கள். விடுவோமா[யாரு நம்ம அஞ்சாத அஞ்சலியாச்சே]

சரின்னு இருவரும் ஒருசேர போய் தொட அதில் ஆமை அமர்ந்திருப்பது அறியாமல் நாந்தான் பஸ்ட் என ஓங்கி அடித்தபோது ஏதோ வள வளன்னுகையில்  என்னான்னு பார்த்தா ஆஆஆஆமை அல்லாவேன்னு கத்தியபடி போனவேகத்தில் திரும்பி கரையேறியபோதுதான் பார்கிறேன் உம்மம்மா வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு அடியே நில்லுடின்னு துரத்தியதேபார்க்கனும் இப்போது நினைத்தாலும் ஓடுவதுபோலிருக்கும்.

4. வகுப்பு ஆண்டுவிழாவில். கையிறுதாண்டுதல்.முதல் 12 போட்டி நடைப்பெற்றது. மலிக்காவும் ஹபிலாபானுவுதான் அனைத்திலும் முதன்மை.
ஒவ்வொரு பரிசுக்கு கூப்பிடும்போதும் என் அக்கா[பெரியம்மா மகள்]
மாப்பிள்ளை எந்தலையில் ஒரு செல்லக்குட்டு குட்டி போகச்சொல்லுவார்.
அன்று வாங்கிய பரிசுப்பொருகள் மனதைவிட்டு நீங்கமால் இன்றும் அதிலுள்ள
சில்வர் பிளேட் என்பெயர்போட்டும். ஒரு ஹீரோபேனா. முதல் ரேங்கிற்கு தந்ததும். இன்னமும்.[பேனா எழுதாது இப்போது ஹி ஹி ஹி]

9. வயதில் எனக்கு நிச்சியம் செய்தார்கள் அதாவது பால்குடமுன்னு எங்கஊரில் சொல்லுவோம். என்ன சிரிப்புன்னா[அச்சோ அச்சோ இதவிடவா வேணும் அச்சோ] என் பால்குடத்துக்கு நானே பால்குடம் தூக்கிப்போனதுதான் மாமாவீட்டு வாசல்வந்ததும் நான் பக்கத்துவீட்டுக்கு ஓடிட்டேன் மற்றவர்கள் மாமாவீட்டுக்குபோய் நல்ல பரோட்டாவும் கறி துண்ணுட்டு வந்தாங்க எனக்கும் வந்தது. சாப்பிடப்போகும் சமயத்தில் எனது பெரியமாமியார் பொண்ணு உன்னை ஒரு போட்டோ எடுக்கனும் எழுந்து நில்லு என்றது
நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை இன்றுவரையும்.[எதுக்கும் மச்சாங்கிட்ட கேட்டு சொல்லுறேன்ன்ன்ன்ன்]

5 ஆம் வகுப்பு போக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது. வந்தது படிப்புக்கு ஆப்பு. என் தந்தை அவங்க ஊருக்கு என்னை அழைந்துவந்துவிடச்சொல்லி உத்தரவிட. அம்மாவும் வந்து அதிரைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். படிக்கிறேன் என்று சொன்னபோது அங்குபோய் படிக்கலாம் என்றார்கள். சரியென்றுபோய்விட்டேன். ஆனால் அங்குபோய் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. பெரியபடிப்பு படிச்சாச்சி என மதரஸாவில் சேர்த்துவிட்டார்கள்.

மதரஸா வாழ்க்கை மிகபிடித்துப்போனது. அதுவும் பள்ளிக்கூடம்போலதான் அங்கேயும் 2 ½. 3 வருடந்தான் அதிலேயே நல்லவிசங்கள் கற்றுக்கொள்ள எனக்குகிடைத்த நல்லதொரு வாய்ப்பு
அங்கேயும் ஒரு தோழி அவள் நைமா எங்க தெருதான் அவளும் சொந்தமும்கூட எனக்காக பள்ளிப்படிபை நிறுத்திவிட்டு [7 கிளாஸுன்னு நினைக்கிறேன்] என்கூட அவளும் மதரஸாக்கு வந்துசேர்ந்திட்டா [இப்போது சொல்லுவா உன்னாலதாண்டி படிக்கலைன்னு]என்னைவிட பெரியவள் என்றபோதும் எனக்கு உயிர்தோழியாகிவிட்டாள்.

அம்மடியோ நாங்க அடிக்காத அட்டகாசங்களே இல்லையெனும் அளவுக்கு இருவரும் ஒருவராகிவிட்டோம். மதரஸாவில்கூட எங்களிருக்கும் ஒரே பெயர்தான் மலிக்காநைமா. நைமாமலிக்கா மதரஸாவில் வெளியூர் வெளிநாட்டு தோழிங்க நிறைய எனக்கு நட்புவட்டாரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு அதில் மலையாள சேச்சி ரஸிதாக்காக்கிட்ட அப்[ப]பிடிச்ச மளையாளம் இப்ப ரொம்ப தெளிவா.] என்ன எல்லாருக்கும் செல்லப்பிள்ளையா அப்படின்னா எல்லாரவிட சின்னபொண்ணா நாங்கதான் எல்லாருக்கும் ஹெல்புவேற [அதாவது நைஸாக வெளியிலிருந்து திண்பண்டங்கள் அது இதுன்னு வாங்கிக்கொடுக்கிறது வேறொன்னுமில்லை]

ஒருநாள் இருவரும் மதரஸாவிற்குநடந்து வரும்போது ஒருவீட்டில் மாதுளைபழம் நிறைய தொங்கிக்கொண்டிருந்தது. உடனே இருவருக்கும் மண்டைக்குள் சாக். அவள் சொன்னாள் நான் வெளியில் நின்று யாரும் வருகிறர்களான்னு பாத்துகிறேன் நீபோய்பறி என்று சரின்னு அங்கேகிடந்த பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா! எட்டிப்பறித்தேனா! கையில் மாதுளையுடன் பானை உடைய விழுந்தேனே பார்க்கனும் முட்டுக்கையில் ரத்தம், சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம். மதியம் வரும் கலகம் தெரியாமல்.

மாதுளைவீட்டு அம்மனி ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு மதரஸாக்குள் வந்து, ரெண்டு குட்டிகள் எங்கவீட்டில் மாதுளையை பறிச்சிவிட்டாங்க. அதுபோயிட்டுபோவுது.
மண்பானையை உடைத்துவிட்டாங்களே. எங்கே அவங்க காட்டுங்கன்னு நிக்கிறாங்க. மாட்டுவோமா மெதுவா நகர்ந்து வாசலுக்கு வந்து விட்டோம் ஒரே ஓட்டம் மூச்சிரைக்க வீட்டு வாசலில்தான் வந்து நின்னோம் அம்மாடியோ..
மாட்டியிருந்தோம் அதோகதிதான்.

இருவரும் சேர்ந்து எங்கள் உஸ்தாது எங்களுக்கும் சொந்தம்தான்.
சரிபா அக்கான்னு. அவங்களை ஒரு நாள் உளுச்செய்வதற்கு [தொழுகைக்காக] பாத்ரூம் போயிருக்கும்போது குட்டி பூனையை தூக்கி பாத்ரூம் கதவின்மேல்வழியே போட்டுட்டேன் பக்கத்தில் போடுடி போடுடி நைமா. அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து முதுகில் அப்பவும் நைமா எஸ்கேப் மாடியது மல்லிதான் பாவம் சின்னப்புள்ளைய என்னென்னப் பாடுபடுத்திட்டாங்க [ஹூம் ஹூம் அழுதுபார்கிறேன்]

அப்புறம் நிறைய நிறைய இருக்கு ஆனா உங்களை போரடிக்க விரும்பல போனபோகுது இப்பவே கண்ணக்கட்டியிருக்கும் வடிவேலு பாசையில் நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு அதேன் நிப்பாட்டிக்கிறேன்.

இந்ததொடர எழுத அழைத்து ஒருமாதம் ஆகிறதுன்னு நினைக்கிறேன் நான் நாஸியா பிளாக் போகாமல் இருந்ததால் தெரியவில்லை.
பார்ததும் எழுதியாச்சி
அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.

சரி சரி
இதை மேலும் அறுக்க நான் அழைப்பது.

புதுமுகம், மின்மினி

சமையல் மேதை மேனகா சத்தியா

சமையல் கலக்கல் கீதா ஆச்சல்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது