நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மழைப்போர்வை


தூவி தூவி பெய்தது
தூறல்போட்டு நெய்தது

சாரல் சாரல் அடித்தது
சரம் சரமாய் தொடுத்தது

சன்னல் வழியே பார்க்கையில்
சாடைகாட்டி அழைத்தது

சற்று எட்டிப் பார்க்கும்போது
சரசம் செய்ய துடித்தது

மெல்ல மெல்ல தேகத்தை
முழுவதுமாய் நனைத்தது

செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்

ஹச்சென்ற தும்மல் வந்து
எங்கள் இறுக்கத்தையே பிரித்தது

நனைந்த தேகம் குளிரக் குளிர
நாடிநரம்பெல்லாம்  நடுங்கியது

கதகதப்பு தேடிய தேகத்திற்க்கு
கையில் போர்வை  கிடைத்தது

இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது

காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?

பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே

வினோதமாய் பார்த்தது
வியப்பாய் ஏனென்று கேட்டது

காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்

காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்

சொல்லி முடிக்கும் முன்னெயே
என்னை மூடிக்கொண்டது போர்வையே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது