நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இன்னுமா தயக்கம்!.


விவேகம் கொள்ளடி வீரமங்கையே
வீசும் காற்றிலும் விளைத்திடு உன்னையே!
வாஞ்சைகள் என்றுமே உன்னிடம் தஞ்சமே
வாசனை பூக்களாய் பாசமும் கொள்ளுமே!

பெண்ணே ஒருபோதும் தற்பெருமை கொள்ளாதே!
பெரும்புயலாய் மாறி தாழ்த்தும் சினம் கொள்ளாதே!
தெய்வமாய் உனை போற்றவும் விடாதே!
தெருவிலே உனை தூற்றவும் விடாதே!

அட்சதை போடுவதற்க்கு தட்சணை எதற்க்கு
வரதட்சணைகேட்டும் வரன்களை ஒதுக்கு
அதுக்கு துணைபோகும் பெண்ணையும் விலக்கு
அன்றே உடைந்திடும் ஆணவ சிடுக்கு

எழுதிடு எழுதிடு உண்மை நீதியை
எழுந்து நடைபோடும் சத்தியதின் நேர்மையே!
சாய்த்திடு சாய்த்திடு சீரழிக்கும் சாதியை
சந்ததிகளாவது ஏற்றட்டும் சிறந்த ஜோதியை!

தன்னம்பிக்கையோடு! தரிசிலும் கல்வி விதைபோடு
தந்திடுமே உனக்கு! தரணியெங்கும் நற்பெயரு
வாழ்க்கைதன்னை உணர்ந்து! வாழ்ந்திடப் பாரு
வழிகள் பல திறந்துகொண்டு! வாழ்த்திடுமே நூறு

தலைகுனிந்து பரந்த பூமியை நோக்கு
தந்திடுமே அது உனக்கு பல எடுத்துக்காட்டு!
தைரியம்கொண்டு திறமையை நாட்டு
     தடம்மாறிடாது உன் தலைநிமிர்ந்துக் காட்டு!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது