நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓடுகாலி!கன்னியர் காதலென்ற பெயரில்
கலிசடைப் பயல்களோடு
கண்காணா தூரமாகி
கடைசியில் கதிகலங்கி நிற்பதேன்?

மாலையிட்ட மங்கையும்
மதிமயங்கும் காலமாகி
மணந்தவனை விட்டுவிட்டு
மாற்றானோடு ஓடிப்போய்
மண்புழுவாய் ஆவதேன்?

மங்கையர் திலகமே!
மங்கையர் திலகமே!
மானிட வாழ்க்கையென்ன
மண்ணில் நிரந்தரமா?
சீர்கெட்டு போனபின்னே -உனக்கு
சிறப்புகள் வந்திடுமா?

மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவைக்கண்டு
மதிமயங்கிப் போகலாமா?
உன் மானத்தை
மாற்றானுக்கு விலைபேசலாமா?

கன்னியே உன்னை
வளர்க்கும் வரைக்கும்தான்
உனக்கு உன் பெற்றோரா?
நீ வளர்ந்துவிட்டால் அவர்கள் உனக்கு
ஒன்றுக்கும்
உதவாத உதவாக்கரையா?

பெற்றோர் வார்த்தைகளென்றும்
பிள்ளைகளுக்கு பொல்லாததாகுமா? -உன்
பொன்னான பொற்காலத்தை அது
பொய்யாக்கி பொசுக்கிடுமா?

கல்யாணமான மங்கையே!
காசு காய்க்கும் மரமா?உன் கணவன்
 கடல்கடந்து கானகதேசத்திலே
காய்கிறான் தேய்கிறான் உனக்காகவே!
எண்ணை தேசத்திலே
எரிகிறான் கருகுகிறான் குடும்பம்காக்கவே!

அவனின்
அமானிதபொருளல்லவா? நீ
ஆகையால் உன்னை
பாதுகாத்துக் கொள்ளத் தவறிடாதே
பாதகச்செயல்களெதும் புரிந்திடாதே!

ஓடுகாலி என்ற பழிச்சொல்லை
ஒருக்காலும்  வாங்கிடாதே!
உத்தமியென்ற உன் நடத்தையை
ஊர் உலகம் தூற்றச் செய்திடாதே!

இது மாயக்கண்ணாடிபோன்ற உலகமடி
இதில் மனிதர்கள் யாவரும் நிழலுருவமடி
நிழல்கள் கண்டு  மகிழ்ந்திடாதே!
இதனால்  ஒருபொழுதும்
 நிம்மதி என்பதே கிடைத்திடாதே!

இக்கவிதை ”இஸ்லாமியப் பெண்மணி” யில் ஓடிப்போவது ஏன்? எதற்காக? என்ற கட்டுரைக்கு எழுதியது பதிவின் நீளம் கருதி இதனை அதில் சேர்க்கவில்லை.. அதனால் அதனை இங்கே பதிந்துள்ளேன். முடிந்தால் இங்கு வரும் நெஞ்சங்கள் கொஞ்சம் அங்கேயும் எட்டிப்பாருங்களேன் முடிந்தால் கருத்துகளும் பதிங்களேன்..அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது