நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் கிறுக்கு!என்னவென்பேன் பெண்ணவளின்
               வண்ணமதை
கொண்டுவிட்டேன் அவளிடம்
               காதல்போதை
நித்தமவளை நினைக்கின்றேன்
            நெஞ்சமுறுகி
சத்தமின்றி தவிக்கின்றேன்
            சிந்தை சிதறி

முத்துநகை வந்துவிட்டால்
                             போதுமென்பேன்
பித்தனாகி நானுமவள்
               காலடியில்
சொத்துசுகம் அத்தனையும்
                         வேண்டாமென்பேன்
முக்தியாகி நானுமவள்
              முந்தானையில்

பாரிஜாத முல்லையவள்
                                மணமணப்பில்
பாசாங்கு சோலையவள்
                                சிரி சிரிப்பில்
பைந்தமிழின் வார்த்தையிலே
                 வாயடைத்தேன்
பைங்கிளின் பேச்சினிலே
                          மூச்சடைத்தேன்.

அதிகாலையென்பது
                   எனக்கில்லை
அவளைக் காணுமுன்னே
                  அனுதினமும்
உறக்கமில்லை
         அவளைக் கண்டபின்னே

என் நெஞ்சமதை
           எடுத்துக்கொண்டால்
மொத்ததிலே
              அதிலவளின்
நினைவைமட்டும் வைத்து
              தைத்துவிட்டாள்
என் இதயத்திலே

 
பேதையவள் கண்களிலே
                போதை கொண்டேன்
பேரழகி அவளேயென்று
                 வியந்து நின்றேன்
பெண்ணவளின் கைப்பிடித்து

                   காலம்தோறும்-இப்
பிரபஞ்சம் முழுதும்

                 நானும் சுற்றவேண்டும்

 
இப்பிறவி முடிந்தபின்னும்
                    மீண்டும் தோன்றும்
அப்பிறப்புமும் வேண்டும்
                       அவள் எனதருகில்
இணைத்துவைத்து இறுக்கிவைத்த
                  இருமனமும்
இணைபிரிந்திடாது
                இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...


டிஸ்கி//  ராகத்தோடு படித்துப்பாருங்கள். 2. 3. நாட்களாய் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால். ஆங்காங்கே இதுபோல் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது