நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அத்தனைக்கும் ஆமெனில்...


ணந்துவந்தவளின் மனதையறிந்து
மாராப்புக்குள் ஒளிந்திருக்கும் மனத்திற்குள்
மறைவாக ஒளிந்திருக்கும்
மங்கையவளின்
மனயெண்ணங்களை உணர்ந்ததுண்டா!

ன்னோடு உண்டு, உன்னோடு உறங்கி
உன்னோடு அழுது, உன்னோடு சிரித்து
உனக்காகவே வாழவந்திருக்கும்
உள்ளத்தின்
உணர்வுகளை புரிந்ததுண்டா

னைவியானவளின் மகிழ்ச்சியில்
மர்மத்திரை விழுந்து
மூடிக்கிடக்கையில்
மனதிற்கு இதம்கொடுத்து
மனசங்கடத்தை விலக்கியதுண்டா!

டலும் கூடலும் வரவும் செலவும்
உண்பதும் உறங்குவதுமட்டுமே
வாழ்வன்று
உன்னோடு ஒட்டி உறவாடும்
உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
உள்ரங்கத்தின்
ஓசைகளை கேட்டதுண்டா!

றைக்கா ரகசியங்கள் ஏதுமின்றி
மனதுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமின்றி
மணமுடித்த துணைவியோடு
மனமொத்த வாழ்க்கை
வாழ நினைத்ததுண்டா!

பெண்மனதையறிந்து
புன்னகையை சிந்தி
பொன்மானின் நெஞ்சம்
ஆனந்தமடைய
பூக்களின் மென்மையாய்
பூபளத்தின் தன்மையாய்
பாசங்களை பகிர்ந்ததுண்டா!

சுடுசொற்கள் அள்ளிவீசி
சுருட்டிப்போடும் பேச்சு
சுமைகளாக மாறி அவளைச்
சுற்றிக்கொள்ளும்போது
ஆறுதலான ஓரிரு வார்த்தை சொல்லி
அவளின் அகத்தை மகிழ்வித்ததுண்டா!

முகம்பார்த்தறிந்து
அவள் மெளனத்தின்
மொழிகள் புரிந்ததுண்டா!
கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
கேட்காமல்
அவளின் தேவைகளறிந்ததுண்டா!

ன்ன வாழ்க்கையிது
என்றெண்ணிவிடாவாறு
எண்ணங்கள் விதைத்ததுண்டா!
என்றுமே இதுபோன்றொரு
வாழ்க்கைவேண்டுமென
எண்ண வைத்துண்டா!

ரு மனங்கள் இணைந்து
இளமனங்களுக்குள்
இன்பம் நிலைத்திருக்கா!
இதயங்கள் இணைந்தபின்னே
இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!

அத்தனைக்கும் ஆமெனில்,,,

ல்லத்தில் இனிமைக்கும்
இன்பதுக்கும் குறைவேது!
ல்லையெனில்
இல்லறத்தில் என்றுமே நிறைவேது!

டிஸ்கி// எனது இக்கவிதை முதுகுளத்தூர்.காம் மில் வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது