நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முகமூடி

அன்பென்ற அருமருந்து
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்


முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்


தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை

அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்

"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.

"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.

"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.

"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.

’ஆதலால்’

எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்

மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மனதார மனம்கொடு.

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,

வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,

வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?

முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?

கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.

கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


ஆண்பிள்ளைங்களே! உசாரு! உசாரூ!




1-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும்டும் டும். நிறுத்துங்கடா, சத்தம் வந்த திசையை நோக்கினால்!!!!!!!! எதிரே நம்ம ஹீரோ.உடனே நம்ம ஹீரோயினி மாலையை கழட்டி வீசிட்டு ஸ்லோமோசனில் பறந்து வருவா.
வெளியில் பைக்கோ காரோ நிற்கும் ஏறி பறந்து போயிடுவாங்க

பாவம்! அந்த நிமிசம்வர தன்னோட மனைவியாகப்போகிறவ அவதானென்ற கனவோடு அங்கே காத்திருந்த, உப்புக்கு சப்பானியான மாப்பிள்ளை.
[ என்னங்கடா இது, கொஞ்சங்கூட பேசல, லேசாக்கூட தொடல, பழககூட விடல, இப்படி ஓட்டிட்டாளே என்ன செய்யிறதுன்னு. சாலமன் பாப்பையா போல மனசுக்குளேயே பேசிக்கிட்டு] பேஏஏஏஏஏஏ என்று முழித்துக்கொண்டிருப்பான்.

பேக்ரவுண்ட் பாடல்

”போறாளே பொட்டபுள்ள
என்னக்கூட பார்க்கவில்ல
மாலய கலட்டி இங்க வீசிவிட்டு
கண்ணீரும் கம்பலையுமா
என்னவிட்டு
நானிங்கே நிக்கிறேனே
வெக்கங்கெட்டு”

2-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். நிறுத்துங்கப்பா.
சத்தம் வந்த திசையை நோக்கினால் எதிரே நம்ம ஹீரோவின் நண்பனோ, நண்பியோ நிற்பாங்க. அப்படியே அண்ணாந்து பாப்பாங்க ஃபிளாஷ்பேக் ஓடும்.
நம்ம ஹீரோயினி மாலையைக்கூட கிளட்டாமல் கதறி ஓடிவருவாள்.
அங்கே வந்தவங்ககூட அழுதுகொண்டே கிளம்பிடுவாள் திரும்பிக்கூட பாக்காம.

பாவம்! அதே இடத்தில் சமஞ்சபொண்ணுபோல திரு திரு முழிச்சிக்கிட்டு [தலையில் கைவைத்தபடி என்ன கொடுமைங்க ஐய்யரே! இப்படி நாவொருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் என்ன கண்டுக்காம அவபாட்டுக்கு போறாளே என சந்தரமுகி பிரவுபோல், ஐய்யரிடம்கேட்பதுபோல் நினைத்து.] பேக்கோவாட்டம் பேஏஏஏஏஏஏஎ என அமர்ந்திருப்பான் மாப்பிள்ளை.

பேக்ரவுண்ட் பாடல்

”போடிப் போடி புண்ணாக்கு
நீ
போயிட்டா தள்ளிரும்
என்நாக்கு
கிருக்கு எனக்கு புடிக்கும்
நீ இல்லாடித்
தல வெடிக்கும்

போடிப் போடி புண்ணாக்கு
நீ போனாக்க தொடருவேன்
வழக்கு”...

3-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். இப்போது சத்தமே இல்லாமல் ஹீரோ வருவார் அவரைக்கண்டதும் பெண்ணின் தந்தை கைகட்டி வாய்பொத்தி ஒதுங்கிடுவார். ஊர்காரங்களே எழுந்து மரியாதை தருவாங்க.

ஹீரோ மணமேடைக்கு எதிரே நின்றதும் ஐயர் தாலியெடுத்து உதவாக்கரை மாப்பிள்ளையிடம் தராமல் எதிரே நிற்கும் ஹீரோவிடம் கொடுப்பார். அம்மணியும் இறங்கி வந்து அழகாய் தாலியை கழுத்தில்வாங்கிட இப்போது மீண்டும் கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும்.

அங்கேயும் அப்பாவி மாப்பிள்ளை அய்யனாருக்கு நேந்துவிட்ட அப்புரானி ஆடுபோல்.[ஸ்சொய்யின் இந்த ரையிங் அயம் ஸ்சொய்யிங் இந்த ரையின் என வடிவேலு பாணியில் மனசுக்குள் சொல்லிக்கொண்டு ]நிற்பான்

பேக்ரவுண்ட் பாடல்

”போகுதே போகுதே
என் பச்சகிளி பறந்துதான்
நானும் இங்கே இருப்பதே
அதுக்குதெரியலையே
என்னப் பாக்கவில்லையே

மறந்துபோகுதே
என்னைய
உதறிப்போகுதே

இன்னும் நெறய சீன் இருக்குதுங்கோ அதெல்லாம் உங்களுக்கே தெரியும் சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு சொல்லிருக்கேன் புரிஞ்சதன்னோ?

இதிலிருந்து என்ன தெரியுது, கல்யாணம் ஆனாலும், ஆகலைன்னாலும்,
ஆகமொத்தத்தில் ஆண்பிள்ளைகளா, லட்சணமா, பெயருக்கு மட்டும் மண்டய மண்டய ஆட்டிக்கிட்டு [உப்புக்கு சப்பானியா. அப்புரானியா. அப்பாவியா. பேக்கோவா.இருங்கோன்னு] இருக்காங்கன்னு தெரியுது.

எத்தன படத்தில பாத்திருப்போம் இப்படியெல்லாம் நடக்குறத்த,
மணமேடை வருகிற வரைக்கும் எதுவும் சொல்லமாட்டாக. அதேபோல கல்யாண காலைல வரைக்கும் காதல சொல்லமாட்டாக. மணமேடையிலத்தேன் சொல்லுவாக, இல்லையின்னா நடுசாமத்துல ஓடிடுவாக.[இதயே இப்போ ஃஃபாலோ பண்ணுறாங்களாம் ஃபாலோவர்ஸ்கன்னு கேள்வி] [அச்சோ நீரோடை ஃபாலோவர்ஸ்கள் அல்லங்கோஅவங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கோ]

இதுல பாவம் இதபோல அப்பாவி மாப்பிள்ளைகளும், பெத்தவங்களும். இதமாதரி எங்கதான் இருப்பாங்களோ. தலையில துண்டமட்டுந்தேன் போடல, சிலதுகளில் அதுவும் போட்டதா நினைவு.

படமாலூஊஊஉம். நிஜமானாலூஊஊஊம். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளைதானே? இதல்லாம் ஆருங்க கேட்குறது,,,,,,,,
என்ன நான் சொல்லுரது புரியுதா!!!!!!!!!!!!!!!!!!!!! .

ஏதோ நம்மாளா முடிஞ்சது [பத்தவெச்சிட்டோம்] என்னயிருந்தாலும் மனசு கேக்கல அதேன் இப்படி. சொல்லுரத சொல்லியாச்சி. திருவிழாவுல காணாப்போன புள்ளைகளாட்டம். தர்க்கு புர்க்குன்னு முழிச்சிக்கிட்டு நிக்காமா சட்டுபுட்டுன்னு யோசிங்க.

//இளிச்சவாய்களாக இருந்தா எலிகூட எட்டி ஒதைக்குமாம்...

”எலே அங்கவை”
“என்னங்கம்மணி.
எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
”நீங்க”
நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்..

[டிஸ்கி.. கவித கதயின்னு போய்கிட்டேயிருக்குதேன்னு நெனச்சி, அதேன் இப்புடி தமாஸ்ல இறங்கிட்டோம். ”அட இது தமாஸா? என்ன கர்மம்டா கடவுளேன்னு! கூட்டத்துல சல சலக்குது..


நம்புங்கோ தமாஸுக்குத்தேன்.
தமாஸா சொன்னாவாச்சிம்??????????????.]
 [ஹா ஹா வில்லங்கத்த சொல்லிபுட்ட வெவரமான ஆளுபுள்ள]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மீண்டும் வேண்டுமோ!!!



சாதிகள்
வேண்டாமடிப் பாப்பா
பாரதியார்
சொல்லிச்சென்ற
பாடம்

சாதிகள்
வேண்டுமடிப் பாப்பா
சாதூர்த்தியங்கள் 
சொல்லுகின்ற
சோகம்

சாதி சாதியென்று
போட்டுக்கொண்டான்
சாமர்த்திய
வேலி

சாதிமல்லி
என்று சொல்லி
மலரைக்கூட
பிரித்துவிட்டான்
பாவி

ஆங்காங்கே
முளைக்குது
சாதிகளின்
சங்கம்

சக்கையாக
பிழியப்படுது
தாழ்த்தப்பட்டோரின்
அங்கம்

மனிதம்
மனிதத்தை
இணைத்துக்கொள்ள

மீண்டுமோர்
பாரதியா!
வேண்டும்

பிறப்பு இறப்பு
ஒன்றென்ற
போதும்

மனிதனை
மனிதன்
பிரித்துப் பார்த்தல்
பாவம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்கள்

காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.

நான் எழுதிய மரணிக்கும்போது[சங்கமம் உரைநடைப்போட்டிக்காக நானெழுதிய கவிதை] மற்றும் ”வலி”யென்ற இருகவிதைகளை வாசித்துவிட்டு.
மிகுந்த மகிழ்வோடு அவர்கள் மேடையில் பகிர்ந்துக்கொண்ட பகிர்வு இதோ உங்களிம் பகிர்ந்துகொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்..

“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட

இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!

அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தப்படவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுக்கவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!

இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு
அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.

அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து
“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.

என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...

அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.
ஆனால்
இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.

உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன

[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]

என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?

[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.
இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.

இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]

என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...
இது ஒரு நல்ல கவிதையல்லவா?

உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது
இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்று அவர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்...

மகளே!

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்
நன்றியொடு வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--

அமீரக தமிழ் கவிஞர் பேரவைத்தலைவர். அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தலைவர்.
அவர்கள் என்னை வாழ்த்தி எழுத்திய கவிதை.

அதிகம் 
படித்தவரில்லை
என் துணைவி
பணிவுடனா சொன்னார்
பாரூக்?
இல்லை-துணிவுடன்
அல்லவா சொன்னார்!

இது போதுமே
இல்வாழ்வும்
கவிதையாக!

இவரின்
’இறுமாப்பு’தான்
இவர் துணையை
கவி புனைய
வைத்ததோ?

இறை நாடின்
அந்த நாளும்
விரைவில்
வர வேண்டும்!

கவிதை யாத்தவரே
காவியங்கள் படைக்க

இவர் பாராட்டைப்
பெற்ற
காவியத்திலகமே
இவர் வரிகள்போல்
இவரைப் பாராட்ட
==================
வாழ்த்துக்களுடன்
அப்துல் கதீம்.

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக
இலக்கிய அணிச் செயலாளர்
கவிஞர் ப. அத்தாவுல்லா. அவர்கள் வாழ்த்தி எழுதியது
குமுதம் ஆனந்தவிகடன். போன்ற பத்திரிக்கைகளில் 20 வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர்
திரு ஷேக் சிந்தா மதார்
அவர்கள் எழுத்திய வாழ்த்துக்கவிதை



அன்பு மகளே,
அன்புடன்
கவிதையை வடித்த அழகு,
அவையினில்
அதனைப் படித்த அழகு,
அன்பைக் கொண்டே
முடித்த அழகு,
அனைத்துமே
எனக்குப் பிடித்த அழகு.

உங்கள் திறமை மேலும் மெருகேற
இறையை இறைஞ்சுகிறேன்...

ஷேக் சிந்தா மதார்..........

கவிஞர் கமால் அவர்களின் வாழ்த்துக்கவிதை

சகோதரி திருமதி மலிக்கா அவர்களே
கவிதாயினி சகோதரி மலிக்கா......

வஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்

இவர் பேனாவும் பேசும்
- இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்

பேதையைக் கவிதை என்பர்
இலக்கியத்தில்
கவிதையே கவிதை
செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள்
எல்லாம் பொன்னாகும்.

திரைக்குப் பின்னால்
கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு
கவிதை படிப்பார்
சமூக அவலங்களை
ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார்
 – மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும்
முத்திரையைப் பதிப்பார்

அற்புதமான கவிதை வடித்தீர்
நற்கவிகளை மேலும் படைப்பீர்
என் வாழ்த்துக்களைப் பிடிப்பீர்...

வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு
அன்புடன்
சகோதரர் கமால்.

பத்திரிக்கை ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான சகோதரர்
திருச்சி சையது அவர்கள் எழுதிய வாழ்த்துக்கவிதை


அன்புத்தங்கையே
அழகிய நடையில் கவிதை
அதை கோர்க்கும் வரிகள் அருமை
தெளிவுடன் எழுதும் திறமை
அதை செயல்படுத்தும்
முறையும் அருமை

நலமுடன் அனைத்தும் பெற்று
நானிலம் போற்றிட வாழ்வீர்
நல்கவியினை உலகுக்குத்தந்து
நற்பண்புடன் சிறந்து வளர்வீர்.

அன்புடன் அண்ணன்
சையது முஸ்தபா



அன்பு நெஞ்சங்கள் எனக்காக எழுதிய கவிகளும், வாழ்த்துக்களும். எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியவர்களின் துஆக்களும். ஆசிகளும். வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். இன்னும் இன்னும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியவேண்டும்

இறைவனின் துணையுடன் நல்கவிகளையும். நல்லெண்ணத்துடன் கூடிய நற்செய்திகளை இவ்வுலகிற்கு  இன்னும் சிறப்பான படைப்புகளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.இங்கு வந்து பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்கும். இன்னும் என் பதிவுகளைபார்த்துச்செல்லும் தாங்களனைவருக்கும். என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல..தாங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.ஊக்கமும், கருத்துக்களும். என்றும் வேண்டும்

என்றென்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கவனமாக இரு!


கண்கள் இணைய
காதலால்
கைகள் இறுக
கடற்கரையெங்கும்
கால்கள் அலைய

தொலைப்பேசியின்
தொடர்போடு
தெருவெல்லாம்
திரிந்து
தியேட்டரின்
மூலையில்
தொடங்கும்

அத்துமீறும்
அதிகாரம்
சிலசமயம்
அரியணையிட்டு
வயிற்றில்
அடங்க

வேறு
வழியற்று
வீட்டைவிட்டு
வெளியேற

கையிருப்பு
இருந்தவரை
காலம் கனிய
மிச்சமில்லாமல்
மொத்தமும்
கரைய

இறுகிய
கைகள்
இறுக்கத்தை
தளர்த்த

இணைத்த
விழிகளோ
இணைந்த
விழிகளை
விட்டு
விலகிச்சொல்ல

மன்றாடிக்
கேட்டும்
கும்மாளமிட்ட
காதல்
கொஞ்சமும்
மசியமறுப்பதால்

மரணத்தைதேடும்
மனங்கள்
சிலசமயம்
மானத்தை
தொலைக்கும்
உடல்கள்

பெற்றோரின்
பேச்சைமீறி
படிதாண்டும்
பிள்ளைகளே!

காதலென்ற
பெயரில்
களிப்பாட்டம்
நடத்தும்
காலமிது

காதல்
வென்றபோதும்
காதலர்கள்
தோற்கும்
மாயமது

கலங்கிடும்
முன்னே
கவனமாயிரு
கண்ணே!
காதலென்ற
காதலே!

கலங்கியப்
பின்னே
கவலைப்பட்டு
ஆவதொன்று-
மில்லை

அன்புள்ள
பெண்ணே
அதேபோல்
ஆணே!!!!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காவியத்திலகதிற்கொரு கவிதை


பனிமலையில்
பூபாளம்
கேட்டீர் –அதை

பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்

பல
காவியங்களைத்
தொகுத்தீர்

பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்

கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்

காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்

முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்

முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்

பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்

பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்

பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்

பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்

வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்

வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்

வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்

வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்

அற்புதக்
கவியெழுதும்
காவியமே!

அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!

ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்

ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...

இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.

வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.

இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!

இக்கவிதையை பார்த்தும்  தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது

மகளே!

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.

நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.

இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்

மீண்டும் சந்திப்போம்.

--வாப்பா--

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காலையும் மாலையும்



கதிரவனே!
காலை கதிரின்
ஒளியாகி
கண்களுக்குள்
குளிர்கின்றாய்!

இருவிழிக்குள்
இறங்கி
இதயத்தை
இழுக்கின்றாய்

மலைச்
சாரலில்
மல்லிகைப்பூ
தொடுக்கின்றாய்

மலையருவியின்
மேல்
மண்டியிடுப்
படுக்கின்றாய்

மாலை
வந்தவுடன்
மெல்ல மெல்ல
மறைகின்றாய்

பள்ளத்தாக்கில்
ஒளிந்துகொண்டு
பதுங்கிப் பதுங்கிப்
பார்கின்றாய்

பாவைகளின்
பார்வைகளுக்கு
பசும்பொன்னாய்
பரவுகின்றாய்

இன்று போய்
நாளை வா
அது உன்
வேலையல்லவா

காலை
மாலை வந்ததும்
சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தெருவோரம்





காலையிலிருந்து
காத்திருந்து

கால்களைத்
தேடியலைந்தது
கண்கள்

களைத்துத்
குனிகையில்
கையில்
குத்தியது

”நருக்கென்று”

செருப்புத்
தைக்கும்
ஊசி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நம்பிக்கை [பிறந்தநாள் வாழ்த்துக்கள்]

1999-பிப்ரவரி-7. சனிக்கிழமை காலை 10 மணி. ராஜம் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றது அந்த அம்பாஸிட்டர் கார். அதிலிருந்து தன் தாய், பெரியம்மா, நாத்தனார், தன் சகோதரி இவர்களால் கைத்தாங்களாக இறக்கப்பட்டாள் மலர். முகம்முழுக்க வியர்வை வழிந்தோட கண்கள் குளமாகி நீரை தாரை தாரையாக வடித்துக்கொண்டிருக்க உதட்டை பற்களால் கடித்து வலியையை விழுங்கினாள்.

ஆனாலும் வலிபொருக்கமுடியவில்லை அம்மா அம்மா என்று முனங்கியபடி ஆஸ்பத்தியின் உள்ளே அழைத்துவரப்பட்டாள்.
டாக்டர் ரூமிற்கு அழைத்துசென்று செக்கப்செய்து உடனே பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு குல்கோஸ் பாட்டில்போட்டு கிடக்கவைக்கப்பட்டாள், வலி மேலும் அதிகரிக்க மலர் வாய்விட்டு அழுதாள். யாரும் ரூமிற்குள்அனுமதிக்கப்படவில்லை, சிறிது நேரத்தில் வலி நின்றுவிட

”வலியில்லையா?என நர்ஸ்கேட்டாள்”

”லேசாக வலிப்பதுபோல் தெரிகிறது ஆனால் முன்புபோலில்லை”
என்றாள் மலர்.
மீண்டும் குல்கோஸ் போடப்பட்டது, இடையிடையே மலரின் தாயும், நாத்தனாரும் அடிக்கடி உள்ளே வந்து பார்த்துசென்றார்கள்,இப்படியாக வலி வருவதும், விடுவதுமாக சனிக்கிழமைசெல்ல.

                                                                     [இன்று]
பிப்ரவரி 7- ஞாயிறு காலையும் போய் மதியம் 3 மணியானது. பிரசவ ரூமின் வெளியே ஒரே சப்தம், நேற்றிலிருந்து வலியால் துடிக்கிறாள் இன்னமும் ஒன்று சொல்லாமல் இருக்கீங்களே டாக்டர் சுகப்பிரசவம் ஆகவில்லையென்றால் இப்பவே ஆப்ரேஷன் செய்துடுங்க இதற்குமேல் அவள் வலிபொருக்கமாட்டாள் என மலரின் நாத்தனார் சொல்ல,
மலரின் தாயாரும் கண்ணீருடன் ஒன்றுமேசொல்லமுடியாமல் திணற.

டாக்டர் ராஜம், இருங்க இன்னும்கொஞ்சம் பொறுப்போம். இல்லையென்றால் இன்று ஆப்ரேஷன் செய்துவிடலாம் சிறுவயது வேறு முதல்குழந்தைக்கு பிறகு 8, 9.வருடம் கழித்து பிரசவிப்பதென்பது சாதாரணமா? வேதனை கூடுதலாகத்தானிருக்கும்,என சொல்லிக்கொண்டே பிரசவ அறையினுள் வந்தார் டாக்டர்.

”என்னடிமா சின்னவளே” ஏன் இப்படி வதைகிறாயாம் குழந்தையை வெளியில்விட மனசு வரலையா” எனக்கேட்டுக்கொண்டே வயிற்றை அழுத்திப்பார்த்து


“இத்தனை பாட்டில் குல்கோஸ் ஏற்றியும்  தலையிறங்கவேயில்லையேடி , என்னசெய்ய 5.மணிக்கு ஆப்ரேஷன் செய்துவிடலாம். வெளியே இருப்பவர்கள் என்னிடம் சண்டைபோடுகிறார்கள். என்று சொல்லிக்கொண்டே நர்ஸ்களிடம் ஆப்ரேஷனுக்குண்டான வேலைகளை தயார் படுதச்சொல்லிவிட்டு கிளம்பினார்.

மலருக்கோ மனதிற்குள் பயம், அச்சம், ஆனாலும் தன்பிள்ளை சுகமாக பிறந்திடும் என்றநம்பிக்கை ஆழமாகயிருந்தது.
நேரம் 4,10 நெருக்கிங்கொண்டிருந்தபோது அனைத்தும் முடித்து ஆப்ரேஷனுக்கு மலரை தயாராக்கி
தியேட்டருக்கு கொண்டுபோக ரெடியாக இருக்கும் சமயம் டாக்டர் உள்ளேவர மலருக்கு சற்றுவலியெடுத்தது இருந்தாலும் கூடுதலாக வலியில்லை.

இது உம்ராவுக்கு [மக்காவில்] சென்றபோது
”டாக்டர் மெல்ல அழைத்தாள் மலர்”

என்னம்மா [ராஜம் மலரின் குடும்படாக்டர்தான்]

”ஆயுதம் போட்டாவது குழந்தையை எடுத்துவிடுங்கள் ஆப்ரேஷன் வேண்டாம் என்றாள்”
உடனே டாக்டர், ”மலர் ஆயுதம்போடவும் தலையிறங்கினால்தாம்மா எடுக்கமுடியும்”

                              [ இந்த டிராயிங் அண்ட் பெயிண்டிங் வரைந்து பரிசுவாங்கினார்]
”இல்லைடாக்டர் தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்குதாங்கும் அளவுக்குதான் சோதனைதருவான் இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும் என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்” எனச்சொல்லியபடியே
என் இறைவா உனக்காக நான் நோன்புவைக்கிறேன் எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே
”ஒரு 10 நிமிடம் இங்கேயிருக்கேன் பின்புவேண்டுமென்றால் ஆப்ரேஷன் தியேட்டருக்குபோகலாம் என்றாள் மலர்” இறைவனின்மேல் அழுத்தமான நம்பிக்கைவைத்து.

                                   [ இது 5 வயதில் முதல் நோன்பு வைத்தது]
இவ்வளவு அழுத்தமாக சொன்ன மலரைபார்த்த டாக்டர்,
”சரி இன்னொருமுறை செக்கப் பண்றேன் சரியா” எனச்சொல்லி செக்கப் செய்தார் உடனே டாகடரின்முகம் மலர்ந்து.
“சீக்கிரம் சீக்கிரம் நர்ஸ் இங்கவாங்க எனசெல்லி ரூம்பிற்கு தாள்போட்டு வேகமாக பிரசவ வேலையைதொடங்க சிறிது நேரப்போராட்டத்திற்குப் பிறகு
 மதியம் 4.45, க்கு குழந்தை பிறந்தது.

எந்தமயக்க மருந்தும் இல்லாமல் தன்கண்முன்னே பிறந்த குழந்தையைகண்டதும், இரண்டுநாள் வலியில்துடித்த வேதனையெல்லாம் பஞ்சாய் பறந்தது.
வெளியே என்ன இன்னமும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டுபோக வரவில்லையேயென அனைவரும் நிற்க, கதவை திறந்து டாக்டர் குழந்தை பிறந்தாச்சி ஆண்குழந்தை எனச்சொல்ல அனைவருக்கும்
ஆனந்தமும் ஆச்சர்யமும்.

                                                                       [இன்று]

குழந்தையைகண்ட சிறிதுநேரத்தில் உடம்பு அயர்ச்சிதர மயங்கினாள் மலர்,
கண்விழித்தபோது வேறு வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தாள். குழந்தை பிஞ்சுக்காலை உதைத்து கண்களைமூடிக்கொண்டே சிரித்தது.
5 நாள் கழித்து வெள்ளிகிழமை மாலை 2 ,மணிக்கு கதவை தட்டிவிட்டு டாக்டர் உள்ளேவந்து ”எப்படியிருக்கே நினைத்ததை முடிச்ச வெற்றி முகத்தில் தெரியுதே என்றார்” புன்சிரிப்பு சிரித்தாள் மலர்.

மலரின் முதல்குழந்தையிடம்
”உனக்கு தம்பி வந்துட்டான் உங்கம்மாதான் என்னை ஏமற்றிவிட்டாள்”
ஆப்ரேஷன் செய்திருந்தால் 20,000 வாங்கிருப்பேன் இப்போ 3000. மட்டும்தான் தருவாள். ஆனாலும் கடவுள்மேல் இவளுக்கு அபார நம்பிக்கை. கடவுளும் இவள் வேண்டிக்கேட்டதும் கொடுத்துட்டாரே என சொல்லி மகிழ்ந்தார்.

                                                       [ மதீனத்துல் ஜுமேரா[துபை]
சொன்னதோடல்லாமல்
டாக்டருக்காக கொடுத்த பணத்தில் 200,ரூ முதல்குழந்தையின் கையில்கொடுத்து இது உனக்கு தம்பிபொறந்ததற்காக நான்தரும் கிஃப்ட் என்று சொல்லிக்கொடுத்தார்.
ஆனந்தமும் நிம்மதியும் கைகோர்த்து மகிழ அன்றுமாலையே வீடுவந்து சேர்ந்தார்கள் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி....

[இன்று என் அன்புமகன் முகமது மஃரூப் அவர்களின் பிறந்தநாள் ]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

                                                   இஷாந்த்[டெல்லி]   மரூஃப்

வருடங்கள் பல
தவமிருந்து
வேண்டிக்கேட்டு
வசந்தமாய்
வரமாய்
வந்தமகன்

இறைவன் தந்த
பொக்கிஷம்
இதோ இன்று
இரு ஐந்தைக்
கடந்து நிற்கும்
இனிமையான
தங்க ரதம்

இவ் வுலகில்
எனக்குக்
கிடைத்த
இரண்டாவது
மணி மகுடம்

அன்னை தந்தை
சொல் கேட்டு
அனுசரித்து
போகும் பழக்கம்
அக்கா என்றால்
அலாதிப் பிரியம்

என் முகம்
வாடக்கண்டால்
முன்நெற்றித்
தொட்டுப்பார்க்கும்
தாய்மை குணம்

பிறருக்குதவும்
அன்பு மனம்
நான்
பெற்றெடுத்த
அன்பு மகன்

நற்கல்வி
நாலும் பெற்று
நலமுடன்
ஆண்டுகள் பல
வாழந்திடனும்
செல்ல மகன்

நல்வழியில்
நேர்வழியில்
வளமாய் நலமாய்
மனம் நிறைய
உயர்ந்திடனும்
செல்வ மகன்

இறையருள்
நிறைந்துப்பெற்று
ஈருலகிலும்
சிறப்புப்பெற்று
உயர்ந்து சிறந்து
விளங்கிடவே

என்றும்
வாழ்த்திடுமே
இந்த
அன்னை மனம்..


அண்ணன் மகன் ஹரீக்[சிங்கப்பூர்] மஃரூப்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கலைக்காக!


அடி
வியப்பெண்ணே
உன்னையுமா
விட்டுவைக்கவில்லை

உலகம்

ஓவியத்தில்கூட

ஒளிவு மறைவு
வேண்டாமென்கிறது

ஒட்டுத்துணி

கலைக்காகத்தானே

என்று
கலைந்தெறிப்படுகிறது

கன்னியமான ஆடை

அசந்துபோய் பார்க்கிறது
அற்ப உலகம்
ஆதாம் ஏவாளின்

அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால

கலையழகியை

ஆண்டவன் 
கொடுத்த

அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக

காவுகொள்ளப்படுகிறது
கொடுக்கப்படுகிறது
கற்பும் மானமும்
காற்றில் பறக்க....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தன்வினை



இரவு பகலை விழுங்கியத்தொடங்கிய பொழுது, மாலைச்சூரியனும் ஓய்வுஎடுத்துக்கொள்ள மேற்குநோக்கி மறைந்துகொண்டிருந்தான்.
அந்நேரம் வரவேண்டிய சந்திரனையும் காணைவில்லை, காலையில் வேலைக்கு சென்ற சந்திரனையும் காணவில்லை
வாசல்படியில் அமர்ந்திருந்த இளம் வயதான புவனா, இருட்டும் தொடங்கிரிச்சு இந்த மனிதன் எங்கு போனார் இன்னும் வரலையேயென்று நினைக்கும்போது,


அப்பா இன்னும் வரலையாமா என கேட்ட தன் மகன் சிவாவிடம் இப்பவந்திடுவார் நீபோய் தங்கைக்கூட உள்ளேயிரு அப்பாவந்ததும் எல்லாரும் சோறு சாப்பிடலாம் எனச்சொல்லியதும் தலையை ஆட்டியபடியே உள்ளே சென்றான் 11 வயதான சிவா.


வாசலிலிருந்து எழுந்த புவனா ரோட்டோரமாகவாவது போய்பார்த்து வரலாம் என எழுந்தபோது, தள்ளாடியபடி வந்து நின்றான் சந்திரன். அவனைப்பார்த்ததும் மனம் அம்மாடியோ என்றிருந்தாலும்,
கோபம் வீறிட்டு எழுந்தது இன்றுமா? ஏன் இப்படி எங்களை கொல்லாமல் கொல்றீங்க இப்படியே தினம் தினம் குடித்துவிட்டுவந்தா குடும்பம் என்னா ஆகுறது, பிள்ளைகள்வேற வளர்ந்து கேள்விகேட்க ஆரம்பிச்சிட்டாங்க இன்னமும் இப்படியே இருந்தா எப்படி என வந்தகோபத்தை வேகமாக பேச எத்தனித்தபோதும் தனிந்தகுரலிலேயே சொல்லிக்கடிந்தாள்.


குழந்தைகள் வீட்டிலிருக்கு நாம சண்டைப்போட அதுக நம்மளபாத்து நாளைக்கு கெட்டுபோகுமே, தெய்வமே இதுக்கு விடிவே கிடையாதா என சந்திரனின் கைகளைபிடித்து அழைத்துச்சென்றாள். செல்லம்மா என் செல்லமால்ல என புலம்பியபடி. இனி தெய்வத்தின்மீது சத்தியமா குடிக்கமாட்டேன் நம்பு எனைநம்பு என்றபடியே அவளின் பின்னாலேயே சென்றான்.
ஆடியபடியே வந்த தந்தையைக்கண்ட பிள்ளைகள் அப்பாவுக்கு என்னாச்சிமா வழக்கம் போலத்தானா என முகம்சுளித்தான் சிவா.
3 வயதான லதா அப்பாவின் ஆட்டத்தைப்பார்த்து ஆடுறாரு அப்பா ஆடுறாரு என சிரித்தாள்.


சாப்பிட்டுமுடித்து குழந்தைகள் தூங்குவதற்கு அந்த குடிசையின் ஒரு ஓரத்தில் ஒட்டுப்போட்டுக் கிடந்தபாயை எடுத்துவிரித்து அவர்களை உறங்கச்சொல்லி தன் கிழிந்த சேலையில் ஒன்றை அவர்கள்மேல் போர்த்திவிட்டு திரும்பியபோது, தலைகீழாக படுத்திருந்தான் கணவன் அருகே வந்தாள் சாப்பிட்ட வாய்க்கூட சரியாக கழுவாமல் கையை வாயில்வைத்தபடி அப்படியேக்கிடந்தான். அவனை நிமிர்த்திபோட்டு சரிசெய்துவிட்டு கட்டாந்தரையிலேயே தலையில் கைவைத்தமர்ந்தாள்.


இவள் விடியவிடிய இரவை விழுங்கிக்கொண்டிருந்தாள். இப்போது பகல் இரவை விழுங்கிக்கொண்டிருக்க காலை 6 மணி. சந்திரன் எழுந்து கொல்லைப்பக்கம்போய் குளித்துவந்து இரவு நடந்தது எதுவுமே தெரியாதபோல்,புவனா பசங்க எழும்பலையா,
கவர்மெண்ட் ஸ்கூலுன்னாலும் டைமுக்கு போகனும் நீயும் அந்த டாக்டரம்மா வீட்டுக்கு வேலைக்கு போகனும் இப்படி பொருப்பேயில்லாமல் காலங்காத்தால தலையில் கைவைத்து உக்காந்திருக்கே எழுந்திரு என்று அதட்டினான்.


விடியவிடிய அழதகண்ணீர் கன்னத்தை வரட்ட, ஏங்க ஒன்னு சொல்லட்டுமா, என்ன சொல்லு இனிமே குடிக்காதீங்க, பிள்ளைகளும் பெரிசாயிட்டாங்க அதுகளுக்குன்னு ஏதாவது செய்யனும், நான் டெய்லி வேலைக்கு போனாலும் குடும்ப நடத்துறது கஷ்டமாக இருக்கு நீங்க கூலி வேலைசெய்து சம்பாரிக்கிற 200, 300.யும் இப்படி தினமும் சூதாடியும் குடிச்சிட்டும் வந்துடுறீங்க அப்புறம் எப்படிங்க குடும்பம் நடத்துரது என சொல்லிமுடிக்கும் முன்னே விழுந்தது பளாரென்று ஓர் அடி.


எனக்கே புத்திமதியாடி சொல்லுர, ஐய்யா எம்புட்டு குடித்தாலும் ஸ்டெடியா இருப்பேண்டி, இதோ இன்னைக்கு பார் நேற்று சூதாட்டத்தில்விட்ட 200, ரூபாய இன்னைக்கு டபுளா கொண்டுவரேன். சரி சரி மசமசன்னு பேசிகிட்டே நிக்காமா ஏதாவது இருந்தா கொடு துண்ணுட்டு நான்கிளம்புறேன்.
இன்னிக்கி பெரியவரு வீட்டுல ஏதோ வேலயிருக்காம் அதமுடிச்சா
நிறைய கூலிதரேன்னாரு அதுகிடைச்சதும், கொஞ்சமா குடிச்சிட்டு
நேற்றுவிட்ட பணத்த புடிச்சிட்டு வந்து உங்கிட்ட கொடுக்கிறேன் அப்பப்பாரு இந்த சந்திரன் எப்புடுடின்னு, என்று சொல்லியபடியே எள பசங்களா எழுந்திறீங்க எழுந்திறீங்க என சிவாவை கால்கலாலேயே எட்டித் தட்டிவிட்டான்.


புவனா இருந்த பழையகஞ்சியை அவனுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, பசங்களுக்கு பக்கத்துவீட்டு இட்லிகட ஆயாவிடம் கடன்சொல்லி இட்லிவாங்கிக்கொடுத்து சிவாவை பள்ளிக்கூடத்துக்கு கிளப்பினாள்
சட்டையணியும்போது சிவாக்கேட்டான் அம்மா எப்பவுமே இந்த ஒருசட்டையைதானே துவச்சி துவச்சிபோடுறேன் எப்பமா புது சட்டவாங்கிதருவா என கேட்டமகனின் முகம்பார்க்கும்போது
வந்தக்கண்ணீரை அடக்கினாள்.


அன்னைமுகத்தில் கவலைகோடு ஓடியத்தையறிந்த சிவா, யம்மா சும்மாக்கேட்டேன்ம்மா இன்னும் கொஞ்சநாளுளபாரு உனக்கு நான் சம்பாரிச்சுத்தாரேன் எனசொன்ன மகனைகட்டிக்கொண்டு அழுதாள்.
சிவாவை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு லதாவைகைபிடித்துக்கொண்டு டாக்டரம்மாவீட்டைநோக்கி நடந்தாள்.


மாலை 5 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது அம்மா அம்மா எனக்கத்தியபடி தலைதெறிக்க ஓடிவந்தான் சிவா, என்னடா சிவா இப்படி ஓடிவர, அம்மா அப்பா அப்பா,
சொல்லு என்னாச்சி சொல்லுடா. இல்லம்மா எங்க பள்ளிக்கூடத்துக்கு பக்கதுல இருக்கிற சாராயக்கடையில அப்பா விழுந்து கிடக்குறாராம்மா பக்கதுல நிக்கிறவங்க அவரு செத்துட்டாருன்னு சொல்லுறாங்கம்மா என்றபோதே இருண்டது கண்கள், தலைசுற்றியது என்னாடா சொல்லுர என்று இருவரையும் இழுத்துக்கொண்டே ஓடினாள் புவனா.


சாராயக்கடை வாசலில் ஒரேகூட்டம் கூட்டத்தை விளக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு அதிர்ச்சி, அங்கே சந்திரன் வாயில் நுரைதள்ளியபடி அலங்கோலமாக கிடந்தான் அவன் சட்டைபாக்கெட்டிலிருந்து சில பத்துக்கள் சிதறிக்கிடந்தன, என்னங்க என்னாச்சி எழுந்திறீங்க எழுந்திறீங்க என அவனை தட்டி எழுப்பினாள், நிறையதடவை எழுப்பியும் அவன் உணர்ச்சியிழந்த மரக்கட்டையாக மரணித்துக்கிடந்தான். இருகுழந்தைகளையும் கட்டிக்கொண்டு கதறினாள்


சற்று நேரத்தில் போலீஸ்ஜீப் வந்தது, சாராயக்கடையினுள்ளே நுழைந்து சோதனை நடத்தியது அப்போதுதான் தெரிந்தது சாராயம் விசமாகியிருப்பது
விசமாகிப்போன சாரத்தையருந்திய சந்திரனோடு இன்னும் 4, 5. பேர் மரணமாகிகிடக்க சற்றுநேரத்துக்கெல்லாம் சாராயக்கடை வாசலில் ஒப்பாரி ஓலமிட்டு கூக்குரலெழுப்பி அழுதார்கள் மனைவி மக்களும், தாய் தந்தைகளும்.போலீஸ் கடையைச்சுற்றிலும் தேடியபோது சாராயக்கடை முதலாளி எஸ்கேப்.


சந்திரனை நம்பி வந்த மனைவி, பெற்றெடுத்த பிள்ளைகள், அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை அவர்களின் மனநிலையை ஒருபோதும் அவன் உணர்ந்துக்கொண்டதுமில்லை.
தினமும் குடித்து குடும்பத்தின் நிம்மதி, மானம், அமைதி, அனைத்தையும் கெடுத்துக்கொண்டிருந்த சந்திரன், இன்று அதே குடியால் தன்னையே இழந்தான் அவனைப்பொருத்தமட்டில் அவன் சுகம் அவனுக்கு பெரிதாகிப்போக போதையிலே மாண்டுபோனான்.
.
தன் தந்தையின் மரணம் சிவாவுக்கு அதிர்ச்சியைத்தரவில்லை சிறுவயதிலிருந்தே தந்தையின் குணநலத்தை அறிந்துவந்ததால் அவன் இல்லையென்றாலும் தம்மால் வாழமுடியும் என்ற நிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டவனாய் அழுதுகொண்டிருந்த அன்னையையும் தங்கையும் ஒருசேர அணைத்து அம்மா அழாதேமா அழாதே,
இத்தனைநாள் நீ பட்ட கஷ்டம்போதும் எழுந்திரி இனி நான் உன்னை பாத்துப்பேன் வாம்மா வா என அழைத்தான்.


புவனா கீழே அலங்கோலமாக கிடந்த சந்திரனைப்பார்த்து பெற்றபிள்ளை உனக்காக ஒருசொட்டு கண்ணீர்விடக்கூட தயாரகயில்லை நீ செய்த பாவம். நான் பொறுத்தேன் உன்னை மனதார ஏற்றதால். ஆனால் காலத்தை பார்த்தாயா நீசெய்த வினை உன்னையே அழித்துவிட்டது
நீயும் அழிந்து எங்கள் மனநிம்மதியையும் அழித்துசென்றுவிட்டாயே!


மதுவும், சூதும், உன்னை மதிமயங்கசெய்து மரணத்தின் பிடியில் தள்ளிவிட்டது. மதிகெட்ட உன்னைப்போன்றவர்களால் மரணத்திற்கே அவமானமும் வந்துவிடுகிறது
மதிக்கவேண்டிய பெற்ற பிள்ளைகளே மிதிக்கின்ற அளவுக்கு கொண்டுசென்றுவிட்டதே இந்த உன்னுடைய இழிவான செயல் என அவள் நினைதுக்கொண்டிருக்கையில்.


கடைசி காரியத்தைக்கூட கள்ளுக்கடை வாசலியே செய்துவிடுமா என்றமகனின் வார்த்தையில் தெரிந்த வீரியத்தை உணர்ந்தவளாய்,
தன் கழுத்தில் தொங்கிய நிறம் மாறிப்போன மஞ்சள்கயிற்றை கழட்டி சந்திரனின் மார்மீதுவைத்துவிட்டு தன் இருகைகளிலும் தம்பிள்ளைகளை பிடித்தபடி திரும்பிப்பார்க்காமல் நடந்தாள்..


[டிஸ்கி] கதை எழுதிப்பார்ப்போமே என்று கதையென நானே நினைத்து எழுதியுள்ளேன் இதுக்குபேர் கதையின்னா கதைகளுக்கு பெயர் என்னவாம் என யாரோ முனுமுனுப்பது தெள்ளதெளிவாய் கேட்கிறது.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வாராயோ வெள்ளி நிலவே


அந்தரத்தில்
உதிக்கும் நிலவே
என்
அந்தபுரம்
வரவேண்டும் நீயே
ஆடிபாட
அழைக்குது மயிலே
ஆவலோடு வந்துவிடு
அழகே

அங்கே
வழியொன்று
வைத்திருக்கிறேன்
சிறு ஓட்டை
அதன் வழியே
நுழைந்து திறந்திடு
என்
மனக்கூட்டை

மனதை மறைத்து
போட்டுள்ளேன்
ஒரு பூட்டை
அதில்
ஒளிந்து கிடக்குது
ஆயிரம் ஆசை

நமக்குள்
பேசிக்கொள்ளும்
வார்த்தை
யாருக்கும்
விளங்கிடாத பாஷை

நம்மிருவரையும்
இணைத்திருக்கும்
ஓசை
ஒருவருக்கும்
புரிந்திடாத
உயிரோசை

வானத்தில்
வந்து நீ
நின்றால்-என்
வதனத்தில்
ஒளிகூடிபோகும்

மேகத்தில்
ஒளிந்து நீ
சென்றால்-என்
இதயத்தில்
இருள்சூழ்ந்துக்
கொள்ளும்

அழகாய்
வலம்வரும் நிலவே
அமாவாசையிலும்
வேண்டும்
உன் வரவே

அந்தரத்தில்
ஒளிவீசும் அழகே
என்
அந்தபுரம்
வரவேண்டும்
நீயே

விரும்பி அழைக்கிறேன் 
உன்னை
வெள்ளி நிலவே
வந்துவிடு எனதருகே..


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது