நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


எல்லாம்வல்ல இறையோனே!
எங்களைக்காக்கும் ரஹ்மானே!

மண்ணால் ஆதம் நபியைப்படைத்து
அவருக்குள்ளிருந்து இவ்வுலகிலுள்ள
அனைத்து மனிதர்களையும் வெளிப்படுத்தி

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு
மாநபிகளை மக்களுக்குத்தந்து அவர்களின்மூலம்
அனைவருக்கும் அறிவுறைகளையும்தந்தாய்

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராகீம் [அலைஹிஸ்ஸலாம்]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை அறியவைத்து
மனிதர்களின் பொருமைக்கும் இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத்தந்து
மகத்துவமிக்க மாபெரும் அருளாளன் ஆனாய்

இப்ராகீம்நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும்நாள்வரை
இம்மியளவும் இம்மக்கள் மறந்திடாதவாறு
இத்தியாகத்திருநாளாம்
ஹஜ்ஜுப்பெருநாளை எங்களுக்குத் தந்தாய்

புனித இடத்திற்கு இறுதிக்கடமைக்கு
சென்றுள்ள மக்கள் சரம்சரமாய் கண்ணீர்மல்க
எங்களின் ஹல்பும் உருக எங்களுக்கும்
புனிதபயணத்திற்கு ஒருவாய்ப்பளிக்கச்சொல்லி
விசும்பி வேண்டி நிற்கிறோம் எங்கள் இறைவா!

இப்பெருநாளின் பொருட்டாய் இவ்வுலகிலுள்ள அனைத்து உள்ளங்களிலும் சாந்தியும் சமாதானமும் இறைவனின் அருளும் உண்டாவதாக!
உலகிலுள்ள அனைவருக்கும்
 தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது