நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கனவே கலையாதே! 2

 

இருவிழிகளின் கருவிழிகளுக்குள்ளே
காணும் காட்சியாவும் கண்முன்னே!-அது
கனவாவதும் கலைவதும் தினம் தினம்

இரவுநேர இருளுக்குள்ளே
இனம்புரியாதவைகள் சூழ்ந்திருக்க!
 
அசைந்தாடும் காற்றில் பூக்கள்
அள்ளி வீசும் வாசனைகளை
அமங்கலியான பெண் பூக்களும் நுகர!

மாந்தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவியின் சிறகு படபடக்க!

பொல்லாத குளிருக்கு மயிலும்
போர்வையில்லாது நடுங்க!

கடலுக்குள் கூடிக்கொள்ளும் அலைகள்
கரைக்குவந்து சண்டையிடுக்கொள்ள!

சாலையோர மரங்கலெல்லாம்
சாதி சண்டைகளற்று வரிசையில் நிற்க!

உலகம் உருண்டுவிடாதவாறு
உயர்ந்திருக்கும் மலைகள் தாங்கி நிற்க!

பொட்டலிலும் பாலையிலும்கூட
பச்சை பசேலென இயற்கை காட்சியளிக்க!

வெள்ளிகம்பிபோல் மின்னல் வந்து
விருட்டென்று பயங்காட்டி மறைய!

வெளிர்நிற மேகங்கள்
கருநிற மேகங்களோடு கொஞ்சிக்குலாவ!

வானவில் வட்டமடித்து
வானத்தை அழகுபடுத்த!

வான்மழையை விரும்பி -மண்
வசியம் செய்து அழைக்க!

வாடிய பயிர்களெல்லாம்
வனப்புகண்டு கூத்தாட!

மண்ணிலுள்ள ஜீவன்கள்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாட!

நடுங்கும் குளிர்
நாடியை தொட்டு இசைக்க!

காலைத்தென்றலின்  ரிங்காரம்
காதுகளுக்குள் இதமாய் கேட்க!

மிதமான சூட்டோடு
மேனியை மெல்ல மீட்டிய சூரியன்
சுண்டி இழுத்தும் 

சுறுசுறுப்போடு எழும்பாமல் -ஏனோ
சுணங்கிக்கொண்டு மீண்டும் 

கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
கனவே கலையாதே! -இயற்கைக்
கனவை கலைக்காதேயென
கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது