நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனம் ஒரு குரங்கு


நிலையில்லா உலகில்
கிளையில்லா மரத்தைத்தேடி
இளைப்பாற நினைக்கும் மனம்
தட்டுத் தடுமாறி
தன்நிலை திசைமாறி-சிலநேரம்
தற்கொலையிலும் போய் நிற்கும்

நினைவுகளை சுமந்தபடி
நீரோடையில் நீச்சலடிக்கும்-
நினைவிழக்கும் வேளை வந்தால்
நீச்சல் தெரிந்திருந்தும்
நீருக்குள் மூழ்கியிறக்கும்

எவரும் தொடா எல்லயைத் தொட
எத்தனித்து -
எட்டுத்திக்கும் தான் பறக்கும்
எதுவும் முடியாது போக
ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்

திசைகள் பல
தேடித் தேடி திரிந்து வரும்
தேடியது கிடைக்க வில்லையெனில்
திகைத்துபோய் சோர்ந்துவிடும்

தன்னாசையைப் போக்க
தாவித் தாவி தான் குதிக்கும்
தடுமாற்றம் கண்டு விட்டால்
தடம்மாறிப் போய்விடும்

குரங்கைவிட படுவேகம்
மனித மனம் - குரங்கோடு
மனிதனைச் இணைத்துச் சொன்னால்
கடுஞ்சினம் கொள்ளும்
குரங்கின் இனம்....டிஸ்கி// இது சிங்கபூர்ல நடக்கும் கவியரங்கத்திற்காக எழுதியதுங்கோ. என்ன ஒன்னு இத நாம அங்கேபோய் படிக்கனுமாம்.[அடியாத்தி நமக்கு அங்கெல்லாம் எப்புடி இப்ப போகமுடியும்] இநத தலைப்ப குடுத்து எழுதச்சொல்லியிருந்தாங்கோ ஒருதளத்தில்.. அதபார்ததும் நம்ம மூளை சும்மா இருக்குமா! அதான், மூளையை முடுகிவிட ஏதோ வந்தது கவிதையின்னு. இது எப்புடிக்கீதுன்னு நீங்க சொன்னாத்தானே தெரியும்.


அதுசரி ஏன் எதுகெடுத்தாலும் குரங்கு. நாய். என பாவம் அதுகளையேன் மனிதர்களோடு ஒப்பிடுறாங்க அதுகும் நமக்கும் நிறைய கனெக்ஷன்கீதோ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது