நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

குழந்தைகளின் மறுபக்கம்!இந்த கட்டுரை முத்துப்பேட்டை [அட நம்ம ஊர்தாங்கோ] குத்பா பள்ளிவாசல் திறப்புவிழா அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் கடைசியின் ஒரு பகுதி இப்புத்தகத்தில் இல்லை அச்சேறியதில் மிஸ்டேக் ஆகியிருக்கலாம் அல்லது நீளத்தின் அளவு கருதி குறைத்திருக்கலாம்...அதோடு எனதுபெயரிலும் சிறு[ தடு]மாற்றம் மலிக்கா ஃபாரூக். என்பதற்க்கு பதிலாக மாலிக்கா ஃபாரூக் ஹா ஹா.. இதோ உங்கள் பார்வைக்கும்.

நவநாகரீகத்தின் மிதமீறிய வளர்ச்சி, நாகரீகமற்ற மோகம்,தன்னிலை மறந்த செயல்கள். இதெல்லாம் மிக சர்வ சாதாரணமாகிவிட்டது இன்றைய காலத்தில்.இண்டர்நெட் மூலம்.முகநூல் அதாவது பேஷ்புக். மற்றும் இணைத்தின் வாயிலாக தொடர்புக்கொள்ளப்படும் யாஹூ. கூகுள்.எம் எஸ் என். ஸ்கைப்பி.மற்றும் மற்றவரை தொடர்புகொள்ள ஏதுவாக அதுவும் பல சமயம்  ஃப்ரியாக கிடைக்கப்படும் அனைத்தும்  தற்காலத்தின் மிக மிக அவசியமான ஒன்றானதாக ஆக்கப்பட்டுவிட்டது. எந்த ஒன்றையும் நாம் கையாளும் விதத்தை, மற்றும் அதைனை செயல்படுத்தும் முறையை தவறாக படுத்த ஆரம்பிக்கும்போதுதான் அது நமக்கே ஆபத்தாகவும், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகவும் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாது சினிமா சீரியல் என எவ்வகையில் முடியுமோ அவ்வகையில்.பச்சிளம் முதல் பருவம்வந்தவரை. வயதுவந்தவர்கள் முதல் திருமணமானவர்கள்வரை [சீரழிந்தும்]சீரழிய பலபலவகைகளில் தூபம் போடப்பட்டுவருகிறது.

தற்கால நாகரீக வளர்ச்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்றாலும் மனமும் உடலும் எக்காலமும் வகைபடுத்தப்பட்ட வரைமுறைக்குட்ப்பட்டு வாழநினைப்பதே வாழ்க்கையாகும் என்ற கோட்பாட்டுடன் வாழ்வோரும் வாழ்ந்துகொண்டுதான் வருகிறார்கள்.இன்றய தலைமுறையினருக்கு யாரும் எதுவும் கற்றுகொடுக்கவேண்டிய அவசியமில்லை எல்லாம் தாமாகவே தெரிந்துக்கொள்ளும் ஆற்றல்கள் உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி எல்லாம் தாமாகவே செயல்படும்போதுதான் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என அறியாமலேயே பலநேரம் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் பெற்றோர்களின்  அலச்சியப்போக்கும்,தன் குழந்தைதான் அது  எந்நிலையிலும் தவறே செய்யாதுஎன அதிகபட்ச நம்பிகையையும் அவர்களின்மேல் திணித்துவிட்டு அவர்கள் அவதியுறும்போது, வேதனைபட்டு அவர்களையும் வருத்தி தாமும் வருத்தப்படுவது நிகழ்காலத்தில் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று.

அதற்காக பெற்ற பிள்ளைகளை நம்பாமல் அவர்களை கண்காணித்துக்  கொண்டேயிருக்கமுடியுமா?  இது இன்றைய பெற்றோர்களின் கேள்வி. அப்படியில்லைஅவர்களின் மேலும் எப்போதும் ஒரு கண்பார்வையிருந்துகொண்டேக்கட்டும்.தக்ககவனிப்பும் இருக்கட்டும் அதையும்மீறி பல செய்கள் நடக்கிறதே என்ன செய்ய என்றால்நம்மைமீறிய செயலுக்கு நாம் காரணமில்லை எனும்போது அதை எவ்வழியில் சென்றால் அதற்கான தீர்வு காணலாம் என்ற தெளிவு இருக்கவேண்டியதும். அதற்கான முடிவு எடுக்கவேண்டியதும் நம்மிடமே இருக்கிறது!

சரி அப்படி எப்படிதான் அவர்களை கண்காணிப்பதுகண்கொத்திப் பாம்பாகவா?அல்லது செல்லுமிடமெல்லாம் கூடவே சென்றா? அல்லது எந்நேரமும் நோட்டம் விட்டுக்கொண்டே அலைந்தா? என்றால் அப்படியெல்லாம் அதிகப்படியாகவேண்டாம். இருந்தாலும் சில சமயம் அப்படி இருப்பதிலும் தவறில்லை. எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன் அதற்கு முன்பே]அதிலிருந்து அவர்களின் மீது மிக மிக அக்கரைகொள்வதும், தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.  அவர்களுக்கு புரிதல் வரும்.நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வரும்வரை,

அவர்கள் என்ன செய்கிறார்கள். யாரோடு தொடர்பு வைத்துள்ளார்கள்.
எத்தனை தோழமைகள் உண்டு. யார் யார் வீட்டு இவர்கள் போவார்கள். யார் யார் இவர்களைத்தேடி வீட்டுக்கு வருகிறார்கள்.எதில் அதிகம் அக்கரை கொள்றார்கள். அது ஏன்?அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது. கணினியில் இருக்கையில் இவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது. தானக மெல்லச்சிரிக்கிறார்களா! கணினியில் எத்தனை அக்கோண்ட் வைத்துள்ளார்கள்.தொலைபேசியில் எந்நேரமும் கையிலிருக்கிறதா? கேம் விளையாடுவதாக சொல்கிறார்களா? எனஅவர்கள் அறியாமலே அவர்களை கண்டும் காணாததுமாய் சிறு நோட்டம் அவ்வளவுதான். படிக்காத பெற்றோராக இருந்தாலும் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் சிறிதளவுக்கூட உணரத்தெரியாதவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படியிருந்தால் அது பொடுபோக்குதனமாகதானிருக்கும்..

தற்கால சூழலில் சிலயிடங்களில் தாயும் தந்தையும் வேலைக்கு சென்றுவிட. அல்லது அவர்கள்கூடவேயிருந்தும் அவர்களை கவனிக்காது விட்டுவிட்டு, எல்லாம் ஒருநாள் அவர்களுக்கு தெரியதானே போகிறது, வருவது வரத்தான் போகிறது, எல்லாவற்றையும் பார்க்கதான் போகிறர்கள் என வெட்டிப் பேச்சி பேசிக்கொண்டு குழந்தைகளின் நிலைகளை, அவர்களின் செயல்பாடுகளை அறியத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதைகூட சிலர் உணர்வதேயில்லை. அறிந்துகொள்ள முனைவதுமில்லை.கன்னியென்றில்லாமல் கல்யாணம். மலடி என்றில்லாமல் மழலைகள். இதுபோல் வாழும் குடும்பங்களை ஏராளம். இதுவல்ல வாழ்க்கை தன்குழந்தை தன்கண் முன்னே சீரழிவதை பார்ப்பது எவ்வளவு அறிவீனம். தாமாகபோய் இடித்துக்கொண்டு நிலை இடித்துவிட்டதென்றும், தெருவில் நடக்கும்போது வழியில் கிடந்த முள்மீது தானே கால்வைத்துகுத்திக்கொண்டு முள் குத்திவிட்டது என முள்மீது குற்றஞ்சுமத்துவதுபோலவும். எதெற்கெடுத்தாலும். தற்காலத்தின்மேல் பழி. காலச்சூழல்மேல் குற்றம்.என அடுதவர்மீதே பழிபோட்டு வாழபழகிகொண்டால்.பின்பு நஷ்டம் யாருக்கு?
.
இன்றைய சூழலில் எப்பக்கம் திரும்பினாலும் நாகரீக மோகம். அந்த நாகாரீகத்துக்கு மோகக்குள் சிக்கிகொள்ளும் காலமாகிவிட்டது. இதில் நல்லதைவிட கெடுதியே மிதமிஞ்சிக்கிடக்கிறதென்பதை அறியாமலே அந்த மோகச்சூராவளியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட முண்டியடித்து நிற்கிறது இன்றைய தலைமுறை. அவர்களிடம் எடுத்துசொன்னாலும், விளாங்காமல் விளக்கைத்தேடிவிழுந்துமடியும் விட்டிலாகவே நினைக்கிறது. அவர்களை நல்வழிப்படுத்த சற்று அல்ல மிக அதிகமாகவே பெற்றோர்கள் சிரத்தை எடுக்கவேண்டியுள்ளது. எடுத்துதான் ஆகவேண்டும் ஏதோ பெற்றோம் வளர்த்தோம். எதிர்வீட்டு, பக்கத்துவீட்டு பசங்க படிக்கிறாங்க அதைவிட நல்ல மார்க் எடுக்கவேண்டும் என அவனெதிரே இவனை மட்டம்தட்டிபேசி இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் போக்கிவிட்டு பின்பு அச்சோ இப்படியாகிபோச்சே அவனால கெட்டான். இவனால கெட்டான் என புலம்பிக்கொண்டிருப்பதில் எவ்விதத்திலும் நியாயமில்லை. நீங்கள் பெற்றடுத்த பிள்ளைகள்தான் உங்களை மீறிவிடாது என்ற எண்ணம் இருக்கலாம் அதை மிகைப்படுத்திவிடாதீர்கள் அதுவே அவர்களுக்கு சிலநேரம் வரம்பு மீறவும், அதன் பாதிப்பால் நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை பாழ்படுத்திவிட்டோமென்ற குற்றவுணர்வையும் அவர்களுக்குள் ஏற்பட வைத்துவிடாதீர்கள்.

பொது இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்லும்போது சற்றல்ல மிகவும் கவனமாக இருங்கள்.அலைபாயும் வயதில் அணையை மீறிடாதவறு அதேசமயம் நம்முடைய செயல் அவர்களை எவ்விததிலும் பாதித்திடாதவாறு அவர்களை கண்கானியுங்கள்.அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையிலில்லை நம்கையில்தான். அவர்களாக முடிவெடுக்கும் காலம்வரும்போது, அது சரியா? தவறா? எனப்பாருங்கள் நல்லதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். கெட்டதென்றால் எடுத்துச்சொல்லுங்கள். பெற்றோராகிய நம்மீது பொறுப்புகள் அதிகமிருக்கு. எனக்கும் திருமணம் ஆகிவிட்டது நானும் குழந்தை பெற்றுவிட்டேன் என்பதற்காக மட்டுமல்ல. மனித வாழ்க்கை மிகுந்த மகத்துவமிக்கது.இது ஒரு அற்புதமான வாழ்க்கை.இதை நாமும் வாழ்ந்து அதை நம் சந்ததிகளையும் சிறப்பாக வாழவைத்துப் பார்ப்பதே நம்முடைய மிகப்பெரிய கடமை. அதையுணர்ந்து செயல்பட்டால் நம்குழந்தைகள் மிகசிறப்பாக வாழ்வதோடு அவர்களுடைய சந்ததிகளையும் சிறப்பானதாக உருவாக்குவார்கள்.


ஒருகுழந்தை நல்லவர்கள் ஆவதும் கெட்டவர்கள் ஆவதும் நிச்சயம் பெற்றோர்களின் பொருப்பில் இருக்கிறது. நம் குழந்தைகளின் மறுபக்கம் மிக தூய்மையானதாகவும் அது பெற்றோர்கள் வளர்த்த பொக்கிஷமாகவும் இருக்கவேண்டும்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் விசயத்தில் மிகுந்த கவனமாகவும். மிகுந்த பொருப்புடனும் அக்கரையுடனும் இருக்கவேண்டியது உங்களின் தலையாயக்கடமை. உலக்கல்வியோடு மார்க்க கல்வியையும் கற்றுக்கொடுங்கள். தூய்மையான மார்க்கத்தை அவர்கள் அறிந்துகொள்ள வழிவகுத்துக்கொடுங்கள். எந்நிலையிலும் தொழுகையை விட்டுவிடாமல் தொழுகச்சொல்லி கற்றுக்கொடுங்கள். அதுவே அவர்களை நழ்வழிப்படுத்த முன்வந்துநிற்க்கும்.ஈமானோடு சேர்ந்த உலகக்கல்வியை ஊட்டுங்கள் அதுவே. அவர்களின் ஈருலக வாழ்க்கைக்கும் ஈடேற்றம்தரும்படி செய்து, உங்களுக்கும் ஈருலகிலும் ஈடேற்றம் கிடைக்க வகைசெய்யும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஈருலகிலும் நற்பதைவியையும். நல்லருளையும். தந்து நம்மை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்து சிறப்பிப்பானாக!ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன்..
300 வருடம் பழமைவாய்ந்த இப்பள்ளி மறுசீரமைத்து மிக அழகியமுறையில் கட்டப்பட்டுள்ளது.
பள்ளியின் திறப்புவிழா மிக மிகவிமர்சையாக  சிறப்பாக நடைபெற்றது. புகைப்படங்களை இங்கே காண்க.  முத்துப்பேட்டைக்கு மற்றுமோர் சிறப்பு இப்பள்ளி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது