நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

 

கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!

நித்தம் நித்தம் புதுக்கனவு!
நீச்சலடித்து பாய்கிறது
நிகழ்கால நிகழ்வுகளோடு!
நீந்தி நீந்திச்செல்கிறது
நிதர்சனமான உண்மைகளை!
நியாப்படுத்தச் சொல்கிறது.

உறக்கமின்றிச் சிலவேளை!
உணவின்றிச் சிலவேளை!
ஊறரியச் சிலவேளை!
ஊமையாகச் சிலவேளை!-

இப்படி

ஒவ்வொரு நாளும் கழிகிறது!
ஓசையின்றி ஒளிர்கிறது!
ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
ஒளிவு மறைவின்றி
ஓடவிட்டுப் பார்க்கிறது!.

கவியென்றுச் சொல்கின்றேன்
ஆனாலது!
கவியா? என்பது தெரியவில்லை
ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!

நீரோடையின் நீருக்குள்ளே!
நினைவுகளை
நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!
நீந்திச்செல்லும் நினைவுகளை-அடி
நெஞ்சுக்குள்!
நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...

இக்கவிதை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை” யில் இடம்பெற்றுள்ளது.
  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில் ந[எ]ம்மைப்பற்றி கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஹாஹா

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது