நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாழ்க்கையின் வ[லு]லி...

வானத்திற்க்கு கீழ்
வீட்டைக்கட்டிவிட்டு

வான் மழைக்கும்
வீசும் புயலுக்கும்
வருத்தும் துன்பத்துக்கும்
வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா?
விவாதிக்கிறது மனம்

வாழ்க்கை வலியுடையது
வளையும்போதும் நிமிரும்போதும்
வலிக்கிறது
வேதனை வருத்துகிறது

வாஞ்சையோடு வார்த்தைகள்
ஆறுதல் அளித்தபோதும்
அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படுகிறது

கருவறையில் இருந்தவரை
கவலைகளில்லை கனவுகளில்லை
கண்விழிக்க தொடங்கியதும்
கவலைகளும்
கனவுகளும் விடுவதாயில்லை

வலியுடைய வாழ்க்கையை
வலுவுடையதாக்குவது
மனவலிமையிலிருக்கிறதென
வரமறுக்கும் தைரியத்தை
வம்புசெய்து வரவழைத்துகொண்டேன்

வருவது வரட்டும்
வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
வருவது வரட்டும்
தேற்றிக் கொள்கிறேன் என்னை...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது