நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இனிய நடை

பச்சைப்பசேலென்ற
புல்வெளி அதன்மேல்
பச் பச்சென இச்சிட்டபடி
பதிந்தன கால்கள்

புல்வெளிமேல்
படுத்திருந்த பனித்துளிகள்
பதிந்து பதிந்து
சென்ற கால்களை
கிச்சுகிச்சு மூட்ட

இரவு வானத்தில்
விழித்திருந்த வெண்ணிலா
இவளின்
இன்முகத்தைக் கண்ணடித்திட
இரைந்து கிடந்த
நட்சத்திரத்தின் ஒளியை
இமைக்காமல்
இவளும் ரசித்திட

அமைதியான இரவுக்குள்
ஆவாரம்பூவின் வாசம்
அதோடு  சில்லென்றெக்
காற்று கன்னத்தைஉரச

அந்நேரம்பார்த்து
தொலைப்பேசியும் சினுங்கிட
அன்புச்செல்லத்தின்
அழைப்பும் வந்திட
அத்திப்பூப்போன்று
அதரத்திலொன்று தந்திட

ரசிக்கவைத்து
மனம்
இனிக்கவைத்த
புல்வெளிக்கும் பனித்துளிக்கும்
வெண்ணிலாவுக்கும் நட்ச்சத்திரத்திற்கும்
ஆவாரம்பூவுக்கும் தொலைப்பேசிக்கும்

பிரிய மனமில்லாமல்
பிரியா விடை சொல்லியபடியே
பாவையவள்  மெல்லநடந்தாள்
தன் மனமுழுதும் மகிழ்வாய்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது