நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்றுமே!..


 ”டிஸ்கி”  கொஞ்சம் இடைவெளி விழுந்துடுத்து உங்களுக்கும் எனக்குமான தொடர்பு. வெட்டியா இருந்தாலும் பிஸியாக இருப்பதுபோலவே தெரியுது இங்கே அதாவது நம்ம மண்ணில் அதான் இங்கே உள்ள சுவாரஸ்யமே! ஹி ஹி.  பிஸியா இருந்தாலும் வெட்டியாக இருப்பதுபோலவே தெரியும்.அங்கே அயல்மண்ணில் அதான் அங்க உள்ள கஷ்டமே! [சிலருக்கு இப்படி அப்படியில்லனா அதுக்கு நான் பொருப்பில்லீங்கோ...
இனி  இடைவெளிகள் இல்லாமல் உறவுகள் தொடரும்...

அப்புறம் இன்னொறு சந்தோஷமான செய்தி.
அய்யா திரு வை.கோபலக் கிருஸ்ணன் அவர்கள்  விருது தந்துள்ளார்கள்

அய்யா அவர்களின் 12th AWARD FOR ME
FOR THIS YEAR 2012
12 வது விருதை பெருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

போகுதே! போகுதே!


 பாவங்கள் போக்கிட வந்த மாதமே
புண்ணியம் சேர்த்திட வந்த முப்போகமே
போகுதே போகுதே அருள் கொடைமாதமே
போவதை தடுக்க முடியவில்லையே எதனாலுமே!

நடுக்கியது நடுங்கியது இந்த ஒருமாதமே
நரகின் வேதனையை நினைத்தே எங்கள் தேகமே!
தொழுதோம் அழுதோம் நேரம் தவறாமலே!
தொடர்ந்தே கரைந்தோம் குற்றங்களை போக்கச்சொல்லியே!

சிந்தியே கசிந்தது கண்ணீர் மொத்தமே
செய்த பாவத்தை நினைத்தே எங்கள் உள்ளமே!
சிரம் தாழ்த்தியே கிடந்தோம் சஜதாவிலே!-இனி
சிறு பாவமும் செய்யக்கூடா தென்றுண்ணியே!

இவ்வருடம் இருக்கும் உயிர்கள் யாவுமே
மறுவருடம் இருக்குமோ யாரும் அறிவதில்லையே!
இருக்கும் வரைக்குமே இந்த உலகிலே - எங்கள்
இன்னல்களை களைந்திடு எங்கள் இறைவனே!

நாளை நரகப் படுகுழி அதனை நாங்களும்
நாடும் செய்கைகள் எதனையும் இன்று செய்திடாமலே!
நாங்கள் இப்பூமியில் இருக்கும் நாள்வரைக்குமே!
எங்களை காத்திடு பாதுகாத்திடு கருணை இறைவனே!

சொர்க்கம் என்ற நிரந்தர தங்கு மிடத்தைதான்
வேண்டுதே கேட்குதே எங்கள் நெஞ்சமே!
கேட்டதை வழங்கிடும் எங்கள் இறைவனே!
சொர்க்கச் சோலையை
வாரிக் கொடுத்திடு வல்லலான இறைவனே!

இம்மாதம் இந்த உள்ளங்கள் இருந்தது போலவே
எந்நாளும் எவ்வருடமும் இருக்கட்டுமே!
இம்மாதம் இந்நெஞ்சங்கள வாழ்ந்ததுபோலவே
எந்நாளும் எந்நொடியும் தொடர்ந்து வாழட்டுமே!

சென்றுவா சென்றுவா மேன்மையான ரமலானே! -மேலும்
சிறப்புகள் கொண்டுவா மறுவருடமே!
எங்கள் பாவாங்கள் குற்றங்கள் போக்கிடவே
எடுத்துச்சொல்லி சிபாரிசெய் அகில இறைவனிடமே!

சென்றுவா சென்றுவா புனிதமாதமே! நீ
செல்கையில் சேர்த்துகொண்டுபோ
எங்கள் நன்மையின் சேகரமே!

சென்றுவா சென்றுவா அருள்மாதமே!-நீ
சென்று வருகையில் சீராகி
நேர்வழி கண்டிருக்கு[க[னு]ட்டு]மே இந்த பிரபஞ்சமே!...
---------------------------------------

இந்த ஒரு மாதம் எப்படி நன்மையின்பக்கமிருந்தோமோ. பேச்சிலும் நடத்தையிலும்.சொல்லிலும் .செயலிலும் இருந்தோமோ அதன்படி எந்நாளும் இருக்கவும் அதன்படியே நடக்கவும் முயற்ச்சிபோமாக இறைவனும் அதற்க்கு அருள்புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

உலகிலுள்ள அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எனது மனம் நிறைந்த 
ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்.

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வாசமற்று நாசமாகுதே!


இயற்கை அழியுதே இயற்கை அழியுதே!
இப்பூமியின் வனப்பும் அழிந்துபோகுதே!

செயற்கை பெருகுதே! செயற்கை பெருகுதே!
                                               சீக்கிரம் பூமி அழியப்போகுதே!

விலாசம் தேடும் மண்வாசத்திற்க்கோ
வீதிகளையும் மனிதபுத்தி சதிசெய்யுதே!

மண் தெருவையெல்லாம் மாற்றி
சிமிண்ட் ரோடாக்கியதே! ச[ஜ]ல்லிக் காடாக்கியதே!

மழை வர மறுப்பதால் சாலையெல்லாம்
சிதறி வெடிக்குதே! ஆங்காங்கே குதறிக்கிடக்குதே!

சின்னச்சிறுசுகளையும் சிராய்த்துவிடுதே!
சற்று தடுமாறினாலும் எலும்பை சட்டென முறிக்குதே!

வெயிலின் கொடுமையோ
தேகத்தையெல்லாம் வேகவைக்குதே!

சிரித்த முகத்தையெல்லாம்
சிடுசிடுப்பாக்கி கருக்குதே!

சில்லென்ற காற்றுகூட
சுல்லென்று சுட்டு மிரட்டுதே!

குளிர்காலமிங்கே
கொளுந்துவிட்டெரியுதே!

மண்ணையெல்லாம் 
மறைத்து வருகிறதே சிமிண்ட் சாலை

மண் வாசத்தையிழந்தது தவிக்கிறதே
மனச் சோலை

மழைபொழிந்த போதுமில்லையே
மண்ணின் வாசம்

விலாசம் தேடியாலையுதே ஆங்காங்கே
இயற்கையின் தேசம்

மனிதன் செய்துவருகிறான்
மண்ணுக்கும் அவனுக்கும் சேர்த்து நாசம்

இயற்கையெல்லாம் செயற்கையாகினால்
இன்னல்களால் அவதியுருமே மனிதயினம்..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஓடுகாலி!கன்னியர் காதலென்ற பெயரில்
கலிசடைப் பயல்களோடு
கண்காணா தூரமாகி
கடைசியில் கதிகலங்கி நிற்பதேன்?

மாலையிட்ட மங்கையும்
மதிமயங்கும் காலமாகி
மணந்தவனை விட்டுவிட்டு
மாற்றானோடு ஓடிப்போய்
மண்புழுவாய் ஆவதேன்?

மங்கையர் திலகமே!
மங்கையர் திலகமே!
மானிட வாழ்க்கையென்ன
மண்ணில் நிரந்தரமா?
சீர்கெட்டு போனபின்னே -உனக்கு
சிறப்புகள் வந்திடுமா?

மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவைக்கண்டு
மதிமயங்கிப் போகலாமா?
உன் மானத்தை
மாற்றானுக்கு விலைபேசலாமா?

கன்னியே உன்னை
வளர்க்கும் வரைக்கும்தான்
உனக்கு உன் பெற்றோரா?
நீ வளர்ந்துவிட்டால் அவர்கள் உனக்கு
ஒன்றுக்கும்
உதவாத உதவாக்கரையா?

பெற்றோர் வார்த்தைகளென்றும்
பிள்ளைகளுக்கு பொல்லாததாகுமா? -உன்
பொன்னான பொற்காலத்தை அது
பொய்யாக்கி பொசுக்கிடுமா?

கல்யாணமான மங்கையே!
காசு காய்க்கும் மரமா?உன் கணவன்
 கடல்கடந்து கானகதேசத்திலே
காய்கிறான் தேய்கிறான் உனக்காகவே!
எண்ணை தேசத்திலே
எரிகிறான் கருகுகிறான் குடும்பம்காக்கவே!

அவனின்
அமானிதபொருளல்லவா? நீ
ஆகையால் உன்னை
பாதுகாத்துக் கொள்ளத் தவறிடாதே
பாதகச்செயல்களெதும் புரிந்திடாதே!

ஓடுகாலி என்ற பழிச்சொல்லை
ஒருக்காலும்  வாங்கிடாதே!
உத்தமியென்ற உன் நடத்தையை
ஊர் உலகம் தூற்றச் செய்திடாதே!

இது மாயக்கண்ணாடிபோன்ற உலகமடி
இதில் மனிதர்கள் யாவரும் நிழலுருவமடி
நிழல்கள் கண்டு  மகிழ்ந்திடாதே!
இதனால்  ஒருபொழுதும்
 நிம்மதி என்பதே கிடைத்திடாதே!

இக்கவிதை ”இஸ்லாமியப் பெண்மணி” யில் ஓடிப்போவது ஏன்? எதற்காக? என்ற கட்டுரைக்கு எழுதியது பதிவின் நீளம் கருதி இதனை அதில் சேர்க்கவில்லை.. அதனால் அதனை இங்கே பதிந்துள்ளேன். முடிந்தால் இங்கு வரும் நெஞ்சங்கள் கொஞ்சம் அங்கேயும் எட்டிப்பாருங்களேன் முடிந்தால் கருத்துகளும் பதிங்களேன்..அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது