நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!துணையிருக்கிறான்
இறைவன்
தொடர்ந்து எழுத!
துணையாய் இருக்கிறா[ர்]ன்
கணவன்
துணிந்து எழுத!

இருவரின்
ஆத்மார்த்த துணையால்
எனக்குள் எழும்
எண்ணங்கள்
எழுத்துகளாகிறது!

உள்ளன்புகளோடு
உரிமைகள்கொண்ட
கருத்துகளை பகிரும்
உங்களை அனைவர்களாலும்
உணர்வுகள் இன்னும்
ஊற்றெடுக்கச் செய்கிறது!

ஒன்றில் தொடங்கி
இதோ
ஐனூற்றி இருபத்தைந்தாவது
பதிவாக
நீரோடையில் மட்டும்!

நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை
அன்பான உள்ளத்தோடும்
ஆனந்தக் கண்ணீரோடும்
இறைவனுக்கும்
இங்குவந்து செல்லும்
அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்..
--------------------------------------------------

என்றும் நன்றிகளோடு
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தியாகத்தின் பொருட்டு!


உலகம் முழுவதிலுமுள்ள
என்னைப் பெற்றெடுக்காத தாய்தந்தையர்களுக்கும், எனது உடன்பிறப்புகளுக்கும். எனதன்பு  தோழமைகளுக்கும்.மற்றும் என்னை நேசிக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புனித தியாகத் திருநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
===========================================================

இறை விசுவாசத்தின்
உறுதியை உணர்த்தி
இறை நம்பிக்கையின்
மகத்துவத்தை நிலைநாட்டி
இறைவாக்கை நிறைவேற்ற
தியாமென்ன என்பதை
இவ்வுககிற்கு எடுத்துக்காட்டி
இன்னல்களென்றபோதும்
இறைசொல்லென்று ஏற்றுநடந்து
இறையை சுவாசித்து
இறைவனே நேசிப்பவராகி
இவ்வுலக மக்களின்
இறுதிக் கடமைக்கு
உறுதியான சான்றாகிய
இறைத்தூதர் நபியே
இறையின் தோழமையான
தியாகச்செம்மலே!
தீனோரின் முன்மாதரியே!
எங்கள்
இப்ராகீம் நபியே!
நீங்கள்
சிரத்தையெடுத்து சீரமைத்த
புனிதமிக்க பள்ளியில்
எங்களின் பாதங்களும்
ஒருமுறையேனும் பட்டு
ஒளிந்துள்ள
பாவங்கள் போக்கவேண்டும்
நீங்கள் செய்த
தியாகத்தின் பொருட்டு
அன்று பிறந்த
பாலகரைப்போல்
நாங்களும் மாறவேண்டும்
வேண்டும் வேண்டும்
பாவங்களும் போ[க்]க வேண்டும்
புண்ணியங்கள் நிரம்பியபடியே
எங்களின் பூலோக
வாழ்வு முடியவேண்டும்
பூந்தோட்ட சொர்க்க
வாழ்வு கிடைக்கவேண்டும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது