நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நாயா? நானா?

அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!

அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!

பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!

பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!

நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே

பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?

உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!

அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...

டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..

அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை  கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..

இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை


ஏ.. நிலவே

பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.


துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.

ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது