நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உணர்ந்துபார்!உனக்குள் இருப்பதென்ன!
உன்னையே கேள்விகேட்க
உனக்கே தயக்கமென்ன!

உணர்ந்துபார்!
சந்தோஷங்களை
சந்தேகங்களுக்கு இறையாக்குவதை!

உணர்ந்துபார்!
உயிர்க் காதலை
உடல்காமத்திற்க்கு பலியாக்குவதை!

உணர்ந்துபார்!
உயர்ந்த நட்பை
உப்புசப்புக்காக ஒதுக்குவதை!

உணர்ந்துபார்
உன்னத உறவை
உதாசீனப்படுத்தி உதறுவதை!

உணர்ந்துபார்!
ஒப்பற்ற உதவிகளை
உணராது இருப்பவைகளை!

உணர்ந்துபார்!
ஒன்றுமில்லாதவைகளுக்கெல்லாம்
ஒரேடியாக அலட்டிகொள்வதை!


உணர்ந்துபார்!
வறட்டு கெளரவத்திற்கு
வாழ்வை தொலைப்பதை!

உணர்ந்துபார்!
பிறரை வசைபாடியே
பொழுதுக்கும் வம்பளப்பதை!

உணர்ந்துபார்!
விட்டுகொடுக்க முடியாமல்
வெட்டிக்கொண்டேபோவதை!

உணர்ந்துபார்!
கேவலம் பாராது
கேலிக்கூத்து ஆடுவதை!

உணர்ந்துபார்!
தனது அகத்தை உணராது
பிறர் முகத்தை பழிப்பதை!

உணர்ந்துபார்!
இன்னெதென்றே அறியாது
எப்படியோ வாழ்வதை!

உணர்ந்துபார்!
ஒழுக்கமில்லாது
புழுக்கையாய் அலைக்கழிவதை!


உணர்ந்துபார்!
ஒவ்வொரு நொடியும்
ஓய்வின்றி நகர்வதை!

உணர்ந்து சரிபார்!
உன்னைத் திருத்திக்கொள்ள
உன்னுள்ளத்தில் தயக்கமென்ன!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது