நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலாச்சாரம் காலடியில்!நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!

நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!

தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!

தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!

பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை

கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!

படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!

மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!

வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...

என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை. 
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன 
அது எதுவரையில் என்றால்,
 ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும் தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர் திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால் ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய் நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும்  கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது