நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சாட்டையடி

வீட்டைவிட்டு கிளம்பும்போது
விருட்டென சென்றது
வாசல்வழி வந்தபூனை

வாசலிலேயே நின்று
வடக்கு பார்த்தும்
வாஸ்து பார்த்தும் -மனதில்
விசமத்தோடு சென்றான்

வீதியிலொருப் பூனை-தன்
வயிற்றுப் பசிபோக்க 
எதிர்திசையில் கிடந்த -தன்
இரணத்தை எடுக்க ஓடியது

கூறுகெட்ட மனிதன்-அதன்
குறுக்கே போக
சர்ரென போனவண்டி-அதன்மீது
சட்டென ஏறியதும்

இறந்தது பூனை
இடிவிழுந்ததுபோல் நின்றான்
எல்லாம் கற்றறிந்த
இன்றைய மனிதன்

மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
மனதில் விழுந்தது சாட்டையடி
மனசாட்சியின் ஓசையால்......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது