நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாதுமாகி…...

அனைத்து அன்னையர்க்கும்
[அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
 என்மனமார்ந்த
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!



அன்னையவள் மடிதனிலே
                              அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே 
                    மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில்
                       வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக
                       கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -
                தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும்
                        சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே
                        அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே
                       அன்னையென ஆனாள்
அன்னையவள் நெஞ்சினிலே
                       அன்பொழுகக் கண்டேன்
அணைத்து எனை நிற்கயிலே
                      அசையாது நின்றேன்
நான் வளரும் வேளைதனில்
                       வேலியாய் நின்றாள்
நம்பிக்கை ஊட்டியே
                    எனைக் காத்துக் கொண்டாள்

காயங்கள் நான்படவே
                           ரணமாகிப் போனாள்
கண்ணுக்குள் எனைத்தாங்கி
                   கலங்காமல் பார்த்தாள்
காலங்கள் கடந்திடவே
                     நான் தாயாகிப் போனேன்
கண்ணிமைக்காமல் அப்போதும்
                      எனைப்பார்த்துக்கொண்டாள்
அன்னையவள் காலடியில்
                        சொர்க்கமதை உணர்ந்தேன்
அதையுணர்ந்த போதினிலே
                       அகிலத்தை மறந்தேன்
யாதுமாகி  எனக்காக
                      தன் வாழ்க்கை வாழ்ந்தாள்
சேயாகி நானுமதை
                    உணர்ந்திடவே வைத்தாள்

தாயாக  எனைத்தாங்கி
                  செய்தஅத்  தனையும்
தள்ளாட்டம் வரும்
                வயதில் முடியாமல் போகும்
சேயாக நானிருந்த போதும் –
              செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
தாயாகி நானும்....

டிஸ்கி// ராகத்தோடு படியுங்கள் ரம்மியமாய் இருக்கும்.
ஒருவார உடல் இன்னல்களுக்கு பின் புத்துயிர்தந்தது அன்னையை நினைத்து எழுதிய கவிதை..
இன்று ஒருநாள் போதுமா? அன்னையை வாழ்த்த!
வாழும் காலம்தோறும் மறந்திடாத பாசம் அன்னையின் அன்பானநேசம் மட்டுமே!
அது சரி தந்தையர்கள் தினம் எப்போது?//

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது