நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நானும் கவிதையும் 200,ரையும் தாண்டி...

அன்பு நெஞ்சங்கள் அனைவரையும் என்னுடைய 205 வது [நீரோடையில் மட்டும்]பதிவில் அன்போடு வரவேற்கின்றேன்.

இது நூறாவதுபதிவு நேரமிருப்பின் கிளிக் செய்யவும்
கவிதையும் நானும் 100 ,ரையும் தாண்டி

தகதகவென ஜொலிக்கும் தங்கமகன் விருதை அளித்த ஜெய்லானி அண்ணாவின் துஆக்களோடு இருநூற்றி ஐந்தாவது பதிவில் அடியெடுத்துவைக்கிறேன். தங்கமங்கையாக [அச்சோ தங்கம் விற்கும் விலைக்கு கடத்திடப்போறாங்க பாத்து இருங்கோன்னு ஆரோ சொல்லுறது காதில் கேட்குது அதெல்லாம் கவனமாக இருப்போமுல்ல தங்க கிரில்போட்ட கூட்டுக்குள்..ஹி ஹி ஹி]


வலையில் விழுந்து இன்றோடு 11 மாதங்களாகிறது.
ஆரம்பத்திலிருந்தே என் பதிவுகளுக்கு ஆதரவும், கருத்துக்களும், என்னை மென்மேலும் எழுத்தூண்டியது. அதன்காரணமாக. பலமேடைகளில் கவிதைகள் வாசிப்புகள். நாளேடுகளில். மற்றும் பலபுத்தங்களில் என் கதை. கவிதைகள்.பல தளங்களில் என்கவிதைகள். 100 கவிதைகள் குறுகியகாலத்தில் எழுதியதற்காக வாங்கிய விருது மற்றும் என் அன்புவலைப்பதிவாளர்கள் அள்ளிதந்த விருதுகளென அதீத சந்தோஷத்தோடு ஆரவாரமில்லாமல் அன்போடு அடியெடுத்து வைக்கிறேன். இருநூற்றி ஐந்தாவது பதிவில்.

என் எழுத்துக்களால் அதிரை யுனிக்கோட் உமர்தம்பி அவர்களுக்காக முயற்சிசெய்து வெற்றியடைந்தது. என் கவிதைவரிகளால் 2.வருடங்கள் பிரிந்திருந்த[குழந்தையில்லாததால்]செல்வி,முத்தையா தம்பதியர்கள்.
முத்தையா வெளிநாடு சென்றுவிட்டு கடிதப்போக்குவரத்தோ தொலைபேசித்தொடர்போ இல்லாதிருந்தவர்கள். எதேச்சையாக தளங்களில் என்கவிதைகளை படிக்கநேர அடுத்தடுத்தும் படித்துவிட்டு தபால் போட்டதாகவும்.என் எழுத்துக்களில் ஏதோ இருந்து அவர்களை மீண்டும் இணைத்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். மனமார பாராட்டியிருந்தார்கள்.

அதேபோல் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் நாத்தனார் என்றபெயரில் அண்ணனை பிரித்துவைத்து வெளிநாடு அனுப்பிவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழ்குடும்பத்தில் என்கவிதைகளை படித்து அதை அவருக்கு அனுப்பிவைக்க நெடுநாள்களாக பேச்சிச்தொடர்பே இல்லாதிருந்தவர்கள் யார் இதை எழுதியது என பேசத்தொடங்க அதிலிருந்து தற்போது நல்லபடியாக இருப்பதாகவும். மனமகிழ்வுடன் நன்றியும் சொன்னார்கள். அப்பெண்ணைப்போல் மற்றவர்களும் ஆகக்கூடாதென கவிதையும் எழுதச்சொன்னார்கள். எழுத்துக்கள் எல்லாம் செய்யும் என்பதை உணர்ந்தேன். [உணரவைத்தார்கள்]. என்எழுத்துக்கள் என்மனதை சந்தோஷங்களைக்கொண்டு நிரப்பிய செயல்களைக் கண்டு வியந்தேன்.

என் எழுத்துக்களால் சிலராவது பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் எழுதவே தொடங்கினேன். பயன் கிடைத்தது. அதிலும் உறவுகள் நட்புகள். சகோதர சகோதரிகள் தாய்தந்தைகள் என வலையுலகில் என்னைச்சுற்றி பந்தங்களும் சொந்தங்களும் வலைபோல்பின்ன அதில் கட்டுண்டுக் கிடக்கிறேன். இது ஒன்றுபோதாதா என் எழுத்துகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
தாய் தந்தையாய் எனைத்தேற்றுவதும். சகோதர சகோதரியாயிருந்து வளர்ச்சிக்கு தூண்டுகோளாயிருப்பதும். நட்புகளாய் தோள்கொடுப்பதும் என சகலமுமாய் எனக்கு நீங்களனைவரும் கிடைத்து பாக்கியமே!

நான் இதுவரை எழுதிய பதிவுகளில் எந்தவொரு கருத்துரைகளும் என்னை பாதித்ததில்லை அப்படியாரும் என்னை பாதிக்கவைத்ததில்லை.
பலதளங்களுக்கு செல்கிறேன் அனானி என்ற பெயரில் தரகுறைவான வார்த்தைகளால் வசைப்பாடியிருப்பார்கள். அப்போதெல்லாம் மனதில் பயம்தோன்றும். இதுபோன்று எக்குதப்பாக யாரும் நமக்கு கருதுரையிடுவார்களோ என, ஏனென்றால் நான் எழுதிய பதிவும் அதேபதிவும் சிலசமயம் ஒன்றாக இருக்கும் வார்த்தைகள்தான் வேறுபட்டிருக்கும். அதிலிருந்தே புரிந்துகொண்டேன்.நம்முடைய எழுதுக்களில் நம்மையறியாமல் நன்மையிருக்கிது. அதைவிட இங்கே வந்துசெல்லும் அனைவருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க எனவும் அறிந்துகொண்டேன்.

யாரையும் எவ்விததிலும் நம்முடைய எழுத்துக்களால் நோகடித்துவிடக்கூடாதென்று மிக கவனமாக எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்.இதுவரை நான் எழுதியதில் எதுவும் தாங்களின் மனது சங்கடப்படும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என் தவறை மனதார மன்னித்துவிடுங்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவு என்றென்றும் வேண்டும் அதை தருவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னும் நான் நிறைய நல்லவைகளுக்காக, நல்லதையே, எழுத இறைவனிடம் பிராத்தியுங்கள். உங்களோடு என்னையும் ஒரு தோழியாய். சகோதரியாய். மகளாய். ஏற்றுக்கொள்ளுங்கள்...
என் பாசமுள்ள அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் பல பல பல.

அப்புறம் ஒரு முக்கியச்செய்தி. நான் சட்டம்படித்தவள் இல்லை. பள்ளிப்படிப்பே அறைகுறைதான். நான் சட்டம் பயின்றவளென நினைத்து சிலர் உதவிகேட்கிறர்கள். இப்போது நினைக்கிறேன்,நாமும் படிதிருக்கலாமேயென. இருதோழிகளிகளும். ஒரு சகோதரரும்.[பெயர் வேண்டாம்].தாங்களின் நல்ல மனதுக்கு எல்லாம் நன்மையாக முடியும். எதற்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் இருக்கிறான் வெகுவிரைவில் தாங்களுக்கு நல்லது நடக்கும் நானும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


நான்காம் வகுப்புத் தாண்டா
நங்கை யொருத்திய
நல்லெண்ணெத்தோடு
நடைபயின்றாள்
வலைதளத்தில்

அன்னை மொழிக்கொண்டு
அழகுக் கவிகிறுக்கி
அன்போடு நடைபோட்டாள்
வலைகளத்தில்

வாசித்த நெஞ்சங்கள்
வாழ்த்திடவே
வாகைசூடிய கருத்துக்கள்
வழங்கிடவே

இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
தலைக்கணம் ஏதும்வேண்டாமென
தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்

மகிழ்ச்சி கடலில் குதித்திட்டாள்
மனமார நன்றிகள் தந்திட்டாள்
மேலும் மேலும் எழு[ந்]திடவே
மனதார வாழ்த்துக்கள் கேட்கின்றாள்

குறைகள் ஏதும் இருந்ததென்றால்
தயங்காமல் தட்டிக் கேட்டிடுங்கள்
நிறைகள் நிறைந்து இருந்ததென்றால்
நெஞ்சார தட்டிக் கொடுத்திடுங்கள்....

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்களுக்கு
தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் அன்போடு.

64 கருத்துகள்:

 1. மேலும் மேலும் எழு[ந்]திடவே
  மனதார வாழ்த்துக்கள் ....

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  எழுத்துக்களால் எத்தனையோ நல்ல விசையங்களை சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள்.

  இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்களும் துஆக்களும்.

  அன்புச் சகோதரன்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் மலிக்கா வாழ்த்துக்கள்.
  இந்ததோழியின் அன்பான பாராட்டுக்களும் துஆக்களும் என்றென்றும் உனக்கு உண்டு.

  இன்னும் முன்னேற இறைவன் துனையிருப்பான்

  பதிலளிநீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கவிதைகளை குறுகிய காலமாக ரசித்து வருகின்ற நானும் ஒர் படைப்பாளி
  தங்களின் இந்தப்பயணத்தில் சாதனைபடைத்திட மனதாற வேண்டுகிறென் இறைவனை
  அத்தனைவரிகளும் அருமையானவை
  http://hafehaseem00.blogspot.com/
  இது எனது சிந்தையின் சிதறல்கள்
  உங்களை எனது பக்கம் வரவேற்கிறது நன்றி

  பதிலளிநீக்கு
 5. நெஞ்சார வாழ்த்துகிறேன் .
  வாழ்த்துக்கள் வழமோடு அருளோடு நிறைவோடு இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் மலிக்கா..

  இன்னும் பலநூறு படைக்க

  இறைவன் உங்களுக்கு சக்தியை வழங்கட்டும்..

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ

  நீங்கள் மென்மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

  வாழி நீடூழி

  வாழ்த்துக்கள் விஜய்

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கவிதைகளை குறுகிய காலமாக ரசித்து வருகின்ற நானும் ஒர் படைப்பாளி
  தங்களின் இந்தப்பயணத்தில் சாதனைபடைத்திட மனதாற வேண்டுகிறென் இறைவனை
  அத்தனைவரிகளும் அருமையானவை
  http://hafehaseem00.blogspot.com/
  இது எனது சிந்தையின் சிதறல்கள்
  உங்களை எனது பக்கம் வரவேற்கிறது நன்றி .

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கவிதைகளை குறுகிய காலமாக ரசித்து வருகின்ற நானும் ஒர் படைப்பாளி
  தங்களின் இந்தப்பயணத்தில் சாதனைபடைத்திட மனதாற வேண்டுகிறென் இறைவனை
  அத்தனைவரிகளும் அருமையானவை
  http://hafehaseem00.blogspot.com/
  இது எனது சிந்தையின் சிதறல்கள்
  உங்களை எனது பக்கம் வரவேற்கிறது நன்றி .

  பதிலளிநீக்கு
 10. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கவிதைகளை குறுகிய காலமாக ரசித்து வருகின்ற நானும் ஒர் படைப்பாளி
  தங்களின் இந்தப்பயணத்தில் சாதனைபடைத்திட மனதாற வேண்டுகிறென் இறைவனை
  அத்தனைவரிகளும் அருமையானவை
  http://hafehaseem00.blogspot.com/
  இது எனது சிந்தையின் சிதறல்கள்
  உங்களை எனது பக்கம் வரவேற்கிறது நன்றி .

  பதிலளிநீக்கு
 11. மேலும் மேலும் எழு[ந்]திடவே
  மனதார வாழ்த்துக்கள் ....

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  எழுத்துக்களால் எத்தனையோ நல்ல விசையங்களை சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள்.

  இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்களும் துஆக்களும்.

  அன்புச் சகோதரன்

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் மலிக்கா..

  இன்னும் பலநூறு படைக்க

  இறைவன் உங்களுக்கு சக்தியை வழங்கட்டும்..

  பதிலளிநீக்கு
 14. சித்தி.. கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா வாழ்த்துக்கள்.
  இந்ததோழியின் அன்பான பாராட்டுக்களும் துஆக்களும் என்றென்றும் உனக்கு உண்டு.

  இன்னும் முன்னேற இறைவன் துனையிருப்பான்.//

  மிக்க நன்றி சித்திமா. எப்படியிருக்கீங்க. எங்கே ஆளையே காணோம். சென்னையில் வெயிலா மழையா வீட்டுக்குள்ளே இருக்கீங்களா.

  தாங்களின் முதல் கருத்து [டிகே போல்] என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள் மிக்க நன்றிமா மிகுந்த மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 15. ropin கூறியது...
  நெஞ்சார வாழ்த்துகிறேன் .
  வாழ்த்துக்கள் வழமோடு அருளோடு நிறைவோடு இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்.

  வாங்க ராபின் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 16. நேசமுடன் ஹாசிம் கூறியது...
  அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கவிதைகளை குறுகிய காலமாக ரசித்து வருகின்ற நானும் ஒர் படைப்பாளி
  தங்களின் இந்தப்பயணத்தில் சாதனைபடைத்திட மனதாற வேண்டுகிறென் இறைவனை
  அத்தனைவரிகளும் அருமையானவை
  http://hafehaseem00.blogspot.com/
  இது எனது சிந்தையின் சிதறல்கள்
  உங்களை எனது பக்கம் வரவேற்கிறது நன்றி .//

  வாங்க சகோதரரே தங்களின் அனபான வருகைக்கும் தொடர்ந்து என்கவிதைகளை வாசிப்பதற்க்கும் முதல் என் நன்றி.

  தங்கள் துஆக்களில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  நிச்சயம் வருகிறேன் தங்களின் வலைப்பக்கம்..

  மிக்க நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்..

  பதிலளிநீக்கு
 17. இன்னும் நிறைய விருதுகள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. தாஜூதீன் கூறியது...
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  எழுத்துக்களால் எத்தனையோ நல்ல விசையங்களை சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் நீங்கள்.

  இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்களும் துஆக்களும்.

  அன்புச் சகோதரன்.

  அன்புச்சகோதரனின் அன்பான வாழ்த்துக்களும் துஆக்காளும் என்றென்றும் வேண்டும்.
  தாங்களீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!

  பதிலளிநீக்கு
 19. மேலும் மேலும் எழு[ந்]திடவே
  இன்னும் சாதனைகள்படைத்திடவே
  மனதார வாழ்த்துகிறேன்.
  எழுதுக்களின் நுணுக்கம் உங்களிடம்..
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ

  நீங்கள் மென்மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

  வாழி நீடூழி

  வாழ்த்துக்கள் விஜய்

  பதிலளிநீக்கு
 21. /////இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
  இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
  தலைக்கணம் ஏதும்வேண்டாமென
  தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்////  .......கவித்துவம் மிக்க அழகு..... பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 22. என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...

  வாழ்த்துக்களுடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 23. உங்க‌ள் எழுத்தினால் கிடைத்த‌ அனுப‌வ‌ங்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... தான் ப‌டைக்கும் ப‌டைப்புக‌ள் ம‌ற்ற‌ ஒருவ‌ருக்கு ப‌ய‌ன்ப‌டுமாயின் அதுதான் ப‌டைத்த‌வ‌ருக்கு கிடைத்த‌ வெற்றி..

  ப‌ல‌ சிக‌ர‌ங்க‌ளை தொட‌ இந்த‌ இளைய‌வ‌னின் வாழ்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 24. இன்னும் நிறைய விருதுகள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 25. உங்க‌ள் எழுத்தினால் கிடைத்த‌ அனுப‌வ‌ங்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி... தான் ப‌டைக்கும் ப‌டைப்புக‌ள் ம‌ற்ற‌ ஒருவ‌ருக்கு ப‌ய‌ன்ப‌டுமாயின் அதுதான் ப‌டைத்த‌வ‌ருக்கு கிடைத்த‌ வெற்றி..

  ப‌ல‌ சிக‌ர‌ங்க‌ளை தொட‌ இந்த‌ இளைய‌வ‌னின் வாழ்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 26. இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 27. என்னான்னு தெரியலையே! கருத்துக்கள் நிறைய வந்திருக்கு ஆனா ஓப்பன் ஆனதும் ஒன்றையும் காணோம்,

  நான்பதில்போட்ட கருத்துக்களுகும் இங்கே காணவிலையே யாராவது பார்த்தீகளா?

  எந்த போலீஸில் கம்ளைண்ட் கொடுப்பதுனு தெரியலையே!

  என்னசெய்வதுன்னு தெரியலையே
  தெரிந்தவங்க சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
 28. இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்.மனமார வாழ்த்தும் நெஞ்சம்..

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் மலிக்கா....நீங்கள் மென்மேலும் வளர....அல்லாஹ் உங்களுக்கு போதிய உடல் & மன நலனை தருவானக என்று துவா செய்தவானக...உங்கள் சகோதரன்.யாசிர்

  பதிலளிநீக்கு
 30. மேலும் மேலும் எழு[ந்]திடவே
  இன்னும் சாதனைகள்படைத்திடவே
  மனதார வாழ்த்துகிறேன்.
  எழுதுக்களின் நுணுக்கம் உங்களிடம்..
  பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 31. /////இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
  இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
  தலைக்கணம் ஏதும்வேண்டாமென
  தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்////

  பதிலளிநீக்கு
 32. /////இருநூறு படைப்புகள் படைத்திட்டாள்-பல
  இதயக்கூட்டுகுள் நுழைந்திட்டாள்
  தலைக்கணம் ஏதும்வேண்டாமென
  தன் இறையிடம் அழுது வேண்டிட்டாள்////  .......கவித்துவம் மிக்க அழகு..... பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 33. என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...

  வாழ்த்துக்களுடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 34. ஆச்சரிய படுத்துறீங்க...!! வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 35. இன்னும் சாதனைகள் பல படைத்திடவே மனதார வாழ்த்துகிறேன்.
  2000 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. வாழ்த்துக்கள். உன் நல்லெண்ணங்கள்போல எல்லாம் இனிமையாய் சிறப்பாய் நடக்கும் முன்னேறுவாய் பல வெற்றிகள் கண்டு. இந்த அன்னைதந்தையின் ஆசிர்வாதம் என்றும் உண்டு.

  பாலாதான் இன்று டெல்லிபோறான்.உன்னை விசாரித்தாகசொன்னான்.

  நேற்றுள்ளகவிதை நன்றாக சொல்லியுள்ளாய். சில மனிதர்களுக்கு எதை சொன்னாலும் புரியாது.
  நீ உடம்பை பார்த்துக்கொள்.


  பாசமுள்ள அன்னை
  சாரதாவிஜயன்..

  பதிலளிநீக்கு
 37. புதிய டிசைன் வெரி க்யூட்....
  எழுத்துக்கள் எல்லாம் மரூப் போல குட்டிகுட்டியா அழகா
  டீசண்டா இருக்கு...

  பதிலளிநீக்கு
 38. இன்னும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்க‌ள்

  பதிலளிநீக்கு
 39. இன்னும் சாதனைகள் பல படைத்திடவே மனதார வாழ்த்துகிறேன்.
  2000 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 40. ஆச்சரிய படுத்துறீங்க...!! வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 41. புதிய டிசைன் வெரி க்யூட்....
  எழுத்துக்கள் எல்லாம் மரூப் போல குட்டிகுட்டியா அழகா
  டீசண்டா இருக்கு..

  பதிலளிநீக்கு
 42. வாழ்த்துக்கள் மலிக்கா....நீங்கள் மென்மேலும் வளர....அல்லாஹ் உங்களுக்கு போதிய உடல் & மன நலனை தருவானக என்று துவா செய்தவானக...உங்கள் சகோதரன்.யாசிர்

  பதிலளிநீக்கு
 43. மல்லிக்குட்டி நீ எல்லாத்திலும் வெற்றி பெருவாய் கவலபடாதே அல்லாயிருக்கான்.
  இன்னும் வலர முன்னேர நானும் துஆகேட்கிறேன்.

  உன் தோழி

  பதிலளிநீக்கு
 44. அல்லாஹூ . என்னப்பா ஆச்சி இந்த பிளாகிற்க்கு. காலையிலிருந்து இதோட முடியலை. இங்கேயிடப்படும் கருத்துக்கள் டாஸ்போர்டில் தெரியுது கிளிக் செய்தால் காணாமல்போயிடுது. மெயிலில் வந்தவைகளை அவரவர்களின் ஐடிகொண்டு இதில் சேர்த்துள்ளேன் .
  நான் இடும் பதில்கூட காணாமல் போயிடுதே..

  சரி டெம்பிளேட்டில் கோளாறோ என அதுவும் மாத்திட்டேன். ஊஹூம் ஒன்னும் நடக்கலை.

  அச்சோ இதுக்கு ஏதும் வழியிருந்தா சொல்லுங்க வரும் கருத்துக்களை காப்பிபேஸ் பண்ணவே ஆடிப்போகுதுப்பா..

  பாதிதான் போட்டுயிருக்கேன் இன்னும் பலபேருடையதை காணோம்.

  ப்லீஸ் கொஞ்சம் விளக்குங்க என்னான்னு..

  பதிலளிநீக்கு
 45. ver nice madam ...............keep going n cntue wrkkkk.....

  பதிலளிநீக்கு
 46. பாராட்டுக்களும். வாழ்த்துக்களும்.எல்லாம் வளமும் பெற்று வழமோடு வாழ்க

  பதிலளிநீக்கு
 47. என்னாச்சி நான் எத்தனை முறைபோட்டும் கருதுக்கள் வரவில்லை ஏன்?

  யாரும் வைரஸ் அனுப்பிட்டாங்களோ.

  பதிலளிநீக்கு
 48. சந்தோஷம்மாக இருக்குப்பா உனைநினைத்து வாழ்த்துக்கள்.

  டிகேபோல் இதிலும் புகுந்து கலக்குறீங்க மல்லி.

  பதிலளிநீக்கு
 49. நிலவின்...
  ஆயிரம் பிறை காண்பதைப்போல...

  நீரோடையில்..
  ஆயிரம் பதிவினைக் காண வாழ்த்துக்கள்...

  வாழ்த்துக்களுடன்...

  என்றும் நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 50. வாழ்த்துக்கள் மகிழ்ச்சியாக உள்ளது
  (நம்ப முடியயவில்லை வெரும் நான்காம் வகுப்புதான் என்றால்)

  பதிலளிநீக்கு
 51. அன்பார்ந்த மலிக்கா அவர்களுக்கு.
  நன்றிகலந்த வணக்கம்.
  தாங்களின் 2005 வதுபதிவுக்கு மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் பலாயிரம்.

  தாங்களின் அன்புப்பணியால் பலபேர் பயணடைவார்கள் இது நிச்சயம்.

  கடவுள் உங்களுக்கு எல்லாவித நற்பாக்கியங்களையும் தந்தருளட்ட்டும்.
  என்றும் நன்றியோடு மனசந்தோஷத்தோடு

  அன்பு சினேகிதன்
  முத்தையா

  பதிலளிநீக்கு
 52. அன்பார்ந்த மலிக்கா அவர்களுக்கு.
  நன்றிகலந்த வணக்கம்.
  தாங்களின் 2005 வதுபதிவுக்கு மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் பலாயிரம்.

  தாங்களின் அன்புப்பணியால் பலபேர் பயணடைவார்கள் இது நிச்சயம்.

  கடவுள் உங்களுக்கு எல்லாவித நற்பாக்கியங்களையும் தந்தருளட்ட்டும்.
  என்றும் நன்றியோடு மனசந்தோஷத்தோடு

  அன்பு சினேகிதன்
  முத்தையா

  பதிலளிநீக்கு
 53. சகோதரி உங்களுக்கு என்னுடைய சலாத்தையும், வாழ்த்துக்களையும் கூறிகொள்கிறேன். நீங்கள் மென் மேலும் நிறைய சாதிப்பிர்கள். பல நல்ல விஷயங்கள் உங்கள் கவிதையல் ஏற்பட்டுள்ளது என்பதை கேட்கும் பொழுது , மனதில் இனம் தெரியாத ஒரு சந்தோசம்.

  பதிலளிநீக்கு
 54. //சகோதரி உங்களுக்கு என்னுடைய சலாத்தையும், வாழ்த்துக்களையும் கூறிகொள்கிறேன். நீங்கள் மென் மேலும் நிறைய சாதிப்பிர்கள். பல நல்ல விஷயங்கள் உங்கள் கவிதையல் ஏற்பட்டுள்ளது என்பதை கேட்கும் பொழுது , மனதில் இனம் தெரியாத ஒரு சந்தோசம்//

  நான் நினைத்தை எழுயுள்ளீர்கள் தூயவன்..
  மிக்க நன்றி வாழ்த்துக்கள் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 55. நூறுக்கு வாழ்த்துக்கள் தோழி...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 56. கமலேஷ் கூறியது...
  நூறுக்கு வாழ்த்துக்கள் தோழி...தொடருங்கள்.//

  மிக்கநன்றி தோழா. ஆனால் நூறல்லவே

  இருநூற்றி ஐந்தாவது பார்க்கலையா..

  பதிலளிநீக்கு
 57. என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்கள்
  அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல ஆயிரம்.

  இன்னும் முன்னேற நீங்கள் அனைவரும்தரும் ஊக்கமும் உற்சாகமும். அன்பும் ஆதரவும். என்னை மெய்சிலிர்க்கவைத்துள்ளது.

  இறைவன் எனக்கு இத்தனை சொந்தங்களையும் நட்புகளையும் தந்துள்ளான் அதை நிலைப்படுத்திக்கொள்வேன் எந்நாளும்.

  மீண்டும் என் மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த ஆனந்த நன்றிகள்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது