நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துரோகியாகும் தோழமைகள்..

[யாரோ]

---------------------------------------------
காதலை
சேர்த்துவைப்பதாய் எண்ணி
கழிசடைக் காதலர்களை
கைகோத்துவிடும் தோழமைகள்

தாங்கள் செய்வது
சரியா தவறாவென
உணர்வதில்லை
சேருமின சொந்தங்களின்
உணர்வுகள் செத்துமடிவதையும்
அறிவதில்லை
புரிந்தும் பலர்
பொருட்படுத்துவதேயில்லை

தோழன் வாழ உதவுகிறான்
தோழன்-தன்
தோழனின் தாய் தந்தைகளுக்கு
துரோகமிழைத்து-அவர்களின்
பாசத்திற்க்கு பங்கமிழைவித்து

தோழமைக்கு
உதவுவது குற்றமில்லை
உதவினோரின் குடியின்
உயிர் குடிக்கும் உபத்திர
உதவிகள்  புரிவது சரியில்லை

காதலைசேர்ப்பது பாவமில்லை-அது
கழிவுக் காதலென அறிந்தும்
கூட்டுக் குடும்பத்தை
குலைக்க நினைப்பது
கொஞ்சமும் நியாயமில்லை

காதல்களில் பல
பொய்களின் பிறப்பிடம்-மன
நோய்களின் கூடாரம்
உயிர் உருஞ்சம் பிசாசினம்-அதற்கு
துணைபோகும் தோழமைகள்
துரோகங்களின் பங்காளியினம்..


 "கவியருவி
 அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது