நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பட்டாம்பூச்சியின் தேடல்..
ட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்

ண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்லவருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!

ளைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!

ருடிய விரல்
வெடுக்கென வலித்தது
களைப்பு நீங்கிய பட்டாம்பூச்சி
கண்ணடித்து காற்றில் மிதந்தது
கைவிரல்வழியே  இதயமும் கனத்தது..


அமீரக தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது