நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அச்சம் வெ[தி]ன்ற சப்தம்



நிலவுக் குளியலுக்கு
தயாராகிக் கொண்டிருந்தது
இயற்கை!
இருளாடை அணிய
காத்துக் கொண்டிருந்தது பூமி!
கருமை கூடிக்கொண்டே போக
கவ்விய இருளுக்குள்
குடியமர்ந்தது வெளிச்சம்!

யாருமற்ற தருணத்தை உணர்த்தி
அச்சம் மெல்ல
எட்டிப்பார்த்து இளித்ததும்
இறுக்கி கண்களை மூடியபோதும்
இருளின் கருமை கூடியது
இதயநாளத்தின் துடிப்போசை
இடைவிடாது
இடித்து அதிர்ந்தது!

எங்கிருந்தோ
முனங்கல் ஒலி
நெஞ்சத்தின்
மூளையில் ஒலித்தது
இந்த இருள்
அச்சப்படுவதற்கானதல்ல
எச்சரிக்கும் விதமானது!

இறப்பின்
சிறு எடுத்துக்காட்டே
இருள் சூழ்ந்த
இரவின் உறக்கம்
எதிலும் கவனமாயிரு
எப்பொழுதும்
எச்சரிக்கையாயிரு

ஏகன் ஒருவனை
நினைத்துகொண்டேயிரு என்ற
இரண்டாம் மனதின்
இனிய சப்தம் கேட்டதும்!

நேசிக்கும் இறைவனை
இன்னும் அதிகமாக நேசித்தபடி
நீண்ட பெருமூச்சொன்று
நிம்மதியாய் வந்தது
நீண்டு சென்ற இரவின் இருளை
மெல்ல களைந்[த்]த
வெளிச்சமாக..

 --------------------------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கேட்காமல் கிடைத்த சுதந்திரம்



சுதந்திரமாய்!
----------------
அந்நியரிடமிருந்து
பெற்ற விடுதலை
அடிமையாய் இன்னும்
அந்நிய கலாச்சாரத்தில்!

--------------------------------------

அதிக வாக்கெடுப்பில்
------------------------
பெரும்பாடுபட்டு
பெற்ற சுதந்திரம்
பெரும்பான்மை பெற்றது
அறைகுறை ஆடைகளில்!

----------------

சுதந்திர நாட்டில்
------------------------
சாசனம் எழுதிக்கொடுக்காமலே
அடிமாடுகளாகிபோன
மனிதயினம் ஆங்காங்கே
இன்னும் அகதிகளாய்!
அடிமைகளாய்!
சுதந்திரம் கிடைக்கப்பெற்றும்
கொடுக்கப்படாமலே!
கிடைக்கப்பெறாமலே!

----------------

கண் துடைப்பு!
-----------
சுதந்திரம் பற்றியப் பேச்சு
சுத்த பத்தமாய்
சுதந்திர தினத்தில் மட்டும்!

===========

கேட்காமல் கிடைக்கு சுதந்திரம்
===================
சுதந்திரத்தை
சுகந்தமாய்! சுதந்திரமாய்
சுவாசிக்கிறது
சுதந்திரம் வேண்டாத
சுதந்திரக்கொடி...

-------------------------------------------------

ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எனது இதயங்கனிந்த சுதந்திரதின வாழ்த்துகள்.


சுதந்திர வாழ்த்துகளைச் சொல்ல
சுதந்திரம் கொடுத்த வாழ்க்கைக்கும்
சுதந்திரதினத்துக்கும்
சுகந்தமான நன்றிகள்..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கண்ணைத் தைக்கும் கல்வி



காசிருக்குமிடத்தில்
காணிக்கையாய்
காலுக்கடியில்!
காசில்லாதோரிடத்தில்
கானலாய்
கண்ணெதிரில்!

லட்சங்களின் பிடியில்
தோற்காத லச்சியங்கள்
அவலச்சனமாய் பரணிக்கடியில்
கோடிகளில் பிடியில்
கோலாகல பட்டங்கள்
லட்சனமாய் ஆணிக்கடியில்!

கண்போன்ற கல்வியெங்கும்
காசிருந்தால்தான் வெற்றி
காசற்றவனின் கல்வியிங்கே
காற்றில் பறக்கும் தூசி!
கல்வியை காசாக்கிபார்க்கும் ருசி
காலப்போக்கில் மனிதன்
கண்ணைத் தைக்கும் ஊசி!

கட்டு கட்டா நோட்டக்காட்டி
கல்வி கண்ணக்கட்டி
கலர்கலர் கனவுகாணும்
வயிற்றில் நெருப்பைக்கொட்டி
பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி
பச்சோந்தி பவிசு காட்டி!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கல்விக்கூடங்களின் அணிவகுப்பு
கல்வியைவிட காகித
காசுக்குத்தானே அங்கே அதிகமதிப்பு
கல்வி உண்டியலில்
கணக்கிலாமல் பணத்தைக்கொட்டி
கற்க்கும் கல்வி அத்தனையும்
மீண்டும்
ஆசை காசை நோக்கி...

”குவைத்தில் வெளியாகும் ”வசந்தம்” மாத இதழில் வெளியான கவிதை”

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இணைப்பதா இறைவனோடு!



ஈட்டிக்கு மூட்டியாக
எவருக்கோ போட்டியாக
இறைவனுக்கு இணைவைத்தும்
அவனின் சினத்துக்கு தூபம்போட்டும்
ஆணவ ஆனந்தம் கொண்டு திரியும்
இறை வேதமறிந்த மனிதன்!

இன்னார் செய்யும் தீமை
இவரையடைந்த போதும் சரியென்று
படைத்தவனை பகைத்துக்கொண்டு
படைப்பினங்களுக்கு பல்லாக்குதூக்கி
இறையின் வெறுப்புக்கு
உகப்பாகுவதுதான் துயரம்!

இறைவனுக்கு இணையாக
இவ்வுலகில் எதுமேயில்லையென
இறைச்சங்கொண்ட உள்ளம்
இதுபோன்ற செயல்களாலே
ஈமானை இலகவிட்டு
ஈருலகிற்கும் கெடுதிதேடும் மனிதன்!

இறைஞ்சி வேண்டும் போதினிலே
எப்பாவத்தினையும்
மன்னிக்க விரும்பும் இறைவன்
தனக்கே இணைவைத்து
தான் படைத்தவைகளையே
தனக்கிணையாக்கி பார்ப்பதை
விரும்புவதில்லையே சிறுதுளியும்!

ஆறறிவை சீர்திருத்தி
ஆள்பவனை மனதில் நிறுத்தி
அள்ளும் பகலும்
நடந்துகொள்ள வேண்டும்
ஆகாதேயென அறிந்தும்
படைத்தவனோடு போட்டிபோட்டு
படைப்பினங்களாகிய நாம்
வாழக்கூடாதே ஒருபோதும்..
====================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

ஈத் பெருநாள் வாழ்த்துகள்



 அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம் வல்ல ஏக இறைவன் ஒருவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின்மீதும் உண்டாகட்டுமாக!
உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய அன்புள்ளங்களுக்கும், ஈத் முபாரகென்னும் நோன்புபெருநாள் நல்வாழ்த்துகள்.


பர்ளான கடமைகளையும், நோன்பில் ஈமானோடும் உள்ளச்சத்தோடும் செய்த நல்அமல்களையும், நோன்புதான் முடிந்துவிட்டதே என்றெண்ணி,விட்டுவிடாமல்,இனி தொடர்ந்து செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றிட முனைவோம், இன் ஷா அல்லாஹ்..
மீண்டும் அனைவருக்கும்
அன்புடன் மலிக்காவின்
அன்பான ஈத் முபாரக்..
========================================

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது