நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணம்


மரணம்

அது இல்லாதுபோனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் கமழும் "மணம்"
தீயவைகளால் உருகும் மனம்

மரணம்
தேடிப்போவது "ரணம்"
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் "மரம்"
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை........

மணம், ரணம், மரம், மரணம்!!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது