நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொசு[ங்]க்காதே!


பெண்ணுக்கு பெண்ணே
பேரெதிரியாகுமோ!
பொல்லாத பொறாமையால்
பூமியே புதைந்து போகுமோ!

பொருமைக் கடலென்றும்!
பூமித் தாயென்றும்!
சாந்த சொரூபமென்றும்!
சர்வமே நீயென்றும்!

சொல்லிச் சொல்லியே
சாந்தமான நீ
சர்வதிகாரியாகிறாயோ!-பிறரை
சந்தியில் நிறுத்தப்போகிறாயோ!

வீசுதடி விசக்காற்று-உன்
வார்த்தைகளில் வீரியத்தில்
குத்திக்காட்டல் வழியாக!
குடும்பம் குலைக்கும் கருவியாக!
வழியசென்று வம்பிழுக்கும்
வரைமுறையற்ற பேச்சாக!

உள்ளம் கொல்லும் விசக்காற்று
வளைத்து வளைத்து வீசுதடி!
ஊதலில்லாமல் பரவிப் பரவி
உலகையே அழிக்க நினைக்குதடி!

உன்னிணத்தை எப்போதும்
எண்ணனுமோ எதிரியாக
எண்ணிவிட்டு இருந்திடுமோ
உன்னுள்ளம் அமைதியாக!
பொல்லாத பெண்மையாக
பூமியில் வாழனுமா?
பூவோடு நாரும் சேர்ந்து
பொழுதுக்கும் மணக்கனுமா?

பொசுங்காதே பொறாமையில்
பொசுக்காதே பிறைரை தீயில்...

டிஸ்கி// இதை அப்படியே ஆணினத்துக்கும்[அதாவது ஆண்பாலுக்கும்] மாற்றிக்கொள்ளலாம். 
நாங்களெல்லாம் நல்லபிள்ளைங்கப்பா அப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கப்பா ஹா ஹா]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது