நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கெளரவமாய் காக்கும் அசிங்கங்கள்..


தன் வயலில் வேறொருவரின் விதை
வேரூன்றி காலூன்றியதைக் கண்டும்
காணமல் காக்கிறதாம் கெளரவம்
தான்கட்டும் வேட்டியில் கறைபட்டுவிடாமல்

கூச்சநாச்சமற்று கொஞ்சி சிரிக்க
கூசாதோ உள்ளம்
கூடிக் களித்தால் நீங்கிடுமோ!
கறைபட்டதெல்லாம்!

அச்சாணி கழண்டு
அஞ்சாமல் ஓடும் வண்டி
எச்சாணியாலும், எச்சிலையானாலும்
ஏறிமிதித்தோடுமோ
எல்லைகளைத்தாண்டி!

மந்திரத்தால் காய்க்குமோ வாழை
மானமிழந்து வாழுமோ மானின் தசை
கெளவுரத்தைக் கட்டிக்காக்கும்  மீசை
குலத்தை குலைக்க வகுக்கிறதே
கேடுகெட்டபாதை

கூரைவீடுகளில் புகையமுற்ப்பட்டாலும்
கொழுந்துவிட்டெறிகிறது
தெருக்கோடிவரை
கோடிவீடுகளில் பற்றியே எறிந்தாலும்
கசியக்கூட மறுக்கிறது
தன்வாசல்வரை

வெக்கமற்ற வாழ்க்கை வாழும்
வெம்புழுக்களோ
வீதியில் மட்டும் காட்டும் வீராப்பு
வீட்டுக்குள்ளே போடும் மாராப்பு

வசைபாடும் சமூகம்கூட
வக்கனையோடு வாரியணைக்கிறது
வகைகெட்ட வகையார்களை
வாழையிலை பரிமாறி!

கண்ணிருக்கு பார்க்க
என்றிருக்க முடியாத -சில
எண்ணங்கள் மட்டுமே
கொதித்தெழுகிறது
அதுவும் வீட்டடுப்பில்
கொதித்தடங்கும் வெந்நீரைப்போல!!!.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது