நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாஞ்சை!!!

வெள்ளைக்காகிதத்தில்
வரைந்து முடிக்கவில்லை
மலரை
வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி

வாசத்தை காணவில்லை
வண்ணங்களும் இதற்கில்லை
ஆனாலும்
அழகிய மலராக
ஆடி நிற்பதைக்கண்டு
அது வாடிடக்கூடதென்று
தன் பட்டுச்சிறகை
கருத்த மலரின் உடல்மேல்
மெல்லவிரித்து-தன்
வண்ணங்களை உதறியது

பென்சிலின்
கருநிற உதட்டால்
உடல்பெற்ற மலரோ
வண்ணங்கள் பட்டதும்
உயிர்பெற்று எழுந்தது
வனப்போடு நின்ற
மலர்மேனியைக்கண்டதும்
வண்ணத்துப்பூச்சி
மெளனமாய் -தன்
முகம்கொண்டு
வாஞ்சையோடு உரசிச்சென்றது

வண்ணமில்லா
வாசனை இல்லா
மலர்கூட
வண்ணத்துப்பூச்சியின்
வாஞ்சையினால்
வசந்தம்பாடி நின்றது...

//டிஸ்கி ஒரு நாளுன்னு சொல்லி ஒரு வாரம் லீவ் எடுத்தாச்சி.பள்ளிகூட்டத்தில் எடுப்பதுபோல். லீவில் சும்மா இருந்தா எப்புடி அதான் கொஞ்சம் வரஞ்[ரைந்து]சிபார்ப்போமுன்னு.
அதென்னன்னா இப்படி ஆகிப்போச்சி சரி எவ்வளோ சகிச்சிக்கிட்டீக இதையும் அப்படியே அப்படியேஏ... நல்லாக்குதான்னு சொல்லிட்டுபோங்க//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது