நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மேடையேறிய விளையும் பயிர்.

கடந்த 8-4 2011அன்று மாலை ஸ்டார் இண்டர்நேசனல் ஸ்கூல் அரங்கத்தில்
தமிழ்துளி  யின். தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி நடந்தது.அதில் குழந்தைகளின் பல்வேறு நிழச்சிகளும்.பேசுப்போட்டிகளும் நடைபெற்றது அதற்காக  எங்களுக்கும் அழைப்புவந்தது. நிறைய குழந்தைகள் கலந்துகொள்கிறார்கள் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்டது வரும் வெள்ளியன்று நிழச்சியென தகவல்தந்தார் இந்த அமைப்பின் தலைவி ப்ரியா. பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தங்கள் மகனையும் பேசச்சொல்லுங்கள் என்றார். 
என்னபேசச்சொல்வது அதுவும் கடைசிநேரத்தில். சரி ”கவிதை வாசிக்கிறாயா என்றேன்” சரி மம்மி சொல்லிதாருங்கள் சொல்கிறேன் என்றார்”. சொல்லிகொடுத்ததும் உடனே மனப்பாடம் செய்துகொண்டார்.
தமிழ் எழுதப்படிக்கவே தற்போதுதான் கற்றுவருகிறார். இருந்தபோதும்,சொல்லிகொடுத்ததை அழகாக வாசித்து வந்தார்.

பேராசிரியர் பர்வின் சுல்தானா அவர்கள் சிறப்புவிருந்தினராக வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சு மிக அருமையாக இருந்தது.
எதிர்பாராதவிமாக நம்ம ஆசியாக்காவும் வந்திருந்தாங்க.ரொம்ப சந்தோஷம் சந்தித்திதுக்கொண்டதில் கொஞ்சநேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
அப்புறம் இன்னுமொரு விசயம். எங்கள் மகனார் தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்துள்ளார். அவருக்கு நிறைய எழுதனுமாம். சரியென என் அக்கோண்டில் ஒரு பிளாக் கிரியேட்டிவ் செய்துகொடுத்தேன். வரும் கருத்திற்கு பதில்கொடுத்தால் அன்புடன் மலிக்கா என வருகிறதே மம்மி.அதனால் எனக்கு தனியாக ஒருபிளாக் கிரியேட்டிவ் செய்துகொடுங்கள் என்றார். அப்படியா நாம் ஏன் அவருக்கு  குறுக்கே நிற்கனுமுன்னு தனியாக ஒரு பிளாக் திறந்துகொடுத்துள்ளேன். அந்தகாலத்து மனிதர்களையும், மற்றும் அவர்களின் வரலாறுகள், செயல்பாடுகளை மிகவும் விரும்பிபடிக்கிறார்.எதனால். எப்படி.  இவர்களுக்கு தனிச்சிறப்பு வந்தது. என்ன செய்துள்ளார்கள்.அதற்காக அவர்கள் எவ்வளவு சிரமங்கள் மேற்கொண்டிருப்பார்கள் என ஆராய்கிறாராம்.
இதில் முக்கிய விசயமென்னவென்றால் அவர் எழுதும் மொழி நமக்கு புரியாது. நான் மச்சானிடமும். அவரிடமும்தான் கேட்டுகொள்வேன். என்னா மொழி  அதாங்க இங்கிலீஸூஊஊஊஊஉ.
அவர் எழுதுவதற்கு தாங்கள் அனைவரின் ஊக்கமென்னும் கருதுக்களையும் சொல்வதோடு உங்களுக்கு தெரிந்தவைகளையும் அவருக்கு புரியும்படி சொல்லிக்கொடுங்கள். இதோ அவரின் வலைதளம். சென்று பார்த்துவிட்டு அன்பைச்சொல்லுங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது