நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது