நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

டிஜிட்டல் கொள்ளை [உஷார் உஷார் ]


நீண்ட நாளுக்குபின் நீரோடையில் நான் அதர்சியான சம்பவத்துடன்...

அரக்கபரக்க பாடுபட்டு அடுக்கலையில அஞ்சரப்பெட்டியில் வச்சா எங்கே தொலைஞ்சிபோயிடுமோன்னு பொம்பளையும்!
உயிரக்கரைச்சி மெழுகாக்கி
கொஞ்சகொஞ்சமா சேர்க்கும் பணத்த வீட்டுலவச்சா எங்கே களவுபோயிடுமோன்னு ஆம்பளையும் பயந்து!
பாதுகாப்பு பெட்டகமாய் நினைத்து
பேங்கில்போட்டுவைத்தால் நாளை தனக்கும் தன் சந்ததிக்கும் உதவியா இருக்குமேன்னு நெனச்சி குருவியாட்டம் பேங்கில் சேர்த்துவச்சா..
பாலுக்கு பூனையை காவல் வச்சகதையாகி அடிதளத்தையே கலக்கத்தில் ஆட்டுகிறது...

பாடுபட்டு சேர்க்கும் பணத்தையும் கொள்ளையிட ஒருகூட்டமும் அதன்கூட கைதேர்ந்த களவானிகளும் சேர்ந்து ஒரே ஒரு போன்காலில் அத்தனையும் வளிச்சி நக்கிக்கொள்ளும் பெருங்கொடுமைகள் பேரிடிகளாய் தொடர்ந்து நிகழ்கிறது!
அதற்கு உடந்தையாய் பின்னனில் பல பக்கபலங்களும் செயல்பட அடிதட்டுமக்களின் அடிவயிற்றிலடிக்கும் அக்கிரமம் தொடர்வது பெருத வேதனை...

இதுபோன்ற சம்பவங்கள் நடந்த உடனே தெரிவிக்க சென்றால்,இதெல்லாம் உங்கள் அலட்சியம், இதற்கு பேங்க் என்ன செய்யும் ஆயிரம் அறிவுகள் வருதே காதில் விழவில்லையா? வேறுவழியில்லை இனி கவனமாக இருங்களென்ற அறிவுரைகள் மட்டும் அக்கரையாய் வழங்கப்படுகிறது.


ஆம்; நூதனக்கொள்ளை இப்படித்தான் தொடங்கிறது,,
செல்போன் ஒலிக்கிறது
பேங்கிலிருந்து பேசுகிறோமென சொல்கிறான் எந்த பேங்கென கேட்டால் சற்று மெளனம் பின் நம்மிடமிருந்தே அதல்ல இதுவென சொல்லிச்சொல்லி நம்பத்தகுந்த பேங்க் விபரத்தை நுனிவிரலில் வைத்து சொல்லுகையில் 
ஆகா அந்த பேங்க்தானென நாம் தடுமாடும் சமயத்தை பயன்படுத்தி மறுமுனையில் சுதாரித்து நம்மிடைய பெற்ற தகவலை நமக்கே  தகவலாய் தருவதோடு நில்லாமல். இதோ பேங்க் மேனேஜரிடம் பேசுங்கள் அவர் தகவல் சொல்வாரென இன்னொரு ஆளிடம் போன் கொடுக்கப்படுகிறது.அவன் வாங்கி தான்தான் பேங்க் மேனேஜரென சொல்லிக்கொண்டு
தங்களின் ஏ டி எம் கார்ட் லாக் ஆகிவிட்டது அதனை மீட்க ஒரு நம்பர் சொல்கிறோமென சொல்லிக்கொண்டே (இதுதான் உட்சபட்ச ஆச்சர் நமது  பின் நம்பரையும் அவனே சொல்லி அது செயழிலந்துவிட்டதெனவும் அதை மாற்றி புதிய நம்பரொன்றை தருகிறான். கடைசியில் கார்டின் சீக்ரெட் நம்பரையும் பின்னாலுள்ள நம்பரையும் கேட்டு.. அதன்மூலம் ஸ்னாப் டீல் அமேசான் என பெரிய பெரிய ஆன்லைன் சாப்பிங்கில் அவன் பல்கா ஆடர் செய்துகொண்டு நமது  கார்டில் அவன் பணம் கட்டிவிட்டோ அல்லது வேறு அக்கோண்டிற்கு அதனை மாற்றிவிட்டோ நம் போனுக்கு வரும் ஓடிபி எனும் நம்பரை,(இங்கேதான் நமது கவனம் அந்த மெசேஜ் வந்ததும் அதனை திறந்து முழுமையாக படித்தாலே தெரிந்துவிடும்.(607400 is your One Time Password for online purchase of Rs 24899.00 at SNAPDEAL thru State Bank Debit Card ending 0164. Don't share this with anyone என இப்படி வரும்.  மேலோட்டமாக நம்பரைமட்டும் சொல்லிவிட்டால் அவ்ளோதான் போச்சு மொத்தமும்)

இப்போது ஒரு மெசேஜ் வந்திருக்கும் அந்த நம்பர மட்டும் சொல்லுங்க. உங்களுக்கு வீண் அலைச்சலில்லாமல் 
உங்க பேங்க் பிரச்சனை  முடிந்துவிடுமென சொல்லி அதன் நம்பரை வாங்குகிறான்.
முடிந்தது அந்நொடியே பேங்கில் பணமிருந்தால் அபேஷ் அய்யஹோ அம்பூட்டுதான். 

யாருக்குத்தெரியும் இந்த விபரமெல்லாம் கிராமங்களில் மிக வேகமாய் இதுபோன்ற ஃபிராடுகள் தொடர்கிறது. பேங்கில் தகவல் அறிவிப்பாய் எழுதி ஒட்டியிருந்தாலும் எத்தனை மக்களுக்கு படிக்கத்தெரியும் அப்படியே படித்தாலும் ஏதோ ஒருவகை நம்பத்தகுந்த தகவலை சொல்லும்போது படித்தவர்களும் அந்நேர சூழலில் சிக்கிவிடுகிறார்கள்..
எத்தனை அறிவிப்புகள் செய்தாலும் அது மக்களைச்சென்று சேர்வத்தில்லை அப்படியே சேர்ந்தாலும் அதனால் தற்கால டிஜிட்டல் இந்தியாவில் பலனேதுமில்லை.. 

இதுபோன்ற கொள்ளைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்த்துள்ளது அல்லது என்ன சட்டம் கொண்டுவந்துள்ளது. கணினி காலத்தில் இந்த நவீனயுகத்தில் இதையெல்லாம் தடுக்கமுடியாதெனில் எதை நம்பி பேங்கில் பணம் போடுவது?

தான் சொந்தபணத்தை எடுக்க ஒரு பிழை இருந்தாலும் 1008 கேள்வியும் அதனைத்தொடர்ந்த அலைச்சல்களும் அவதிகளும்..
ஆனால் எவ்வித சிரமமுமின்றி ஒரு போனில் பல ஆயிரம் லட்சமென சுருட்டுவது மிக சுலபகிடுதே இதுதான் கலிகாலமா? 
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
மக்களின் தேவையனைத்தும் 
வங்கியின்மூலம் வர்தகம். ஆன்லைன் சாப்பிங்.. டிஜிட்டல் இந்தியா.. ஸ்மார்ட் கார்ட் இவையெல்லாம் மேல்தட்டுமக்களுக்கானதே ஒழிய
அடிதட்டு நடுதரங்களுக்கானதல்ல...

ஆயிரம் வழியில் எச்சரிக்கை செய்தாலும் ஆயிரத்துநூறுவழிகளில் அதனை கொள்ளையிட ஒரு மாபெரும் கூட்டமே கூட்டுசேர்ந்திருக்கிறது..
அரசு சலுகைகள் வழங்கினாலும் அதனை கொடுக்கும் பூசாரிகள் வாயில் பாதி வாய்கரிசியில் பாதியென பாதகமாகிறது..
அரசு செய்யும் பலநல்லதிட்டங்களிலும் பலபல ஓட்டைகளை போட்டு ஆட்டைகள்போடும் காட்டேறிஆட்கள் இருக்குவரை அடிதட்டுமக்களுக்கு அவதியும் அதர்சியுமே மிஞ்சும்...

இது எச்சரிக்கைப் பதிவுமட்டுமல்ல!
இனி என்ன செய்யலாமென யோசிக்க செய்யும் பதிவு..
பாதிக்கபடயிருந்ததிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருத்தியின் நேரடிப்பதிவு இது..
அந்த ஒருத்தி வேறுயாருமல்ல நானேதான்....
நேற்று நடந்த சம்பவத்தின் எதிரொலி
நாங்களெடுத்த உடனடி நடவடிக்கையால் வெடிக்க இருந்த அணுகுண்டு செயழிலந்தது..
இறைவன் காப்பாற்றினான்..


மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திலிருக்கும் அலைபேசி நம்பரிலிருந்துதான் போன்கால் வந்தது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது