நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அரையடி நாக்கு


அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது

எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது

தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்

தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது

நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது

நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது

அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது

நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது

அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது