நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிக்காக ஒரு கவிதை


உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி

காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன

உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன

பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது

தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்


பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது