நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்டவனில்லை.


நீரென்றும் நிலமென்றும் 
நிமிர்ந்து எரியும் நெருப்பென்றும்

கடலென்றும் காற்றென்றும்
கறுத்து வெளுக்கும் கார்மேகமென்றும்
 
மழையென்றும் மலையென்றும்
மண்ணில் விளையும் பயிரென்றும்

எறும்பென்றும் பறவையென்றும்
எங்கும் தெரியும் வானமென்றும்

பொன்னென்றும் பொருளென்றும்
பூமியில் பூக்கும் பூவென்றும்

காடென்றும் மேடென்றும்
கண்ணில் காணும் காட்சியென்றும்

உயிரென்றும் உடலென்றும்
ஊர்ந்து ஓடும் உதிரமென்றும்

அழுகையென்றும் சிரிப்பென்றும்
ஆழ்ந்து உணரும் அறிவென்றும்

உலகநாள் துவக்கத்திலிருந்து
இன்றுவரை

இனியும்
இறுதிநாள்வரை

ஒவ்வொன்றின் மீதும் 
சக்திபெற்று

அணு அணுவாய்  
சிந்தித்து செயலாற்றும் அரசனே!

நீ ஆண்டவனில்லை

”ஆள்பவன்”
அகிலத்தை ஆள்பவன்

”இறப்பில்லாதவன்”
எல்லாம் வல்ல இறைவன்.   

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது