நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பசி"


மானம்
தன்  மானத்தை இழந்து
அவமானத்தை சுமந்து
அறிவுடமையை மடமையாக்கி
அன்னம்கேட்டு கையேந்த வைக்கும்,,,,

அடிவயிற்றில் அமிலம் சுரக்க
அதனனலில் அடிக்கடி
அங்கமெங்கும் வெந்துதுடிக்க
வெட்கம் வேரறுந்து
குலமழிக்கும் நிலையை  தூண்டும்
அச்சம்தன் அச்சானி கழட்டி பிறரை
அச்சுறுத்தியும் பிழைக்கும்...

ஊன் உருகி உயிரைக் கருக்க
உதிரச் செல்கள் தர்ணா நடத்த
வயிறலறி வாய்கண்ணடைக்க
உடல்களைத்து வீதியில்சாய்ந்து
விதி
வீதிஉலா காட்சியாக்கி வருத்தும்...

உயிரின் வேர்காலில்
விகாரத்தின் கொடுக்கொன்று
விடாதுகொத்தி கொத்தி
பசியின் துயரத்திற்கு விசமேற்றும்
வீடற்று தெருக்களிலும் தவக்கோலம் பூட்டும்...

ஆற்றடியை அடியோடு வீழ்த்தி
அங்கத்தை அனுஅனுவாய் மாய்த்து
உணர்வுகளை வெருண்டோடவைத்து
வதன உடமைகளையும்
வேல்வியில் இறக்கி வதைக்கும்...

பணம் பொருளிருந்தும்
பசியில் உண்ணமுடியா நிலைவந்தும்
பட்டினியின் கொடுமைதன்னை
புரிந்தும் புறந்தள்ளி

பசித்துகிடப்போர் அறியாது
தானம்தரா ஈனராய்
ருசியில் புசிப்போரப்போரை
புளிச்சயேப்பத்தின் துர்வாடையோடு
நாளை நரகம் பசியெடுத்து
அகோரியாகி தன் பசியிதனைத் தீர்க்கும்..அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எனைவிரும்பி....


நைல் நதியின் நீளத்தை மிஞ்ச
நினைத்த உனதன்பால்
நான் நிலைகுழைந்துதான் போனேன்
நீயற்ற பொழுதுகள்
நீரற்ற நிலமாவதுபோல் உணர்ந்தேன்

உன்போல் யாரும்
என்மீது அக்கரை கொண்டதில்லை
இதுதானோ
இதயமாற்றம் செய்யும் அன்பின் நிலை
அதீத அன்பே ஆன்மாவின் பிள்ளை
அதுவும் மிஞ்சினால் வருமோ சல்லை!

என்னை விரும்பியாய்
எந்நொடியும் இருந்துவிட்டு
எங்கு மறைந்தாய் எனைவிட்டு
எதையும் மறக்குமோ நம்மிதயக்கூடு
எதுவும் அழியுமோ நம்மைவிட்டு

உடல் தடதடக்க
உதிரம் கிறுகிறுக்க
குழைகிறது குமைகிறது
உனைத்தேடும்  கண்கள்!

உயிர் துடி துடிக்க
உணர்வுகள் வெடி வெடிக்க
துடிக்கிறது துவழ்கிறது
உன்னால் களவாடப்பட்ட நெஞ்சம் ...

பூக்கவா! புதையவா!


இறைவனின் பேருதவியால், இன்ஷாஅல்லாஹ் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பான
 ”பூக்கவா புதையவா” நூல் இன்று ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியின் 20 ஆண்டுவிழாவில் வெளியிப்பட உள்ளது.
இது இறைவனின் திடீர் ஏற்பாடு,, 

எது எப்படி நடக்கவேண்டுமென மனதார நினைத்திருந்தேனோ 
அது திடீரென்று நடக்கபோவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது
எனது மனமகிழ்வை தங்களோடு பகிர்வதில் ஆத்ம திருப்தி.
தாங்கள் அனைவரின் பிராத்தனைகளை என்றும் எதிர்பார்க்கும்
உங்கள்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரண தண்ட[வேத]னை...
தூக்குகயிறறியாது
தொங்குபவரின் துக்கமும், தொண்டைக்குழியின் சத்தமும்
வன்மம்கொண்ட மனமறியாது-பிறர்
வாழ்க்கையின் மகத்துவமும் உயிரின் மேன்மையும்...

மரணவலி மனிதர்களுக்கு ஒன்றுதானே
துடிக்கும் உயிரை
துடிக்க துடிக்க கொல்லுகையிலும்
தூக்குக்கயிற்றில் தொங்கவிடுகையிலும்....

இருள்
நீங்கா பொழுதொன்றில்
நீதி அநீயிழைத்ததா?
இல்லை
நீதிக்கே அநீதம் இழைக்கப்பட்டதா?
என்றறிந்துமறியா நிலையில்-
நிசப்தங்களாய் சில நிழல்கள்...

முற்றும் துறந்த நிலையில்
மூச்சடக்கப்போகும்-தன்
முன்தொங்கும் கயிற்றின் வழியே-இறுதி
மூச்சுக் காற்றினை உள்ளிழுத்த
நெஞ்சுக்குள் நிலைகுலைக்கும் பேரிடிகள்...

தீவிரங்களாய் சில தீர்ப்புகள்
தீவிரவாதிகளின் உயிரெடுப்பதற்க்கு
தீட்டுவது சரிதான்--ஆனால்
தீவிரவாதிகளென அப்பாவிகளின் உயிர்கள்
தீர்க்கப்படாமல் காக்கவேண்டுமே நீதிதான்...

தீவிரவாதம்
ஒருபோதும் ஏற்க்கபடவேண்டிய ஒன்றல்ல
ஒழித்தழிக்கப்படவேண்டிய ஒன்று
ஒழிப்பதாய் எண்ணி ஒடுக்கப்பட்டோர்கள்
அழிக்கப்படுவதும் நன்றல்ல..

நீதி தேவதையே!
உன் கண்ணைக் கட்டியது எதற்க்கு?
அநீதங்கள் அரங்கேறுகையில்
நீ கதறியழுவது கசிந்திடக்கூடாதென்பற்கா?

நீதி தராசே!
உன் முட்கள்
சத்தியங்களால் மட்டுமே சமமாகட்டும்!
தீர்ப்பெழுதும் எழுதுகோளே!
உன் எழுத்தாணி
உண்மைக்கு மட்டுமே தலைசாய்க்கட்டும்...

----------------------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இப்படியும் சில....
பெயரற்ற
குயிலொன்றின்
குரலை இரவல்வாங்கி
என்னிதய செய்தியொன்றை
இரங்கலாக
உன்கல்லிதய செவிகளுக்கும்....
மயானதேசத்து
மலர்களை கொய்து
என்மன ரணங்களை
சாராக
உன்துரோகநாவின் நரம்புகளுக்கும்.....
அகோர
எரிப்பிளம்பின் அனலெடுத்து
காற்றாக
அமைதிகுலைத்த
உன் தீயெண்ணங்களுக்கும்.....
பாடம்புகட்ட
அனுப்பிவைத்துள்ளேன்
உணர்வறுத்து உறவற்றப்போன
உன்னையது
ஒன்றும் செய்யாதெனத் தெரிந்தும்....அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காரணங்களை தேடும் க[இ]ழிவுகள்..
பொதுகக்கூசின்
மூக்கைக்புடுங்கும் நாற்றம்!
சக்கடையில் மேயும்
கரன்பான்களின்  அருவறுப்பு!
 அழுகி ஊறிய குமட்டலோடு
கொல்லைப்புரத்து குப்பை!
கழிவுநீரில் உளன்று
குடலைபிரட்டும் எலிப்புழுக்கை!
இவைகளைமீறிய கலவையுடன்
எச்சிலில் மிச்சம் புணர
இச்சைகளைத்தேடும் வக்ரம்
எல்லாத்திற்கும்
காரணம் சொல்லும் காரணம்,,
இதற்கும் சொல்லும்
அடுப்படி சரியில்லையென
புலக்கடையில் சோறுபொங்கியதென!...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இருப்பைத்தேடி..


சாயங்கால வேளையில்
சாமரம்வீசிய தென்றல் தழுவுகையில்
சஞ்ஜலத்தில் ஆழ்ந்துகிடந்ததை யாரோ
சம்மட்டியால் அடித்ததுபோல் படபடக்க

முன்பாவ செயல்களின் பட்டியல்கள்
முன்னுக்கு பின் முகம்காட்ட
கிளியின் இறகுக்குள்
கிலிப் பிடித்தாட்டியது

கொல்லைப்புரத்து கோவையை
கூரிய அலகால் கொத்துகையில்
அறிந்திருக்கவில்லை அது
ஆகாததென்றும் அருளற்றதென்றும்

உள்மனக்காயங்கள் ஊமையாகி
உணர்வறுத்து உருத்துகையில்
நெக்குருகி நெக்குருகி
நெஞ்சடைக்கும் பிராத்தனைகள்

ஒளிவட்டமொன்று ஒளிந்துகொண்டு
உற்றுப்பார் என்பதுபோல் ஒலிப்பதனால்
ஓடிப்பார்க்கிறது தேடிப்பார்க்கிறது கிளி
ஓச்சல் ஒழிவில்லாது

ஒளிவட்டத்திற்குள்
தனதிறுப்பை இறுத்திக்கொள்ள..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பசலைக்கான யாகம்..உலகெங்கும்
காதல் போர்க்களம்
இதில்
பெண்பூக்களுக்கே அதிக சேதாரம்
ஆண்பெண் சுதந்திரமோகம்
ஆட்கொண்டாடி வளர்கப்படுதே
ஆள்தின்னும் பசலைக்கான யாகம்
வாள்கொண்டு போர்செய்கையில்
போகவில்லை மான தன்மானம்
காதல்பேர்கொண்டு வசப்படுகையில்
வீழ்ந்துபோகுதே ஒழுக்கசீளம்
இதன் வீரியம் தாக்காதோர்
இப்பூமியிலில்லை யாரும்
இப்படியே போனால்
என்னவாகும் நாளைய சமூகம்
விடையில்லா கேள்விகேட்கும் நானும்
விடிய விடிய எழுதினாலும்
விடைகிடைக்காதோ எந்நாளும்...அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ச்சீ,,,
வெக்கத்தின் வெளிப்பாடு
அசிங்கத்தின் வெளிப்பாடு
இந்த
ச்சீ,க்களின்  வித்தியாசம்
முகம் போகும் போக்கிலும்
அதன்
செயல்காட்டும் வாக்கிலும்

வெக்கமும் அசிங்கமும்
இப்பொழுதெல்லாம்
வேடிக்கையாய்
வெளிடப்புச்செய்துவிட்டன!அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சமமாக வேண்டுமடி சகியே!அவர் உழைக்கவில்லை
அடுப்பு எரியவில்லை
ஆண்
அடிமாடாய் உழைக்கவேண்டும்
பெண்
அடுப்படியில் இருக்கவேண்டும்
காலங் காலமாக
எழுதப்படாத விதியாகப்போனதோ!

உழைத்துக் களைப்பவனுக்கு
ஊதியங்கள் கைநிறைந்தால்
உறவுகளின் மனம்நிறையும்
உழைத்துழைத்தே ஓட்டாண்டியாய்
ஓடாய் நாராய் போனப்பின்னே
ஓய்வெடுக்க எண்ணுகையில்
முடங்கப்பட்டு மூலையில்!

இணையென்பதின் அர்த்தம்
இணக்கத்தில் மட்டுமல்ல
எல்லாத்திலும்
இருத்தல் வேண்டும்
தாரம் அவனின் ஆதாரமாக
தாங்கவேண்டும் தக்க சூழலிலும்
அவன் முடங்கப்படும் முன்பே!

வீட்டில் உலைகொதிக்க
விலையேற்றத்தின் மலைகண்டு
நிலைதடுமாறுவதை தடுக்க
தள்ளாட்டும் அலையை
தாலாட்டாய் நினைத்து
வலைவீசத்துணிந்தாள் இவள்!

பெண்ணுக்குள்
பொறு[றா]மை மட்டுமல்ல
போர்வெல்லும் ஆண்மையுமுண்டு
வெல்வதற்கு
வழிகாட்டுதல் மட்டுமல்ல
தனதாற்றலைக்கொண்டும்
வெற்றியின் வேர்பிடித்து
வளரவும் தெரியும்

குடும்பத்தின் தளம்காக்க
உழைப்போடு கைகோத்து
துணைக்கு தோள்கொடுத்து
வாழ்க்கையினை வளப்படுத்த
இவள் வலையெடுத்தாள்
நான் வளையெடுத்தேன்

மானங்காத்தபடி
வருமானமீட்டடி சகியே
வாழ்வும் செழிக்குமடி
வாஞ்சையும் நிலைகுமடி சகியே!
குடும்பம் காப்பத்திலும்
கூடி மகிழ்வதிலும்
ஆணும் பெண்ணும்
சமமாக வேண்டுமடி சகியே!
==============================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சுழற்சியின் பின்னனியில்..உலகம்
சுழன்று சுழன்று
நல்லதும் கெட்டதும்
துன்பமும் இன்பமும்
நண்பனும் எதிரியும்
பணமும் பஞ்சமும்
வாஞ்சையும் வாட்டமும்
மாறி மாறி சுழற்சி தந்து
உருண்டையானதின்
அர்த்தத்தை உணர்த்துகிறது
இவ்வுலக வாழ்வுநிலை
நிலையற்றதென்பதை அறிவுறுத்துகிறது..அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மனம் திறக்கும் மடல்


அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
பூவெழுத்துக்களால் வார்கிறேன்

கடிதம் கண்டு
கனவுக்குள்ளேனும் வா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!
 =====================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மன[ண]முடைதல் [அவளுக்காக நான்]எனக்கான எல்லாத் தருணத்திலும்
உனக்கான இருப்புகள் காத்திருந்தன
ஆனால்
உனக்கான சமய தருணங்களில்கூட
எனக்கான இருக்கைகளே இல்லை!

ஓ,, நீயும் நானும்
ஓடுடைந்த முட்டைகள்
நீ என்னிடத்தில்
நீயோ அவளிடத்தில்

சோரம் ஆதாரமாக
தாரம் சேதாரமாக
மணக்கோலம்
அலங்கோலமாய்,,..
==================


அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வலைதளங்கள் இயங்குகிறதா?

 மீண்டும் இணைந்திடுவோம் மீளா அன்புடன்

நீண்ட இடைவெளிகள் வலைதள உள்ளங்களுக்குள் ஏற்பட்டதுபோன்ற ஓர் உணர்வு, முகநூல் மற்றும் டிவிட்டரின் ஆளுமையினாலும் அதனுள் நாமும் அடைமையாகிவிட்டதினாலும்,தனிப்பட்ட நமது வலைதளங்களில் சற்றே அல்ல கொஞ்சம் கூடுதலாகவே இடைவெளிகள் வந்துவிட்டது, நம்மில்பலர் நம்மையே மறந்துவிட்ட நிலைபோல், அதனில் சற்று நின்றுகொண்டும் நம்முடையவைகளையும் நிலைப்படுத்திக்கொண்டும், மீண்டும் நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் அன்பையும், நட்பினையும்  நமது எண்ணங்களையும் கருத்துகளாக பகிர்ந்துகொள்ளவேண்டுமென்பதே ஆவல், என்ன முயற்சிப்போமா?
 ================================================

                         அன்பு


அண்டப் பெருவெளியில்
ஆளற்று நிற்க்கும்போதும்
இறையால் விதைக்கப்பட்ட
இயற்கை விதைகள்
அன்புகொண்டு ஆரத்தழுவும்
ஆனந்தக் காற்றாய்!

ஆயுதமேந்திய ஆபத்துகள்
ஆட்கொல்லி விசமாய்
ஆங்காங்கே பரவியபோதும்
அடிமனக் கருணைகள்
அன்புகொண்டு தேம்பியழுகும்
அந்நியோன்னியமாய்!

மனக் குமுரல்கள்
மண்டிக்கொண்டு
மனிதரையே நிலைகுலைக்கும்போது
மெதுவாய் தலைகோதும் விரல்கள்
மென்மைகொண்ட ஆத்மார்த்தமாய்!

அவ[ன்]ள் போனலென்ன
நானிருக்கிறேன்
என்னுமிடத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
அன்பாயுதம் ஆணித்தரமாய்!

பாகுபாடின் பேதமற்ற
பச்சோந்திகளின் தோற்றமற்ற
நிறயின பாகுபாடற்ற
நோக்கியதிசையில் தீர்க்கமுற்ற!

வாஞ்சையாய், வசீகரமாய்,,
அரவணைப்பாய், அதட்டுதலாய்,,
தன்மையாய், தாயுள்ளமாய்,,
தோழமையாய், தன்னம்பிக்கையாய்,,

கருணையாய், கனிவாய்,,
அரணாய், ஆதரவாய்,,
இரக்கமாய், ஈகையாய்,,
இளம் புன்னகையாய்,,

வார்தைகளால்
வர்ணிக்க இயலாத
சொற்களால் வாழாமல்
செயல்களில் வாழுகின்ற
சொர்க்கத்தின் திறவுகோல்!

நம்பிக்கை துரோகத்தையும்
நெடுங்கால விரோதத்தையும்
கொடூர உள்ளத்தையும்
நலங்கெட்ட எண்ணத்தையும்
சீர்திருத்தும் நெம்புகோல்!

அன்பென்ற ஒன்றே
இப்புவியை புண்ணியமாக்கி
இயக்கும் பூகோலம்
அன்பென்ற காற்றில்லையெனில்
சுவாசங்களில் கலக்குமே விசவாய்வுகள்!

பலவீனதின் பலமும்,
பலத்தின் பலவீனமும் அன்பே!
அன்பென்ற அணுகுமுறை
அகிலத்தில் இல்லையெனில்
படைப்பினங்கள் மொத்தமும்
பயனற்றவையே!

அன்பின் பரிமாற்றங்கள்
அகம் புறங்கள்
அலவாவிக்கொள்ளும்வரை
ஆன்மாக்களும்
ஆத்மார்த்தங்களும் நிறைவுபெற்றவையே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது