நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னை ஏன் கொல்றீ[ன்னீ]ங்க!




 என்னை ஏன் கொல்லுறீங்க.

இக்கேள்வி கதறலோடு கருவறையின் கல்லறைக்குள்ளிருந்து எழுகிறது.பிறர் காதுக்களுக்கு கேட்காமல் உருக்குலைத்தவரின் உள்ளங்களைமட்டும் ஆட்டுவிக்கும் கேள்வியது ! இவ்வுலகைக்காண ஆவல்கொண்டு உணர்வுகளின் ஊசலாட்டத்தால் உலகக் கனவுகண்டு ஏங்கித்தவிக்கும் சிசுகள் தன்னை தன் தாயின் கருவரைக்குள்ளேயே [மன]சாட்சியில்லாமல் கொல்லும்போது எத்தவரும் புரியாமல்! என்ன ஏது என்று அறியாமல்! தன்னுயிர் பறிக்கப்டுவதை அறிந்தும் அலறமுடியாமல் அடங்குகிறது அதன் ஆத்மா!

இப்படி கருவிலேயே கொல்லுவதற்க்கு பெயர்தான் அபார்ஷன் அதாவது கருகலைப்பு. அது இன்றயை காலத்தில் மிக எளிதாகிவிட்டது. இதற்காக இக்காறியததை செய்வோர் சொல்லும் காரணங்களோ உப்புச் சப்பற்றவை. ஒரு சிலரைத்தவிர [அப்படிபட்டோர் மிக மிகவும் குறைவு]
அற்பகாரணங்களுக்காவும், சொற்பநேர சுகங்களுக்காகவும், தன்னுள் உண்டாகும் உயிரை மிக சர்வசாதரணமாக கொன்றுவிட்டு மண்ணில்வாழும் ஜென்மங்கள் இன்றைக்கு ஏராளம்.
வருடத்திற்கு 60.000 சிசுக்கொலை நடக்கிறதாம். அதில் 2.0000 பெண்கள் உயிரிழக்கிறார்களாம் இது ஆய்வரிக்கை இதைவிட கூடுதலாகத்தான் நடக்கிறதாம்.. அதுவும் இந்தியாவில்..  
என்ன ஒரு கொடுமை. உயிரைக்கொல்வது இப்படி மலிவாகிவிட்டதே!

இக்காலநேரம் சரியில்லாத தருணத்தில் குழந்தை தரித்துவிட்டது[அதுவாகவா தரித்தது]
கணவர் இக்குழந்தை வேண்டாமென்கிறார். எப்போது அதைச்சொல்வது கூடுவதற்கு முன்பு யோசிப்பதில்லையா? கலந்தாலோசிப்பதில்லையா? இல்லை கருத்தரிக்காமல் எவ்வளவோ வழிகள் இன்றைய நவீன காலத்தில் இருக்கு அதைபற்றி ஒன்றும் அறிவதில்லையா? எல்லாம் தெரிந்தும்
புரிந்தும் கூடிக்குலாவிவிட்டு. ஒன்றுமறியா உயிரைக்கொல்வது எவ்விதத்தில் நியாயம்?

கலைப்பதற்கான காரணங்களைப் பாருங்கள்..
இக்குழந்தை வந்தால் அம்மா அம்மாவுக்கு குடும்பத்துக்கு ஆகாது?
இக்குழந்தை பிறந்தால் சொகுசு வாழ்க்கை வாழமுடியாது?
இக்குழந்தை பிறந்தால் தன்னுடைய நோக்கங்கள் நிறைவேறாது
[அதாவது எம் பி பி எஸ் படிச்சிட்டாங்களாம் பி ஹெடி பண்ணனுமாம் அச்சமயத்தில்
இக்குழந்தை வந்துடுத்தாம். அதனால் தன்னுடைய படிப்புக்கு பாதிப்பாம். தான் வெளிநாட்டுப்படிப்புக்கு வந்ததின்நோக்கம் நிறைவேறாது நின்றிடுமாம் அதுக்காக!]
இதேபோல் வெவ்வேறு தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவும்.
இக்குழந்தையும் பெண்குழந்தையாகிவிட்டால் என்பதற்காகவும்!
பொருளாதாரத்தை சமாளிக்க முடியாது என்பதற்காகவும்
குழந்தை ஜனித்த 3.வாரத்தில் ஜோதிடம் கணித்து அதில் அதில் சொல்லப்படும் காரணங்களுக்காவும்!
ஒரு குழந்தையை வளர்க்கவே சிரமமாக இருக்கும் பொழுதாம்!
சிலர் தெரியாமலே உண்டாகிவிடுவாங்களாம் அதுக்காகவாம் [அச்சோ அச்சோ]
இப்படி தன்னுள் உருவான ஒரூயிரை ஈவு இரக்கமின்றி எந்த ஒரு அச்சமுமின்றி கலைக்க நினைக்கிறார்களே!

இவர்கள் ஈருடல்கள் கலப்பதற்கு முன்னால் ஒரு நொடி யோசித்தால் இப்படி உயிர்பலிகள் உண்டாகுமா? சிசுக்களில் உடல்கள்தான் சூரையாடுபடுமா?
எதுவுமற்ற அற்ப காரணங்களுக்காகவும் சொற்ப விசயங்களுக்காகவும் ஒரு உயிரைக்கொல்லுவது குற்றமில்லையாம். இது எந்த விதத்தில் நியாயமுங்க!

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவு அளிப்போம் அவர்களை கொல்வது மாபெரும் குற்றமாகும்![இறைமறை குர் ஆன் 17:31]

எந்த ஒரு ஜீவனும் அதன் சக்திக்குமீறி சோதிக்கப்படபோவதில்லை. நீங்களாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதுதான் சரியென வாதிடுவது எவ்விதத்தில் சரி. இறை நம்பிக்கை உள்ள யாரும் இத்தவறை செய்ய மாட்டார்கள். அறியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்படும். பாவமென்று அறிந்தே! வேண்டுமென்றே காரணமின்றி செய்யும் தவறுக்களுக்கு மன்னிப்பேயில்லை

ஏன் யோசிக்க மறுக்கிறா[றீ]ர்கள் அதிலும் படித்தவர்கள்தான் இந்த தவறை பெரும்பாலும் செய்கிறார்கள். அவர்களுக்கு என்னவோ இந்தபூமி நிரந்தரம் இந்த வாழ்க்கை  நிரந்தரம் இந்த சொகுசு நிரந்தரம்  நினைகிறார்கள். இவர்களெல்லாம் நிச்சயம் ஒருநாள் கைசேதப்படுவார்கள்.
ஒருசிலர் திருமணமானவுடன் முதல் குழந்தையை கலைத்துவிட்டு பின்பு குழந்தையே இல்லாமல் ஏங்கி தவிக்கிறார்கள். ஏன் முதல் குழந்தையை இப்படி செய்தீர்கள் என்றால் அச்சிவ்மெண்ட் பண்ணமுடியாது. எதையாவது வாழ்க்கையில் சாதித்துவிட்டு சம்மாத்தித்து சேர்த்துவிட்டுதான் குழந்தை என்கிறார்கள். ஒன்று கேட்கிறேன் இதையெல்லாம் செய்துமுடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்களேன். ஏன் அப்படிசெய்வதில்லை இளமை பறிபோய்விடும் அழகு போய்விடும் 50 வயதில் திருமணமுடித்து என்ன செய்யமுடியும் என்றுதானே! ஆக தங்களின் தேவைகள் அந்த அந்த நேரத்தில் நடந்தேரனும் ஆனால் அது பல உயிர்களைக்கொன்றாவது என்று நீங்கள் நினைப்பது என்னங்க தர்மம்.

சிலருக்கு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கிறது. அதனால் சிலர் அடுத்தகுழந்தைகளை அழித்துவிடுகிறார்கள் டாக்டரின் ஆலோசனையின்றி. இறைவனை மறந்துவிட்டு.. சிலர் இதே நினைப்பிலும் இதுபோலாகிவிடுமோ என்று நினைத்தே இதனை செய்கிறார்கள். குறைபாடுகள் இல்லாத மனிதர்கள் உண்டா பூமியில். எல்லாம் சரியாக இருந்தும் இரும்பு மனம் கொண்டிருப்போரை எவ்வளோ பார்த்திருக்கிறோம். ஒன்று சரியிருந்தால் மற்றது சரியிருக்காது. சரி இப்படி வைத்துக்கொள்வோம் நன்றாக பிறக்கும் குழந்தை 3 வயதிலோ அல்லது 13 வயதிலோ  ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டுவிடுகிறது அப்போது என்ன செய்வீர்கள். இந்த சனியன் வேண்டாம் இதனால் நமக்கு தொந்தரவுதான் என கொன்று விடுவீர்களா? செய்தாலும் செய்வார்கள் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை..

இப்போது மிகவும் ஸ்டேடஸ்[கெளரவம்] பார்கிறார்கள் பணம் மட்டுமே குறிக்கொளாய் வாழ்கிறார்கள் நாம் சம்பாரிப்பது எதற்கு? நம்முடைய வாழ்க்கை எதற்க்கு? எத்தனை சம்பாத்திதபோதும் பசிக்கும் நேரத்தில் பணத்தை புசிக்கமுடியுமா. அல்லது இதே கெளரவம் ஒரு கவலம் உணவாக மாறுமா? தன்னுள் வளர்ந்த ஒரு உயிரை அடுத்தவர்களுக்ககவும். அல்லது தன்னுடைய சுகங்களுக்காகவும். அழித்துவிட்டு, அதற்க்கு ஒரு சப்பைகட்டுகாரணத்தை சொல்லிக்கொண்டு பூமியில் திரிகிறோமே!  உணரமாட்டோமா? உணர்ந்து வருந்தமாட்டோமா?

நான் என்குழந்தை அழிக்கும்போது யாருக்கும் தெரியாமல் அழுதேன். கவலைப்பட்டேன் இன்னும் பட்டுக்கொண்டேயிருக்கிறேன். இப்படியெல்லாம் சொல்லி உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொள்ளாத்தீர்கள். பல உயிரை எடுத்தவனுக்குக்கூட மரணதண்டனை கூடாது என ஆங்காங்கே போர்க்கொடி தூக்கும்போது. ஒன்றுமறியா சிசுவை உங்களின் சுயநலத்திற்காக! உங்களின் உடல்சுகங்களுக்காக! உங்களின் அந்தஸ்துக்காக. உங்களின் அச்சிவ்மெண்டுக்காக! கொல்வது பாவமில்லையா? உங்கள் மனசாட்சி உங்களை தூங்கவிடுமா? ஒருவாய் சோறு அள்ளி உண்ணும்போதும் உறுத்தாதா? போனவருடம் கலைத்தோமே அது இன்றிருந்தால் நம்மெதிரில் இருந்து நம்மோடு ஓரிரு சோறாவது எடுத்துண்ணுமே என்று குத்திக்காட்டாதா? ஒன்றைச்சொல்ல வெட்க்கப்படுகிறேன். தாய்மையின் மகத்துவத்தை உணர்ந்து அதனால் அடையும் ஆத்மதிருப்தியை அறிந்த என் [பெண்]னினமும் இதற்க்கு ஒத்துக்கொண்டு ஒத்துழைத்து செயல்படுவதை நினைத்து.  தயவுசெய்து வெற்றுக்காரணங்கள் சொல்லாதீர்கள். போலிக்கண்ணீர் வடிக்காத்தீர்கள்.. இப்படி நான் சொல்வது தவறென்றுதான் படும் ஆனால் சிந்தித்துப்பாருங்கள் உங்களை நினைத்து நீங்களே வெட்கித்தலைகுனிவீர்கள்..

ஒரு தம்பதியர் சொல்கிறார்கள். எங்கள் குழந்தை அதை வேண்டுமென்பதற்க்கும் வேண்டாமென்பதற்க்கும்[எப்போது உண்டாகி 5 வாரங்களானபிறகு] எங்களுக்கு உரிமையிருக்கு அது எங்க சொந்த விசயம் இதில் அடுத்தவங்க புத்திசொல்லக்கூடாதுன்னும். எங்களின் அக்கால தேவைகளுக்கு தடையாக அக்குழந்தை இருக்குமுன்னு அதை கருவில் அழித்தோம் என்று. அடப்பாவிகளா!. யாருக்குத்தான் தேவைகள் இல்லை.அளவுகடந்த தேவைகள் அனைவருக்கும் இருக்கிறது. உன் குழந்தையென்றபோதும் அதைக்கொள்ள உனக்கு உரிமையில்லை. உனக்கு சுமக்கமட்டுமே கட்டளை ஒருபோதும் அதை அழிக்க  அல்ல..

சுகம் இன்பம் மட்டுமே வாழ்க்கையென்றால் அது வசந்தத்தை தந்திடுமா? அல்லது அது வாழ்க்கையாகதானிருக்குமா?
பூமிக்கு வந்துவிட்டோம் இதில் என்ன என்ன அனுபவிக்கவேண்டுமோ அனைத்தையும் அனுபவித்துதான் செல்லனும். எல்லாருக்கும் இறைவன் எல்லாவற்றையும் தந்துவிடுவதில்லை. வாழப்போகும் வாழ்க்கை கொஞ்சநாட்கள்தான் அது நம்மிள்ளவர்களுக்கும் நம்மைசுற்றியுள்ளவர்களுக்கும் பயனாக இருக்கனும். வெற்று வாழ்க்கை வீராப்பு வாழ்க்கை கெளரவ வாழ்க்கை இதெல்லாம் வீணுங்க! தன் குழந்தையையே பாரமென்று நினைக்கும் நாம் எப்படி பிறரின் பாரத்தையோ அல்லது துயரைத்தையோ பங்கிட்டுக்கொள்வோம்.

குழந்தையில்லாவரிடம் கேளுங்கள் அதன் வேதனையையும் வலியையும். ஒரு குழந்தை போதுமென்று கருத்தடை செய்தவர்கள் இரு குழந்தை போதுமென்று கருத்தடை செய்தவர்கள் தங்கள் குழந்தைகளை இயற்கையின் ஏதோ ஒன்றுக்கும் ஆக்ஸிடெண்ட் என்ற பெயருக்கும் அள்ளிக்கொடுத்துவிட்டு அலறிக் கதறுவதை அதன்பின் அவர்கள் வாழ்க்கை சூன்யமாகி நிற்பதையும் கண்ணால் கண்டிருக்கிறோம். செல்வம் கோடி கோடியாக குவித்துவிடலாம் ஆனால் சென்ற உயிர் திரும்பிவருமா?கொன்ற உயிரை மீண்டும் கொண்டுவரயியலுமா?

நிரந்தர தடை செய்துவிடாமல் தற்காலிக தடைகள் எவ்வளோ வந்திட்டது. அதனை சரியான முறையில் கையாண்டு! உங்களை நீங்கள்[பின்வரும் நோய்களிலிருந்து] பாதுகாத்துக்கொண்டும். சிசுக்களை சிதைக்காது கருவறை கல்லறையாக்காது உயிர்களை வாழவிடுங்களேன் அல்லது உயிரை பலிக்கொடுக்காமல் தடுங்களேன்..
============================================================

பெண் டாக்டர்களுக்கு எனது முக்கிய வேண்டுகோள். சேயால் தாயிற்கு ஆபத்து. அக்குழந்தை பூமிக்கு வந்தால் அதற்க்கு துயரம். என தகுந்த காரணமின்றி வருவோர்களுக்கு அப்பார்ஷன் என்னும் கருக்கலைப்பு என்னும் உயிர்கொலை செய்யாதீர்கள். நான் செய்யாவிட்டால் என்ன அடுத்தவர் செய்வார்  அதனால் நான் செய்கிறேன் என்றுமட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். காசு இன்று வரும் நாளை போகும். உயிர் அப்படியல்ல இது நான் சொல்லவேண்டியதில்லை.. மனசாட்சியோடு! இன்றல்லது நாளை அனைத்திற்க்கும் உங்களைப்படைத்த இறைவனால் கேள்விகேட்கப்படுவீர்கள் என்ற உள்ளுணர்வோடு செயல்படுங்கள். இப்படி ஒவ்வொரு டாக்டரும் செயல்பட்டாலே இச்சிசுக்கொலைகளை குறைந்தபட்சமேனும் தடுக்கப்படும்..
===================================================================
என்னினமே![பெண்ணினமே!] உங்களுக்காக ஒரு வேண்டுகோள். உங்கள் வாழ்க்கை அதில் யாரும் வந்து பங்குபோட அனுமதியில்லை. அதன் முழுசாரமும் உங்களைச் சார்ந்ததே! உடல்கள் சேர்ந்தே உயிர்களை உண்டாக்குகிறது .வெரும் உணர்ச்சிகளை கழிப்பதற்கல்ல நீங்கள். உணர்வுகளை விளைவிப்பதற்க்கும் தயாராருங்கள். கணவர் சொன்னார். மாமியார் சொன்னார். சாமியார் சொன்னார். என்றில்லாமல் நீங்களாக முடிவெடுங்கள் தேகங்களின் தேடுதலுக்கு நீங்கள் தேனாகிவிட்டு. உங்களுக்குள் உருவான உயிருக்கு விசத்தை கொடுத்துவிடாதீர்கள். கூடும்முன்பு கோடிடுங்கள். குடும்பமும் சிறப்பாகும் வாழ்க்கையும் செழிப்பாகும்..
=======================================================
சிந்தித்து சங்கமிக்கட்டும் உடல்கள்
சிதையாமல்
காக்கப்படட்டும் உயிர்கள்
சாந்தியையும்
சமாதனத்தையும்
சந்தோஷமாக்கிக்கொள்ளட்டும்
உள்ளங்கள்
சலிப்படையாத
வாழ்க்கை வாழட்டும் இல்லறங்கள்..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது