நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சமமாக வேண்டுமடி சகியே!அவர் உழைக்கவில்லை
அடுப்பு எரியவில்லை
ஆண்
அடிமாடாய் உழைக்கவேண்டும்
பெண்
அடுப்படியில் இருக்கவேண்டும்
காலங் காலமாக
எழுதப்படாத விதியாகப்போனதோ!

உழைத்துக் களைப்பவனுக்கு
ஊதியங்கள் கைநிறைந்தால்
உறவுகளின் மனம்நிறையும்
உழைத்துழைத்தே ஓட்டாண்டியாய்
ஓடாய் நாராய் போனப்பின்னே
ஓய்வெடுக்க எண்ணுகையில்
முடங்கப்பட்டு மூலையில்!

இணையென்பதின் அர்த்தம்
இணக்கத்தில் மட்டுமல்ல
எல்லாத்திலும்
இருத்தல் வேண்டும்
தாரம் அவனின் ஆதாரமாக
தாங்கவேண்டும் தக்க சூழலிலும்
அவன் முடங்கப்படும் முன்பே!

வீட்டில் உலைகொதிக்க
விலையேற்றத்தின் மலைகண்டு
நிலைதடுமாறுவதை தடுக்க
தள்ளாட்டும் அலையை
தாலாட்டாய் நினைத்து
வலைவீசத்துணிந்தாள் இவள்!

பெண்ணுக்குள்
பொறு[றா]மை மட்டுமல்ல
போர்வெல்லும் ஆண்மையுமுண்டு
வெல்வதற்கு
வழிகாட்டுதல் மட்டுமல்ல
தனதாற்றலைக்கொண்டும்
வெற்றியின் வேர்பிடித்து
வளரவும் தெரியும்

குடும்பத்தின் தளம்காக்க
உழைப்போடு கைகோத்து
துணைக்கு தோள்கொடுத்து
வாழ்க்கையினை வளப்படுத்த
இவள் வலையெடுத்தாள்
நான் வளையெடுத்தேன்

மானங்காத்தபடி
வருமானமீட்டடி சகியே
வாழ்வும் செழிக்குமடி
வாஞ்சையும் நிலைகுமடி சகியே!
குடும்பம் காப்பத்திலும்
கூடி மகிழ்வதிலும்
ஆணும் பெண்ணும்
சமமாக வேண்டுமடி சகியே!
==============================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது