நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இரயில் பயணத்தில்.

                                           [ஹை ரயில் வந்தாச்சி]
தஞ்சையில் மாலைநேர வெயில் தங்கம்போல் ஜொலிக்க ஒலிப்பெருக்கி ஈரோடு செல்வதற்கான இரயில் வருவதை அறிவித்தது . தன் கடிவாளத்தை இழுத்துப்பிடித்து வேகம் குறைத்து நிறுத்தியது ஜனசதாப்தி இரயில். நெடுங்காலத்திற்க்கு பிறகு இரயிலில் பயணம் செய்யப்போவதால் மிகுந்த சந்தோஷம். மரூஃபிற்கு அதைவிட, ஓடிப்போய் இரயிலுக்குள் ஏறிக்கொண்டு எல்லோரும் வேகமாக உள்ளே வாங்கப்பா என குதித்தான்.
             [சீக்கிரம் வாங்கோ இல்லாட்டி  ரயில் எஸ்கேப் ஆகிடும்]
அவரவருக்கான இருக்கையில் அமர்ந்துகொள்ளலாமென தேடவேண்டிய நிலையில்லை நிறைய இடங்கள் காலியாக இருந்தது சன்னல்கள் இருக்குமிடத்தில் போய் அமர்ந்துகொண்டோம். அடுத்த ஸ்டேஷன் வந்து ஆட்கள் ஏறும்வரை. கொண்டுபோயிருந்த பேக் மற்றும் சூட்கேசுகளை பத்தரப்படுத்திவிட்டு சீட்டுகளில் அமர்ந்து சன்னலோரத்தில் இருந்தபடி  வெளியில் நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தபோது கோஓஓஓ வென்ற ஓசையோடு தன் பயணத்தை தொடங்கியது.
                 [ சன்னலுக்கு பி[மு]ன்னால என்னாயிருக்கு]
மெல்ல மெல்ல ஓடத்துவங்கிய வண்டி தன் சப்தத்தை உயர்த்தி சற்று வழுவாக செல்ல ஆரம்பித்தபோது. காஃபி டீ, என வரிசையாக இட்லி பூரி. சப்பாத்தி பரோட்டா.கேக் சிப்ஸ்.தயிர்வடை கூல்ரிங்ஸ் என ஐந்து நிமிடத்திற்கொருமுறை சாப்பாட்டு ஐயிட்டம் வந்த வன்னமிருந்தது. ஆச்சரியத்தோடு அனைத்தையும் பர்த்துக்கொண்டிருந்தேன். பின்னே நமக்கு இதெல்லாம் புசுதுல்ல அதேன்..
                                  [வட வட இட்லி பூரி சப்பாத்தி]
சின்னோண்டு நாலு டயர் உள்ள கார், டாட்டா சுமோன்னு போன நமக்கு, இம்மா பெரிய வண்டியில போவது ஆச்சர்யமல்லவா !அதுவும் இருந்த இடத்திலேயே இருக்காமல், அப்பப்ப எழுந்து நடந்து, வாசல் எட்டிப்பார்த்து, இயற்கையை ரசித்து, அப்பால போறவங்களுக்கு இப்பால நின்னு கையாட்டி, வேகமாய் வீசும் காற்றோடு கார்குழலும் கண்ணிமையும் கொஞ்சி கொஞ்சி விளையாட, புதுவித சப்தங்கள் சப்தஸ்வரங்களாய் இசைமீட்ட , இடையிடையே பாலங்களை கடக்க, அதில்மேல் போகும்போது அடிநெஞ்சம் சற்று அஞ்சுவதுபோல் தடதடக்க,
                  [பலவித மனிதர்களும் அவங்களோட பொருள்களும்]
உள்ளேயிருக்கும் மனிதர்களில் பலரின் முகங்கள் வாடியிருக்க, சிலரின் முகம் மலர்ந்திருக்க, இரண்டுக்கும் அப்பார்ப்பட்ட சிலபல இருக்க. இன்னும் சிலர் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி குடும்பசெய்திகளை பகிர்ந்துகொண்டிருக்க,  இத்தனையும் தன்னுள்ளே சுமந்தபடி தன்னையே ஆட்டி ஆட்டி பிறக்காக தாலட்டுப்பாடியபடியே சென்ற இரயில், இரு தண்டாவாளங்களுக்கிடையில் தன்னை ஒரு நிலைப்படுத்தி அப்புறம் இப்புறம் சாய்ந்துவிடாமல், வளைந்து நெளிந்து அதே சமயம் தன் வேலையில் மிகுந்த கவனத்தோடு தன் எல்லையை நோக்கி ஓடியது.
   [எட்டிப்பார்த்தேனா ஆத்தாடி என்னா வேகம் ஆனாலும் அழகோ அழகு இயற்கை]
அனைத்தையும் ரசித்துவந்த என் கண்ணில்தென்பட்டாள்  என் எதிர்புற சீட்டில் ஒருசின்னப்பெண். அவள்மட்டும் தனியாக சன்னல் கம்பிகளை தன் கன்னங்களைகொண்டு உரசிக்கொண்டே சிந்தனையை எங்கோவிட்டப்படி அமர்ந்திருந்தாள். பக்கத்தில்போய் அமர்ந்தேன். திரும்பிப்பார்த்தாள் ”எந்த ஊர் என்றேன்”  “மாயாவரத்திலிருந்து திருப்பூர் போறேன்க்கா” ”தனியாகவா” ”ஆமாக்கா” எதாச்சையாக குனிந்தபோது அவள் காலில் மெட்டியை கண்டு திருமணம் ஆகிவிட்டதா என்றேன்? ஆமாக்கா மூன்றுமாதமாச்சி. அதோடு சரி அப்புறம் திரும்பிக்கொண்டாள். என்னவோ எனக்கு சற்று சங்கடமாக தோன்றியது இவளுக்கு ஏதும் பிரச்சனையோ ஏன் சோகமாக இருக்கிறாள் நினைத்தபடி நானும் மெளனமானேன்.
                   [மம்மி காதுக்குள் கிர்ருங்குதே என்னா அது]
படுவேகமாக ஓடும் இரயிலின் வாசலில் நின்றபடி அழகை ரசித்து  எட்டிப்பார்த்துபோது ஏற்பட்ட திகிலையும் உள்வாங்கிக்கொண்டபடியே நானும் மரூஃபும், காணும் காட்சிகளை கேமராக்குள் பதிவுசெய்துவிட்டு நான் இருக்கையில் வந்தமர்ந்தேன். கொஞ்சநேரம் கழித்து என்னைப்பார்த்து ”நீங்க ஏன் படம் புடிக்கிறீங்க, நீங்க எங்கிருந்து வாரீங்க” என்றாள். ”நான் தஞ்சையிலிருந்து வருகிறேன், சும்மாதான் போட்டோக்கள் எடுக்கிறேன்” . என்று பேசத்தொடங்கியதுதான் சற்று நேரத்திற்க்குள் நன்றாக பேசினாள். ”ஏன் முகம் வாடியுள்ளாய் ஏதும் பிரச்சனையா ”ஆமாக்கா எங்கப்பா இறந்துட்டார்” சொல்லும்போதே மடமடவென கண்ணீர் வழிந்தோடியது அவளால் அடக்கமுடியவில்லை, அழுதுகொண்டே 
 [இதிலே தாங்கோ தன் இரும்புடலை இழுத்துக்கொண்டு இத்தன வேகமா ஓடுதான் இரயிலு ]
”எங்கப்பா எங்களை மூட்டைத் தூக்கி வளர்த்தவர் மிகவும் நல்லவர்.மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார் தற்போது நாங்கள் தலையெடுத்து அவருக்கு எதுவும் செய்யலாமென்ற நேரத்தில் திடீரென்று இறந்துவிட்டார். பத்துநாள் படுக்கையிலிருந்தாலும் மனம் ஆறிப்போகும். இப்படி எங்களை விட்டுவிட்டு போய்விட்டார். என்றாள். ”கவலைப்படாதே பூமிக்கு வந்திருக்கும் அனைவரும் ஒருநாள் போயே தீரவேண்டும் யார் எப்போது போவார்கள் என யாருக்கும் தெரியாது மனதை திடப்படுத்திக்கொள் கடவுளிடம் உனது தந்தைக்காக வேண்டிக்கொள். உனது தாயை நன்றாக கவனித்துக்கொள் அதுதான் நீ தற்ப்போது அவர்களுக்காக செய்யவேண்டிய கடமைகள். என்றேன்.
         [ வீசும் காற்றில் விரலில்லாமலே தலைகோதிக்கொள்ளும் நாற்று]
ம்ம் என தலையாட்டிக்கொண்டே  நீங்க பேசுவது மனசுக்கு தெம்பாயிருக்குக்கா என சொல்லியபடியே மீண்டும் அழுதாள். அதுசரி நீமட்டும் வந்துள்ளாயே? திருமணம் முடிந்து 3 மாதம்தான் ஆகிறது என்கிறாய் உன் கணவர் உன் கூட வரவில்லையா என்றேன். இல்லக்கா. அவர் அப்பா செத்த அன்று வந்துவிட்டு போயிட்டார் நான் காரியம் முடிந்துவருகிறேன். அவரும் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்.வேலைதேடவேண்டுமென சொல்லிதான் முதலிலேயே கிளம்பிவிட்டார் என்றாள்.
                  [மதிய நேரத்திலே இருளுக்குள் ம[ய]ங்கிய இயற்கை]
இப்படி பேசிக்கொண்டே இடையிடையே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டு வந்தோம். இரவாகவில்லையென்றபோதும் ஏனோ வானம் இருளைக் கவ்விக்கொள்ள இரயில் ஓடும் இடமெல்லாம் இருள் சூழ்ந்து காட்சியளித்தது இயற்கை. இடையில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அக்கா அங்கப்பாருக்கா என கலா கைகாட்டிய திசையில் என் பார்வைபோனபோது அங்கு ஒரு காட்சி திடுக்கிட வைத்தது. அங்கிருக்கும் ஸ்டேஷன் பென்சின் அடியில் ஒரு தடித்த சேலைகட்டிய பெண் தரையில் உருண்டபடி இருத்தார், பக்கத்தில் அவரின் தோல்பை கிடந்தது. இப்படிதாங்க்கா சிலசமயம் கிடப்பாங்க குடிச்சிருப்பாங்கபோல என்றாள் கலா.
       [ஓடும் மேகமெல்லாம் ஒன்றுகூடி வயலோடு உறாடும் பொழுது]
என்ன சொல்கிறாய் அதிர்ந்தபடி கேட்டேன். ஆமாக்கா நான் இதே வழியாக இரண்டு முன்றுமுறைவந்துள்ளேன். இப்படிதான் கிடப்பாங்க அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள் அதுக அப்படித்தான்னு இதுகளுக்கு வேறவேலையேயில்லை சனியனுங்காப்படின்னு திட்டுவாங்க்க்கா அதான் சொன்னேக்கா என்றாள்”
                 [தள்ளாடும் காலத்திலும் தன் உணவுக்கு தானே உழைக்கும் முதுமை]
அச்சோ அப்படியெல்லாமிருக்காதுப்பா மயக்கம் ஏதும் வந்திருக்கும் என நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது அப்பெண் தன் வாயில் தன் ஐந்துவிரல்களையும் விட்டு வாந்தி எடுத்தார். அங்குமிங்கும் போகிறவர்கள்கூட யாரும் கவனிக்கவேயில்லை. என்ன கொடுமையடாயிது எல்லவெல்லாம் நடக்கிறது இக்காலத்தில் என்னத்தை சொல்ல எல்லாம் காலத்தின் கோலம். என்ற சொல்லியபடியே சற்று தூரமாக இருந்தாலும். சன்னல்வழியே என் கேமரா ஒரு கிளிக் கிளிக்கியது அக்காட்சியை.   
                                           [என்னத்த சொல்ல அவுகதான் இவுக ]
 இரயில் மீண்டும் காஃபி வந்தது அப்துல்லா என்ற அந்த காஃபிமேக்கரிடம் கலை காஃபி வாங்கினாள் அக்கா உங்களுக்கும் சேர்த்து வாங்கவா. வேண்டாம் பரோட்டா சாப்பிடலாமா என்றேன். காஃபிக்கு பின்னே வந்த பரோட்டா பார்சல் வர  அதை மச்சான் இருவருக்கும் வாங்கித்தர அதை இருவரும் சாப்பிட பிரிக்கும் வேளை ஒரு 30 35 வயதிருக்கும் ஒருஆள் வந்து சன்னலோர சீட் என்னுடையது என்றார், பின்னால் இரு இரு ஆண்களாக அமர்ந்திருந்த சீட்  காலியாகயிருந்தும் நாங்கள் இரு பெண்கள் இருக்குமிடத்தில்தான் அவர் வந்து அமர்வாராம் அடம்பிடித்து அமர்ந்துகொண்டார்.

              [வேகம் தாங்காமல்  குலைநடுங்கும் வாழை ]
கொஞ்சநேரம்தான் அவர்மேலிருந்து சாராய வாடை, தினத்தந்தியை பிரித்து படிப்பதுபோல் நோட்டம் விட்டவர். திடீரென்று செல்போனில் ஏதோ செய்வதுபோல்  பாவ்லா காட்டி சின்னப்பெண்ணின் முதுகையே கூர்ந்து நோக்கினார், அவள் சுடிதார் அணிந்திருந்தாள்  கழுத்துப் பகுதிமட்டும் தெரிந்தது நான் அவளை கிள்ளிவிட்டேன். நிமிர்ந்தவள் அவரைப்பார்த்து முறைத்தாள். சற்று நேரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருபெண்ணை நோக்கி திரும்பினவர் செல்லை மேழ்நோக்கிப்பிடித்தார். அங்கேயும் என் பார்வை சென்றபோது அதிர்ந்தது. சேலை அணிந்திருந்த அப்பெண்ணின் இடுப்புப்பகுதி மற்றும் மார்புபகுதியென ஆங்காங்கே தெரிந்தது அப்போது அவர்,, 
 [எவரோ  இவர்]
கொஞ்சம் ரிலாக்ஸ், மீண்டும் ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ஓசைவரும்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது