நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் மனவானில்


அடியே காதலியே
அன்பான தேவதையே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது