நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலையுலகத்தில் நான்.


பதிவெழுத வந்ததால் கிடைத்த நிகழ்வுகளும் சில நெகிழ்வுகளும், காலங்கள் கடந்துவிட்டபோதும் மனதில் கிடக்கும் சந்தோஷ தருணங்கள்.அதை பகிர்வதில் மகிழ்ச்சியே!
தனக்குள் உதிக்கும் அத்தனையும் எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கவே நானும் பதிவர்களில் ஒருத்தியாக வலம்வர நினைத்து. ஏதோ எனக்கு தெரிந்தவைகளை கவிதைகளென்னும் பெயரில் கிறுக்கிவருகிறேன்.
என் எழுத்துக்கள்கூட சிலருக்கு பிடித்திருக்கிறது எனநினைக்கும்போது மனது சந்தோதங்களை உணர்கிறது. அப்படி எழுத தொடங்கியதின் விளைவு. பல நல்ல உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் பெற்றுதந்தது என்றால் அதுமிகையாகது.வலையுலகத்தில் நானுமிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியே

கடந்த 28-8-2010. அன்று எங்கள் வீட்டில் விசேசத்திற்காக 15 நாள் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது சில நல்ல உள்ளங்களையும் காணவும்
அன்பு பொங்கிய மனங்களிடம் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அன்பு சாரதாம்மாவிடம் பேசியனேன். போனிலேயே பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டார்கள். தாய்மையின் அன்பும் பேச்சும் என்னை நெகிழவைத்தது அவர்களால் வரயிலாது கன்னியாகுமரியில் இருக்காங்க நானும் போகமுடியாச்சுழல். அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம்.
சாராதாம்மா நிச்சயமாக வருவேம்மா.அடுத்த லீவில் உங்களைபார்க்க!

அப்புறம் நேரில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திய சகோதரர் காஞ்சி முரளியென்னும் முரளிதரன் அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று வீட்டின் விசேசமன்று வந்திருந்தார்கள். நெடுந்தூரம் என்றபோதும் உடல்நிலை சற்று ஒத்துழைக்காபோதும். என் எழுத்துக்களின் வாசகராய். விமர்சகராய். பிழைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராய். எங்கள்சகோதரராய்.தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு. என் அன்னையிடம் என்னைபற்றி இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை இப்படியொருமகளை பெற்றெடுக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவரின் எழுத்துக்கள் பலரையும் சென்றடைந்துள்ளது என சிலபல நல்லவாக்கியங்கள் சொல்லியபோது, பொறுப்பாலும். மனதாலும்.வயதாலும்.எவ்வளளோ பெரியவங்க சிரமம் பாராமல் எங்களைக் காணவந்ததே சந்தோஷத்தை தந்தது.அதுவும் அன்பு மனைவி, அருமை மகள், பாசமான அக்கா பசங்கள் ஆகியோரோடு வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது.அண்ணி வசந்தியையும். மருமகள் சாருவையும் எனக்கும் என்வீட்டாருக்கும் ரொம்ப பிடித்துபோனது.

அடுத்து கோலங்கள் சாரூக்காவிடம் போனில் பேசினேன் மிகக்குறுகிய காலமாக இருந்ததால் அக்காவால் எங்க ஊருக்கு வரவோ நான் கும்பகோணம் செல்லவோ நேரில் சந்திக்க முடியாமல்போனது மனதுக்கு வருத்தம்தான்.அக்காவிடம் பேசும்போதே நேரில் சந்தித்த திருப்தி குட்டிச்செல்லங்களிடம்தான் பேசமுடியவில்லை. அக்காவின் அம்மா ஊர் தஞ்சையென்றாலும் அக்கா இருப்பதோ கும்பகோணம் என்ன செய்ய நான் இருப்பதோ மு. அ. வில் இன்ஷா அல்லாஹ் வரும் லீவில் கண்டிபாக சந்திக்கனும்.யக்கோவ் தேடுதா? .

அடுத்து சுஜி, அவரிடமும் போனில் பேசினேன்.அன்போடு அழகாய் பேசிய சுஜி,  அக்கா உங்கள் கவிதைகளை புக்காக தொகுத்து வெளியிடுங்களேன் என்று தன் விருப்பதைசொன்னார் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் வெகுவிரைவில் அதுவும் வந்துவிடும் சுஜி.
அடுத்து. என்தந்தையின் ஊரான அதிரை யுனிக்கோட்
”தேனி”திரு உமர்தம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.தேனி உமர்தம்பி அவர்களின் கணினி சேவையை பாராட்டி அவர்கள் பெயரில் கோவை செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என அமைத்து அவர்களை  கவுரவித்தது தமிழக அரசு.அதற்கு சில முயற்சிகள் செய்தது நானும் என்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்களும்[இங்கு கிளிகினால் முழுவிபரம்] எங்கள் தெருவுக்கு முதல் தெருவு அதுவும் என் தந்தையின் மிக நெருங்கிய பால்ய சினேகிதரின் உறவுக்காரர்தான் என எனக்கு அங்கு அவர்களின் வீட்டில் பேசியபோதுதான் தெரிந்தது.

தந்தை ”தேனி”உமர்தம்பியின் மனைவி அவர்களிடமும்,மற்றும் மருமகள் அவர்களிடமும் பேசினேன்.
தற்போது உயிரோடு இருந்திருந்தால் இவ்விருது கிடைத்தமைக்கு எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பார்கள் என மனமுடைந்து அவர்களின் மனைவி கூறியபோது எனக்குள் இனம்புரியாத வருத்தம் இறுக்கிப்பிடித்தது. எந்த ஓர் ஆத்மாவுக்கு அது செய்த நன்மையின் பலனை எவ்வழியிலாவது வழங்கிவிடுவான் இறைவன்.அதோடு மறுமையிலும் நற்பாக்கியதை வழங்குவான் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு நோன்புக்காலம் என்பதால்,நிறையநேரம் இருக்கமுடியாததால் கிளம்பினேன் 10.நிமிடந்தான் என்றபோதும் மனநிறைவாக இருந்தது.என் எழுத்துக்களால் இன்னும் நிறைய நல்லவைகள் செய்யவேண்டுமென மனதுக்குள் நினைத்தவன்னம் வெளியேறினேன்.

நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் எல்லாம் சிறந்தவைகளாக இருக்கும் என்ற இறைவனின் வாக்குப்படி. அதை வலியுறுதும் பெரியோர்களின் சொல்படி.நமது எண்ணைங்களை தூய்மையாக்கி அதன் வெளிப்பாட்டில் எழும் எழுத்துக்களை அழகாக்கி பிறரின் மனதையும் நிறைவாக்க முயற்சிக்கவேண்டும்.

இவ்வலைதளத்தின் மூலம் கிடைக்கபெற்ற சந்தோஷ தருணங்களை மனதில் நிலைநிறுதியவளாய் இன்னும் கிடைக்கபோகும் பாச நேசங்களையும். அன்பு அறிவுரைகளையும் எதிர்நோக்கியவளாக!
என் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் தோழமைகளாக. உங்களின் பாசத்தை என்றும் விரும்புபவளாக.என் எழுதுப்பயணத்தை தொடரவிரும்பும்
என்றுமே மாறா அன்புடன்

உங்கள்
அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

 கலைச்சாரலில் இப்படியும் ”கடி”நோய்கள் 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது